விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 28, 2012
- ஓரியன் கை (படம் - ஆரஞ்சு நிறம்) என்ற பால் வழி மண்டலத்தின் சுருள் கையில் மானிடர் வாழும் புவியும் அதை அடக்கிய சூரிய மண்டலமும் (சிவப்பு நிறம்) உள்ளது.
- அவகாசியிலிக் கொள்கை என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த இடல்லவுசிப் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.
- தமிழ் புளூட்டாக் (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும்.
- த மோர்கனின் விதி என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.
- பென்சீன், ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மமான கரிம வேதியியல் சேர்வை ஆகும்.