விக்கிப்பீடியா:இலங்கை கட்டுரைப்போட்டி

இலங்கையில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கட்டுரைப் போட்டி நடத்துவது குறித்த உரையாடலகளை ஓரிடத்தில் ஆவணப்படுத்த இந்த திட்டப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

பயனர் கருத்துகள் தொகு

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான கட்டுரைப்போட்டி நடத்துவது தொடர்பான நக்கீரன் முன்வைத்த யோசனை ஆரோக்கியமானது.

நான் பயனர் சிவகுமாருடன் இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதுடன், இலங்கையில் முன்னணி தமிழ் தேசிய பத்திரிகையொன்றின் முகாமைத்துவப் பணிப்பாளருடனும் கலந்துரையாடினேன். அச்சமயம் கட்டுரைப் போட்டி நடத்துவது தொடர்பாக பூரண ஊடக அனுசரணை வழங்குவதற்கு அப்பத்திரிகை முன்வரும் என உத்தியோகப்பற்றற்ற முறையில் என்னிடம் தெரிவித்தார். மேலும், இலங்கையிலுள்ள விக்கி பயனர்களை ஒன்றிணைத்து இது தொடர்பான திட்டங்களை வகுக்க முடியுமென கருதுகின்றேன்.

அவ்வாறான ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப்படுமிடத்து அதனை மூன்று மட்டங்களில் நடத்துவது கூடிய பயன்மிக்கதாக இருக்குமென கருதுகின்றேன்.

1. பாடசாலை மாணவர்கள் மத்தியில் 2. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் 3. திறந்த போட்டி

இவ்வாறான ஒரு போட்டி நடத்தப்படுமிடத்து அதனை முன்நின்று சகல ஏற்பாடுகளையும் தற்போதைக்கு என்னாலும் சிவக்குமாராலும் மேற்கொள்ள முடியும். அதேநேரம்ää போட்டியில் வெற்றியீட்டுபவர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை அறிய விரும்புகின்றேன். இது தொடர்பாக விக்கியின் நிர்வாகத்துடன் தொடர்புபட்ட பயனர்கள் கருத்துக்களை தெரிவித்தால் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவியாக இருக்கும்.

--P.M.Puniyameen 04:22, 11 சனவரி 2011 (UTC)

இலங்கையில் மாணவர்கள் மத்தியில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான கட்டுரைப்போட்டி நடத்துவது தொடர்பான நீங்கள் முன்வைத்த யோசனை தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கக் காத்திருக்கின்றொம். புன்னியாமீனுடனும் கதைத்தேன்.உங்கள் ஏற்பாடுகள் பற்றி அறியத்தரவும். சஞ்சீவி சிவகுமார்

நற்கீரன் கருத்து தொகு

இலங்கையில் கட்டுரைப் போட்டி நடத்துவது என்பது நல்ல திட்டமே. எனினும் பின் தள ஒழுங்கமைப்புப் பற்றிச் கூடிதலாக கவனம் செலுத்த வேண்டும். முன்னர் நடந்த கட்டுரைப் போட்டிக் கட்டுரைகள் இன்னும் பதிவேற்றப்படவில்லை என்பது குறிக்கத்தக்கது. நாம் கட்டுரைகளை நேரடியாக பதிவேற்றப்படும் கேட்பது நியாமாக இராது. ஏன் என்றால் பெரும்பாலான மாணவர்களுக்கு இணைய இணைப்பு பிரச்சினையாகவே இருக்கும். சிவகுமார், புன்னியாமீன், உமாபதி ஆகியோர் ஊடகங்கள், பாடசாலைகள் ஊடாக இலங்கையில் ஒழுங்மைப்புச் செய்வதில் உதவுவார்கள். ஆனால் எமக்குப் இதர பின் தள வேலைகளைச் செய்ய போதிய தன்னார்வலர்கள் தேவை. அவர்கள் இலகுவாக சிறுக சிறுக பங்களுக்குமாறு ஒழுங்கமைத்தல் இருக்க வேண்டும். இதுவே முக்கிய சிக்கலாகப் பாக்கிறேன். மற்ற பயனர்களும் கருத்துக் கூறினால் நன்று. --Natkeeran 00:35, 2 பெப்ரவரி 2011 (UTC)

சூரிய பிரகாசு கருத்து தொகு

நான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முதற்பக்க இற்றைப்பாடு, சில நிர்வாகப் பணிகள் போன்றவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளேன். எனவே நட்கீரனின் பணிகளில் என்னால் உதவ முடியும். எனவே கட்டுரைப்போட்டி நடத்துவதில் சிக்கலேதுமிராது என்று எண்ணுகிறேன். :)

