விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 25, 2009
- தனிநாயகம் அடிகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக செயற்பட்டு, அதன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு சிறப்பான முறையில் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.
- 1987 இல் மொன்றியால் நெறிமுறைக்கு அமைய உலகெங்கும் குளோரோபுளூரோகார்பன்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து 2007 இல் ஓசோன் படைக்குறைவு நின்றுள்ளது.
- 17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தில் விருத்திசெய்யப்பட்ட நீராவிப் பொறி, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கிய பொறியியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
- சிங்கத்தைப் போன்று இருவர் சேர்ந்து காலகவும், உடலாகவும் வேடம் அணிந்து, சிங்கத்தின் அசைவுளை ஒப்புவித்து, பொதுவாக சீனர்களால் ஆடப்படும் ஆட்டம் சீன சிங்க நடனம் ஆகும்.
- 1962 ம் ஆண்டு அமெரிக்காவில் சாம் வால்ட்டனால் ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட வோல் மார்ட், இன்று 8 000 மேற்பட்ட துறைவார் அங்காடிகள், 2 100 000 தொழிலாளர்கள், 404 பில்லியன் வரும்படி கொண்ட உலகின் மூன்றாவது பெரிய வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.