புலிக்கோவில்
'புலிக்கோவில் அல்லது வாட் வா லுவாங் டா புவா (Tiger Temple / Wat Pha Luang Ta Bua) மேற்குத் தாய்லாந்தில் உள்ள ஒரு புத்தக் கோவில் ஆகும். இது காஞ்சனபுரி மாகாணத்தில் காஞ்சனபுரி நகருக்கு வடமேற்கே 38 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புலிகள் உட்பட பல விலங்குகள் கட்டின்றி சுற்றித்திரிகின்றன.
இக்கோவிலுக்கு முதலில் கிராம மக்களால் ஒரு புலிக்குட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் அது இறந்து விட்டது. பின்னர் தாய்ப்புலிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்படும்போது விடப்படும் பல புலிக்குட்டிகள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்தம் 17 புலிகள் உள்ளன.[1] இப்புலிகள் பெரும்பாலான நேரம் கூண்டுகளிலேயே இருக்கின்றன. உலர்ந்த பூனை இறைச்சியும் சமைக்கப்பட்ட கோழியும் இவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன. கிப்பன் குரங்கு, மான் ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன.
வெளியிணைப்புகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "புலிக்கோவிலின் இணையத்தளம்". 2011-04-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-05-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)