--சூர்ய பிரகாசு.ச.அ. 09:48, 2 பெப்ரவரி 2011 (UTC)

சோடாபாட்டிலின் கருத்து தொகு

கண்டிப்பாக நெரடியாக பதிவேற்றம் செய்வது போல இம்முறை அமைக்க வேண்டும். கட்டுரைப் போட்டியின் குறிக்கோள் மாணவர்களிடையே விக்கியினைக் கொண்டு செல்வது. இரண்டுக்கு இடையில் இன்னொரு இடைமுகம் வரும் போது அவர்களுக்கு இது வழமையானதொரு offline கட்டுரைப் போட்டி போல ஆகி விடுகிறது. எனவெ பயனர்வெளியில் கட்டுரைகளை பதிவேற்றுவது பொல செய்ய வேண்டும். இணைய இணைப்பு தட்டுப்பாடு என்பது, ஒரே முயற்சியில் பதிவேற்றல் என்பதில்லையென்பதால் பெரும் பிரச்சனையாக இருக்காது என நினைக்கிறேன். ஒரிரு மாத கால அவகாசம் கொடுத்து சிறுக சிறுக வளர்த்தெடுக்கலாம் என்று அறிவிக்கலாம்.
வேறொரு இடைமுகம் கொடுத்ததால் முன் நடந்த கட்டுரைப் போட்டியில் ஏற்பட்ட சிக்கலக்ள் 1)ஒருங்குறி/ எழுத்துரு சிக்கல் 2)pdf/doc/rtf மாற்ற சிக்கல் 3) இருக்கும் தலைப்புகளிலேயே மீண்டும் மீண்டும் கட்டுரைகள் வந்தவை 4)பதிவேற்றதிலுள்ள சிரமங்கள் 4) போட்டியாளர்களுக்கும் விக்கிக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஆனதால், அவர்கள் யாரும் பின் இங்கு வந்து பங்கு கொள்ளாமை (போட்டியாளன் நானும், நடுவர் பவுலும் தவிர)
(பி.கு) விக்கியில் ஏற்றத் தகுந்தவை என தீர்மானிக்கபப்ட்ட 166 போட்டிக் கட்டுரைகளில் சுமார் 86 இதுவரை பதிவேற்றப்படுள்ளன. சுமார் 20 கட்டுரைகள் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விட தரம் தாழ்ந்தவை என்பதால் தேங்கி நிற்கின்றன. சுமார் 30 கட்டுரைகள் எழுத்துரு மாற்ற சிக்கல்களால் தேங்கியிருக்கின்றன. --சோடாபாட்டில்உரையாடுக 10:48, 2 பெப்ரவரி 2011 (UTC)

இரவியின் கருத்து தொகு

சோடாபாட்டில் கருத்தை வழிமொழிகிறேன். இணைய இணைப்பு இல்லா 100 மாணவர்களை இலக்கு வைப்பதை விட இணைய இணைப்பு உள்ள 10 மாணவர்களை இலக்கு வைக்கலாம். கட்டுரைப் போட்டி நேரடியாக விக்கியில் நடைபெறுவது நல்லது. ஒரே கட்டுரையை வைத்து மதிப்பிடாமல் பல தரமான கட்டுரைகளுக்கான தொடர் பங்களிப்புகளை வைத்து மதிப்பிடலாம். --இரவி 13:07, 2 பெப்ரவரி 2011 (UTC)

தேனி எம்.சுப்பிரமணியின் கருத்து தொகு

இலங்கையில் மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி நடத்தவிருப்பது குறித்து மகிழ்ச்சி. இந்தியாவில், தமிழ்நாட்டில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த தமிழ் இணைய மாநாட்டிற்காக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் (முதல் முயற்சி என்பது இங்கு கவனத்திற்குரியது) பல சிக்கல்கள் ஏற்பட்டது.

  • கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்ட போது பல பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கியிருந்தன. (தேர்வுகளுக்குத் தயாராக வேண்டியிருந்ததால் போட்டிகளில் பலர் ஆர்வம் காட்டவில்லை)- தேர்வுக் காலமாக இல்லாமல் இருக்க வேண்டும்.
  • கட்டுரைப் போட்டிக்காக எந்தத் தலைப்பும் எடுத்துக் கொள்ளலாம் என்கிற நிலையிலும் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத பல தலைப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவில் தனிப் பக்கங்களில் தரப்பட்டன. இந்தத் தலைப்புகளை யாரும் பார்வையிட்டதாகக் கூட தெரியவில்லை. (இணையப் பயன்பாடு அறியாமை காரணமாக இருக்கலாம்)- இந்தத் தலைப்புகளைத் தற்போது கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • கட்டுரைப் போட்டிக்கு தனி இணையதளத்தில் பதிவேற்றம், தமிழ் எழுத்துரு, தமிழ்த் தட்டச்சு, அதற்கான போன்றவை பலருக்கும் தடையாக இருந்தது. (இதற்கும் இணையப் பயன்பாடு குறித்த அறியாமையே காரணம்) -தனி இணையதளம் பயனற்றது.
  • என் ஆலோசனை
  1. தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் ஒருங்குறியில் கட்டுரைகளை இணைக்கச் செய்ய வேண்டும். இந்தக் கட்டுரைகளில் பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகளில், படிக்கும் வகுப்பு,பாடசாலை,முகவரி போன்றவை அவசியம் கடைசியில் இடம்பெற வேண்டும். இது போல் பல்கலைக்கழக மாணவர்கள் எனில் அவர்கள் படிக்கும் படிப்பு,கல்லூரி முகவரி போன்றவை அவசியம் இருக்க வேண்டும்.திறந்த போட்டியில் பங்கேற்பவர்களுக்கு முழு முகவரி இருக்க வேண்டும் என நிபந்தனைகளை முன்பே உருவாக்கி விட வேண்டும். இது கட்டுரைகளைப் பிரிக்க உதவும்.
  2. தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கைக் கட்டுரைப் போட்டி என்கிற தனி பகுப்பு உருவாக்கி அதில் இணைக்கச் சொல்லலாம். இந்தப் பகுப்பில் இடம்பெறும் கட்டுரைகளை அவ்வப்போது குறிப்பிட்ட விக்கிப்பீடியர்கள் உதவியுடன் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், திறந்த நிலை எனும் போட்டிகளின் கீழான உள் பகுப்புகளுக்கு நகர்த்தி விடலாம். இந்த உள் பகுப்புகளில் அதிகமான தலைப்புகள் வரும் நிலையில் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் மேலும் பிரித்துக் கொள்ளலாம். கட்டுரைகளின் பரிசுத் தேர்வுக்கு உதவும்.
  3. தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைப் போட்டியில் பங்களிப்பவர்களில் 10 சதவிகித பங்களிப்பாளர்களாவது தமிழ் விக்கியின் பங்களிப்பாளராக (பயனராக) மாறும் நிலை இருக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும்

-பிற பயனர்கள் அளிக்கும் பல நல்ல கருத்துக்களுடன் இந்தக் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 16:19, 2 பெப்ரவரி 2011 (UTC)

ஜெகதீஸ்வரன் கருத்து தொகு

  • பாடசாலை மாணவர்கள், பல்கலைகழக மாணவர்களை பயனராக மாற்றும் திட்டத்தினை விட, வலைப்பதிவர்களை விக்கியில் பங்களிக்க வைப்பது எளிதானது. எழுதுகின்ற ஆவலோடு இருக்கும் வலைப்பதிவர்களுக்காக ஒரு தனிப்போட்டியினை வைக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

நன்றி.- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

  • வலைப்பதிவர்களுக்காகத் தனிப் போட்டி தேவையில்லை. விக்கியின் பயனர்கள் பலரும் தங்களுக்கென வலைப்பூக்கள், இணையதளங்கள் என தனியாக வைத்திருப்பவர்கள்தான். திறந்த நிலைப் போட்டி என்பதில் வலைப்பதிவர் உட்பட யாரும் கலந்து கொள்ளலாம். விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் தாங்கள் விக்கியின் பயனர் என்பதற்கு முக்கியத்துவமளியுங்கள்... உங்கள் பெயரில் சொடுக்கினால் விக்கியிலுள்ள உங்கள் பயனர் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். தங்கள் வலைப்பூவிற்குச் செல்லும் வழியாக அமைப்பது சரியானதல்ல...--தேனி.எம்.சுப்பிரமணி. 17:36, 2 பெப்ரவரி 2011 (UTC)

