விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 19, 2014
- மல்லர் கம்பம் (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.
- நூறு சிந்தனைப் பள்ளிகள் என்பது கிமு 770 - 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.
- செலுத்து வாகனம் என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.
- சிந்தாமணி நிகண்டு 1876 இல் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வாழ்ந்த ச. வைத்தியலிங்கம்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டு, 2013 இல் தமிழ்நாட்டில் மறுபதிப்புச் செய்யப்பட்ட சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் ஆகும்.
- ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் கொமோடோ டிராகன் உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.