விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 18, 2015
இராமாயணம் ஒரு பெருங்காவியம். அதில் இராவணனிடமிருந்து சீதையை மீட்க இராமன், இலங்கை மீது வானரப் படையுடன் படையெடுத்தார். இராமனின் வானரப்படைக்கும், இராவணனின் அரக்கர் படைக்கும் நடந்த போரை இராமாயணத்தின் யுத்த காண்டம் கூறுகிறது. அப்போரைச் சித்தரிக்கும் ஓவியத்தைப் படத்தில் காணலாம். சாகிப் தின் என்ற பதினேழாம் நூற்றாண்டு ஓவியர் வரைந்த இந்த ஓவியம் முகலாய, ராஜபுதான ஓவியப்பாணிகளின் கலவையாக உள்ளது. படம்: சாகிப்தின் |