விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அடுத்தது
- அங்கம்பொர (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.
- குவாண்டம் இயற்பியலில், ஹெய்சன்பர்க்கின் அறுதியின்மைக் கொள்கை பின்வருமாறு கூறுகிறது: "ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது".
- மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் அளிப்பு விதி (law of supply) எனப்படும்.
- இசுரேலிய சுதந்திரப் பிரகடனம் எனப்படுவது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று "உலக சீயோனிய நிறுவன" செயலாற்ற அதிகாரத் தலைவரும் "இசுரேலுக்கான யூத முகவர்" தலைவருமாகிய டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டது.
- தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, முதலாவது தமிழிசை மாநாடு சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.