அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது காப்பியம் எனப்படும்.
அர்ஜெண்டினா நாட்டில் 1975-83 காலகட்டத்தில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் அரசு தன் எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய வன்முறை நிகழ்வுகள் கீழ்த்தரமான போர் என அழைக்கப்படுகின்றன.
இயக்குபிடி என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.
நீத்தார் வழிபாடு என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.