மயூரநாதன் கருத்து தொகு

இலங்கையிலும் கட்டுரைப் போட்டியொன்றை நடத்துவது நல்ல பயனுள்ள விடயம். அதிகம் கட்டுரைகள் வரவேண்டும் என்று எதிர்பார்த்து நடத்துவதைவிட புதிய பங்களிப்பளர்களைக் கவருவதற்கான ஒரு வழியாக இதனைப் பயன்படுத்துவதே நல்லது என்பது எனது கருத்து. பெயரைப் பதிவு செய்துகொண்டு கட்டுரைகளை நேரடியாகவே விக்கிப்பீடியாவில் எழுதச் சொல்லலாம். அல்லது வெளியே எழுதிப் பதிவேற்றச் சொல்லலாம். 100 போட்டியாளர்கள் வரை இலக்கு வைத்தாலே போதுமானது. நன்றாகத் திட்டமிட்டுக்கொண்டு தொடங்குவது நல்லது.மயூரநாதன் 19:13, 2 பெப்ரவரி 2011 (UTC)

சஞ்சீவி சிவகுமாரின் கருத்து தொகு

மயூரநாதனின் கருத்து எனக்கும் சரியாகப் படுகிறது. விக்கிக்கு நாம் அறிமுகம் செய்த பலர் ஆசைக்கு ஒரு கட்டுரையை தொகுத்துவிட்டு அடங்கி விட்டவர்களாகவே இருக்கின்றனர்.பல காரணங்கள் இருந்தாலும் ஆர்வம் போதாமை முக்கியமானது.கட்டுரைப் போட்டியை இணையவழிப் போட்டியாக நடத்துவதே சிறந்தது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணைய வசதி பிரச்சினை அல்ல.மயூரநாதன் சொன்னது போல் 100 பேர் பங்களித்தால் போதும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:03, 2 பெப்ரவரி 2011 (UTC)

அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி. சோடாபோட்டில், தேனி மற்றவர்களின் கருத்துக்கள் பெரும்பாலவோடு உடன் படுகிறேன். எனினும் கணினி வசதி கொண்ட மாணவர்களுக்கு மட்டும் போட்டி என்ற அடிப்படையோடு முரண்படுகிறேன். கட்டுரைப் போட்டி கட்டுரை எழுத திறமை கொண்ட மாணவர்கள் அனைவருக்குமாக அமைவதே சரியாக இருக்கும். அப்படி ஒரு குறையை நாம் ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் மின்னஞ்சல் அனுப்பினால் உடனடியாக ஏற்றி விடுதலோ, அல்லது வேறு ஒழுங்குபடுத்தல்களோ தேவை என்று படுகிறது. இங்கு ஒர் இலக்கிய அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளேன். அவர்களின் ஈடுபாடு அல்லது ஆதரவு கிட்டுமா என்று பார்க்க வேண்டும். என்ன பரிசுகள் கொடுத்தால் சிறப்பாக அமையும் என்றும் பரிதுரைகள் செய்தால் நன்று. --Natkeeran 03:10, 7 பெப்ரவரி 2011 (UTC)

சிவகோசரன் கருத்து தொகு

இது மிகச்சிறந்த ஒரு முயற்சி. இலங்கையில் மாணவர்களிடையே கணினி மற்றும் இணையப் பாவனை ஓரளவு சிறந்த நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. கட்டுரைகளை நேரடியாகப் பதிவேற்றம் செய்யுமாறு கேட்கலாம் என்றே எண்ணுகிறேன். யாழ்ப்பாணப் பகுதியில் இப்போட்டி தொடர்பான ஒழுங்குகளைச் செய்ய என்னால் ஓரளவு உதவ முடியும். வேலைப்பழு காரணமாக அதிக நேரத்தை ஒதுக்க முடியாதிருப்பினும் என்னாலான சிறு பங்களிப்பினை வழங்க ஆவலாக உள்ளேன். --சிவகோசரன் 10:42, 14 பெப்ரவரி 2011 (UTC)

இலங்கையில் த.வி செயற்பாடுகளை முன்னெடுக்க இன்னொரு கரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 11:59, 14 பெப்ரவரி 2011 (UTC)
ஒரு சில வெளி உரையாடல்களைத் தொடர்ந்து, விரைவில் நாம் இதை முன்னெடுக்கலாம். உதவ முன்வந்ததற்கு நன்றி. --Natkeeran 23:29, 14 பெப்ரவரி 2011 (UTC)

அருணின் கருத்துக்களும் கேள்விகளும் - கட்டுரைப் போட்டி மற்றும் பரிசளிப்பு தொகு

இலங்கையில் கட்டுரைப் போட்டி நடத்துதல் தொடர்பாக எனக்குள் எழுந்த கேள்விகளையும் சில கருத்துக்களையும் இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.

