விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 20, 2011
டெயிட் என்பது கேனரி தீவுகளிலுள்ள ஓர் எரிமலை ஆகும். இதன் உயரம் 3,718 மீ ஆகும். இதுவே ஸ்பெயினின் மிக உயர்ந்த பகுதியும் உலகின் மூன்றாவது பெரிய எரிமலையும் ஆகும். இந்த எரிமலை கடைசியாக 1909ஆம் ஆண்டு வெடித்தது. 18,900 எக்டேர் பரப்பளவு கொண்ட இம்மலையைச் சுற்றியுள்ள டெயிட் தேசியப் பூங்கா யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. படத்தில் வடக்கு திசையிலிருந்து இம்மலையின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. |