விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 18, 2012
- பெரு நாட்டிலுள்ள நாசுகா கோட்டோவியங்களின் (படம்) ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்.
- கொல்லங்கொண்டான் என்றவனே வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.
- பில்லியன் என்பது ஆசிய வழக்கப்படி 100 கோடி மதிப்பையும் ஐரோப்பிய வழக்கப்படி லட்சம் கோடி மதிப்பையும் குறிக்கும்.
- தொடுதிரை என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.
- கணையத்திலிருந்து இன்சுலினை சுரக்கச் செய்ய பயன்படும் தாவரப் பொருள் வேங்கை மரப் பிசின் ஆகும்.