பொதுவாக கட்டுரைப் போட்டிகள் வைப்பதன் நோக்கம்:

  1. கட்டுரை எழுதுவோரின் திறமையை ஊக்குவித்தல் அல்லது வளர்த்தல்.
  2. கட்டுரை எழுதுவோரில் திறமையானோரை இனங்காணல் அல்லது தெரிவுசெய்தல்.
  3. போட்டிகள் ஊடாக ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ளல்.
  • இந்த மூன்றில் முதல் கூற்றின் படி, "கட்டுரை எழுதுவோரின் திறமையை ஊக்குவித்தல் அல்லது வளர்த்தல்." என்பதல்ல விக்கிப்பீடியாவுக்கு தேவையானது. அதேவேளை விக்கிப்பீடியாவில் ஏற்கெனவே பங்களிப்போரை ஊக்குவித்தல் நடவடிக்கையும் இதுவல்ல.
  • இரண்டாவது கூற்றின் படி, "கட்டுரை எழுதுவோரில் திறமையானோரை இனங்காணல் அல்லது தெரிவுசெய்தல்." என்பது எந்த வகையிலும் அவசியமற்றது. ஏனெனில் விக்கிப்பீடியா என்பது திறமையானோர், தகுதியானோர் என எவரையும் இணங்கண்டு இணைத்துக்கொள்ளும் நோக்கம் உடையதல்ல. எவரும் தொகுக்கலாம் எனும் பறந்த நோக்கம் கொண்டது. ஓரளவு தமிழில் எழுதும் ஆர்வம் உடையவராக இருந்து, விக்கிப்பீடியாவின் எந்த அடிப்படையும் அறியாதவர் கூட விக்கிப்பீடியாவுக்குள் நுழைந்தால், கூடிய சீக்கிரமே அதன் உட்கட்டமைப்புகள் மற்றும் நோக்கம் அறிந்து பங்களிக்க முடியும். அதற்கு தன்னார்வம் இருந்தால் மட்டுமே போதுமானது. விக்கிப்பீடியாவில் பங்களிக்க வேண்டும் எனும் தன்னார்வம் கொண்டோர், தொகுத்தல் என்பது மட்டுமல்லாமல் வேறுபல விதங்களிலும் பங்களிக்கலாம். (எடுத்துக்காட்டாக: மொழிப்பெயர்ப்பு, விக்கியாக்கம், கூகிள் கட்டுரை சீர்த்திருத்தம், பிழைத்திருத்தம், தளப்பராமரிப்பு போன்றவை.)
  • மூன்றாவது, "போட்டிகள் ஊடாக ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ளல்." இதனையே "விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி" நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இந்த நோக்கம் சற்று மாறுப்பட்டது. அதானது, கட்டுரை போட்டி ஊடாக, விக்கிப்பீடியா கூட்டுமுயற்சிக்கு, புதிய பயனர் பலரை ஈர்த்தெடுக்கும் முயற்சியே அதுவாகும்.
1. எனவே இங்கே முதன்மையானதும், தேவையானதும்: விக்கிப்பீடியா என்றால் என்ன, விக்கிப்பீடியாவின் கட்டற்ற கொள்கை என்றால் என்ன, விக்கிப்பீடியா எதனை நோக்காகக் கொண்டுள்ளது, விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியத்தால் எமது சமுதாயம் அடையப்போகும் நன்மைகள் என்ன, குறிப்பாக பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் அடையக்கூடிய நன்மை என்ன என்பன போன்றவற்றிக்கான பரப்புரையாகவே அது இருக்கவேண்டும்.
2. இன்று இணைய வசதியில்லாத மாணவர்களுக்கு கூட, நாளை இணைய வசதி கிட்டும்போது, அவர்களது முதன்மைப் பார்வை விக்கிப்பீடியா நோக்கியதாக இருக்க வேண்டும். விக்கிப்பீடியா குறித்த ஒரு முழுமையான தெளிவு பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். அவர்களுக்குள் தானாகவே விக்கிப்பீடியாவில் பங்களிக்க வேண்டும் எனும் உந்துசக்தியை ஊட்டுவதாக அமைதல் வேண்டும்.
3. கடைசியாக, விக்கிப்பீடியாவில் யார் பங்களிக்கிறார்கள், ஏன் பங்களிக்கிறார்கள் என்பவற்றை விளக்கி, இது எமது எதிர்கால சமுதாய நலன் சார்ந்த ஒரு பரந்த நோக்கம் கொண்டதன் அடிப்படையில் அவர்களையும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க அழைப்பு விடுக்கவேண்டும். குறிப்பாக எவரும் பங்களிக்கலாம், எளிதாக பங்களிக்கலாம் என்பதனை தெளிவுப்படுத்தலால் இது சாத்தியமாகும்.

