விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 6, 2012
முறுக்கு, தமிழர்கள் பெரிதும் விரும்பி உண்ணும் பலகாரம் ஆகும். இது உளுந்து மாவும் அரிசிமாவும் கலந்தும் சில இடங்களில் கோதுமை மாவும் கலந்து உருவாக்கப்படுகிறது. இந்த மாவுடன் எள், ஓமம், நெய் போன்றவை கலந்து சிறிது கெட்டியாகப் பிசைந்து முறுக்குக்கான அச்சில் இட்டு பிழிந்து எடுக்கின்றனர். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சுட வைத்து அந்த எண்ணையில் பிழிந்து வைத்த முறுக்கைப் போட்டு எடுப்பர். படம்: எஸ்ஸார் |