விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 12, 2012
பியானோ என்பது விசைப்பலகையால் வாசிக்கப்படும் ஓர் இசைக்கருவி. அளவில் பெரியதாக மேற்கத்திய இசையில் தனித்து வாசிப்பதற்கும் அறையிசையில் வாசிப்பதற்கும் இசையமைப்பதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் கூட உதவியானதாக இருக்கும். 1700ஆம் ஆண்டு இதனை கிறிஸ்டிஃபோரி என்ற இத்தாலிய இசைக்கருவியாளர் கட்டமைத்தார். இதில் பின்னப்படாத துணியால் சுற்றப்பட்ட சுத்தியலை உருக்குக் கம்பிகளின் மீது அடித்து ஒலி பெறப்படுகிறது. படத்தில் பெரிய அளவிலான பியானோ ஒன்று காட்டப்பட்டுள்ளது. |