இங்கே எனக்கு தெளிவில்லாமை "கட்டுரைப் போட்டியும் பரிசளிப்பும்" ஆக உள்ளது. விக்கிப்பீடியா என்பதே தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியால், நன்கொடைகளை பெற்று இயங்கும் ஒரு தாபனம் ஆகும். அதில் தமிழுக்கு ஒரு இடைமுகம். இதில் பரிசளிக்க இன்று ஒரு அமைப்போ அல்லது விக்கிப்பீடியர்கள் சிலரோ முன்வந்தாலும், நீண்டக்கால நோக்கில் இதே நடமுறையை தொடர்வதில் சாத்தியப்பாடு உள்ளனவா? பரிசளிப்பதால் விக்கிப்பீடியா அடையப்போகும் நன்மை என்ன? மேலும் "பரிசளித்தல்" என்பது, பரிசுக்காக கட்டுரை எழுதோரை தூண்டுவதாக மட்டுமே அமையும். பரிசுக்காக கட்டுரை எழுதும் அல்லது எழுதிய ஒருவர், பின்னர் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வருவார் என்பதற்கு என்ன சாத்தியம்? வெற்றிப்பெற்றோர் மகிழும் போது, வெற்றிபெறாதோரின் மனநினை என்ன? விக்கிப்பீடியா குறித்து என்னமாதிரியான எண்ணலைகளைத் தோற்றுவிக்கும்?

மேலும், எத்தகைய சிறப்பான கட்டுரையை எழுதக்கூடிய ஒருவரானாலும், விக்கிப்பீடியா பற்றி அறிந்திராத ஒருவரால், விக்கிப்பீடியாவுக்கு ஏற்றவகையில் எழுதுதல் அநேகமாக சாத்தியமில்லை. அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகளை பின்னர் விக்கியாக்கம் செய்தல், அவற்றிற்கான சான்றுகள் வழங்குதல், கட்டுரைக்கொண்டுள்ள தகவல்களின் போது எழும் கேள்விகளுக்கு பதிலளித்தல் போன்றன எதுவுமே எளிதுமில்லை சாத்தியமும் இல்லை.

விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் நோக்கம் மற்றும் நன்மை விளக்கம்
விக்கிப்பீடியாவை பயன்படுத்துதல் எப்படி எனும் விளக்கம் மற்றும் பயன்படுத்துவதற்கான அழைப்பு
விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் நன்மை மற்றும் பங்களிப்பதற்கான அழைப்பு

இவ்வாறு விக்கிப்பீடியா குறித்த விழிப்புணர்வு ஊட்டும் பரப்புரையே முக்கியமானது. அதுவே விக்கிப்பீடியாவை மேலும் பரந்த மட்டத்தில் கொண்டு செல்ல உதவும். இந்த பரப்புரை இன்று இணையம் என்றால் என்னவென்று தெரியாதோர் மத்தியிலும் விக்கிப்பீடியா என்றால் என்ன என்று அறிந்துக்கொள்ளும் தெளிவுரை மற்றும் செயல்விளக்கம் போன்றவைகளாக இருத்தல் வேண்டும். முக்கியமாக விக்கிப்பீடியாவை பயன்படுத்துவதற்கான அழைப்பு முதன்மையானதாக இருக்க வேண்டும். விக்கிப்பீடியாவை பயன்படுத்த விளையும் ஒருவர் பயனர் ஆவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம். எனவே விக்கிப்பீடியா குறிந்து அறிந்து நேரடியாக பங்களிப்பதற்கான அழைப்பு இறுதியான நோக்கமாக இருத்தல் வேண்டும். என்னைப்பொருத்தவரையில் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாமல், அவற்றின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பங்குக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சி நிரல் அமையவேண்டும். அதுவே விக்கிப்பீடியாவின் பெருவளர்ச்சிக்கு வழிவகுக்கும். --HK Arun 18:41, 20 பெப்ரவரி 2011 (UTC)