விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 24, 2022
- கிறிஸ்டினா கோக் (படம்) விண்வெளியில் நீண்டகாலம் இருந்த பெண் சாதனையாளர் ஆவார்.
- கிமு 479 பொடிடேயா நிலநடுக்கம் என்பது மனித வரலாற்றில் பதிவான மிகப் பழமையான ஆழிப்பேரலை ஆகும்.
- பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.
- தமிழின் முதல் சூழலியல் திரைப்படம் 1982 இல் வெளியான ஏழாவது மனிதன் ஆகும்.
- கழுகு எடுத்துச் சென்ற ஆமை எசுக்கிலசு தலையில் விழுந்ததால், அவர் இறந்தார் என நம்பப்படுகிறார்.