விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 15, 2011
பாம்பன் பாலம் பாக்கு நீரிணையில் இராமேசுவரத்தையும் இந்தியாவின் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பாலம். இப்பெயரில் தரைப்பாலம், தொடருந்துப் பாலம் இரண்டும் அழைக்கப்பட்டாலும், பொதுவாகப் படத்தில் காணப்படும் தொடருந்துப் பாலத்தையே இப்பெயரால் குறிப்பிடுவர். இதுவே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் பாலமாகும். இதன் நீளம் 2.3 கிமீ. |