விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 23, 2007
தாமஸ் ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். "மென்லோ பூங்காவின் மந்திரவாதி" பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது. |