விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/திசம்பர் 25, 2013
- இந்து சமய தீட்சை பெற்றுக்கொண்ட முதல் மேற்கத்திய பெண் சகோதரி நிவேதிதா (படம்) ஆவார்.
- கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான இடக்கை கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.
- பொன்னேர் உழுதல் என்பது சங்ககாலம் முதல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படும் பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.
- தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் இயோசீன் காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.