விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 4, 2012
- ஜான்சி ராணி படை (படம்) என்பது 1943ல் நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு.
- இசை நிகழ்ச்சிகளில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள் பக்க வாத்தியங்கள் எனப்படுகின்றன.
- ராபர்ட் காடர்ட் எறிகணை அறிவியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
- மகன்றில் என்னும் பறவையும் அன்றில் பறவை போல் இணைபிரியாமல் வாழும் பாங்கினை உடையது.
- கௌமாரம், காணபத்தியம், சாக்தம், சௌரம் போன்ற இந்து சமயப் பிரிவுகள் முறையே முருகன், கணபதி, சக்தி மற்றும் சூரியன் போன்றவர்களை முழுமுதற் கடவுளாக கொண்டுள்ளவை.