விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 13, 2013
- உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.
- தஜிகிஸ்தானில் உள்ள நியுரெக் அணை உலகின் மிக உயரமான அணையாகும்.
- பண்டைய தமிழகத்தைப் போலவே, இன்கா நாகரிகத்தின் வேளாண்மையிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் ஊணூர் என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.
- பெட்ரோலியப் பிரித்தெடுப்புக்கு பகுதிபடக் காய்ச்சி வடித்தல் முறை பயன்படுகிறது.