விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 14, 2015
- சுடோமு யாமகுச்சி என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.
- பெல்மேஷ் முகங்கள் என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. (படம்)
- தடமறியும் கழுத்துப் பட்டை (Tracking collar) விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
- ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் e ஆக இருக்கும்போது அந்த மடக்கை இயல் மடக்கை எனப்படுகிறது.
- அடைப்பான் வேகம் என்பது ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படக்கருவியின் அடைப்பான் திறக்கும் கால அளவாகும்.