விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 22, 2015
ஜிக்மே கேசர் நாம்கியல் என்பவர் வாங்சுக் குடும்பத்தைச் சேர்ந்த பூட்டானின் டிரக் கியால்ப்போ என்று அழைக்கப்படும் அரசுத்தலைவரும் மன்னரும் ஆவார். உலகிலேயே மிகவும் குறைந்த அகவையுடைய நாட்டுத் தலைவர் இவர் ஆவார். இவரின் தந்தை ஜிக்மே சிங்கே வாங்சுக் 9 டிசம்பர் 2006இல் தனது பதவியினை இவருக்காகத் துறந்தார். வாங்சுக் குடும்பம் பூட்டானை ஆளத்தொடங்கியதன் நூறாம் ஆண்டும், நற்குறியுள்ள ஆண்டாகவும் கருதப்பட்ட 2008இல் இவருக்கு முடிசூட்டப்பட்டது. படம்: பூட்டான் அரச குடும்பம் |