விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 28, 2016
படிக்கட்டு வெவ்வேறு மட்டங்களில் உள்ள தளங்களைப் போக்குவரத்துக்காக இணைப்பதற்கு அமைக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். கடக்க வேண்டிய நிலைக்குத்துத் தூரத்தைச் சிறு சிறு தூரங்களாக ஏறிக் கடப்பதற்காகச் செய்யப்படும் ஒழுங்கு இது. இவ்வாறு பிரிக்கப்பட்ட ஒரு பிரிவு நிலைக்குத்துத் தூரத்தை ஏற உருவாக்கிய அமைப்புப் படி எனப்படுகின்றது. எனவே படிக்கட்டு பல படிகள் கொண்ட ஒரு தொகுதி. படத்தில் போர்த்துகலின் மான்சாண்டோ கோட்டையில் உள்ள ஒரு கருங்கல் படிக்கட்டைக் காணலாம். |