விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 7, 2012
- தமிழகத்தில் வேங்கைப்புலி(படம்) என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.
- பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் மீன் நெடிக் கூட்டறிகுறி கோளாறு உண்டாகின்றது.
- தோரா என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களான தொடக்க நூல் ,விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, மற்றும் இணைச் சட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்.
- நின்றொளிர் காளான் உட்பட சுமார் 71 வகை பூஞ்சை வகைகள் உயிரொளிர்வு உயிரினங்கள் ஆகும்.
- சிரி என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும்.