விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 3, 2012
- அசைவுப் பார்வையின்மை எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.
- இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது சார் வெடிகுண்டு ஆகும்.
- பறவைகளில் கோழி அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 இல்) ஆகும்.
- சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட இளவேனில் கோயிலின் புத்தர் சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.
- மரப்பாச்சி பொம்மைகள் 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.