விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 14, 2006
புலிக்கோவில் அல்லது வாட் ஃவா லுவாங் டா புவா மேற்குத் தாய்லாந்தில் உள்ள ஒரு புத்தக் கோவில் ஆகும். இக்கோவிலில் புலிகள் உட்பட பல விலங்குகள் கட்டின்றி சுற்றித் திரிகின்றன. இக்கோவிலுக்கு முதலில் கிராம மக்களால் ஒரு புலிக்குட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் அது இறந்து விட்டது. பின்னர் தாய்ப்புலிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்படும்போது விடப்படும் பல புலிக்குட்டிகள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்தம் 18 புலிகள் உள்ளன. இப்புலிகள் பெரும்பாலான நேரம் கூண்டுகளிலேயே இருக்கின்றன. உலர்ந்த பூனை இறைச்சியும் சமைக்கப்பட்ட கோழியும் இவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன. கிப்பன் குரங்கு, மான் ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன. படத்தில் துறவியுடன் உலவும் புலிகள் காட்டப்பட்டுள்ளன. |