விக்கிப்பீடியா:கட்டுரைகள் எழுதுவதற்கான வழிகாட்டல்கள்

  • தமிழ்நாட்டிலிருக்கும் பல்கலைக்கழகம் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவர்கள், மாணவியர்கள், தமிழ்நாட்டிலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள், மாணவியர்கள் என அனைத்து முழுநேர மாணவ மாணவியர்களும் இப்போட்டியில் பங்கேற்கலாம். தொலைநிலைக் கல்வி மற்றும் பகுதிநேரக் கல்வி வழியாகப் பயிலும் மாணவ, மாணவியர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது.
  • மாணவ மாணவியர்கள் தாங்கள் பயின்று வரும் துறையுடன் தொடர்புடைய கீழ்காணும் 7 பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் மட்டுமே தங்கள் கட்டுரைகளை உருவாக்க முடியும்.
  1. பொறியியல் கல்வி
  2. மருத்துவக் கல்வி
  3. கால்நடை மருத்துவக் கல்வி
  4. சட்டக் கல்வி
  5. விளையாட்டுக் கல்வி
  6. வேளாண்மைக் கல்வி
  7. கலை மற்றும் அறிவியல் கல்வி

பொறியியல் கல்வி

தொகு

தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவை இணைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக் கழகம் (சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி) ஆகியவற்றில் பயின்று வரும் அனைத்து மாணவ மாணவியர்களும் இந்தப் பிரிவின் கீழான கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளலாம். பொறியியல் கல்விகளை வழங்கி வரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவ மாணவியர்களும் இந்தப் பிரிவின் கீழ் பங்கேற்கலாம்.

  • இப்பிரிவில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் பொறியியல் மற்றும் பொறியியல் தொடர்புடைய எந்தவொரு தலைப்பையும் தேர்வு செய்து அத்தலைப்பில் சிறப்பான கட்டுரைகளை எழுதலாம்.

மருத்துவக் கல்வி

தொகு

தமிழ்நாட்டிலுள்ள அலோபதி, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி எனும் அனைத்துப் பிரிவிலான மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவை இணைக்கப்பட்டுள்ள டாகடர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பயின்று பெற்று வரும் அனைத்து மாணவ மாணவியர்களும் இந்தப் பிரிவின் கீழான கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளலாம். மருத்துவக் கல்விகளை வழங்கி வரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவ மாணவியர்களும் இந்தப் பிரிவின் கீழ் பங்கேற்கலாம்.

  • இப்பிரிவில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் தொடர்புடைய எந்தவொரு தலைப்பையும் தேர்வு செய்து அத்தலைப்பில் சிறப்பான கட்டுரைகளை எழுதலாம்.

கால்நடை மருத்துவக் கல்வி

தொகு

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் பயின்று வரும் அனைத்து மாணவ மாணவியர்களும் இப்பிரிவின் கீழ் பங்கேற்கலாம்.

  • இப்பிரிவில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் கால்நடைகள் மற்றும் கால்நடை மருத்துவம் தொடர்புடைய எந்தவொரு தலைப்பையும் தேர்வு செய்து அத்தலைப்பில் சிறப்பான கட்டுரைகளை எழுதலாம்.

சட்டக் கல்வி

தொகு

தமிழ்நாட்டிலுள்ள டாக்டர் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரிகளில் பயின்று வரும் அனைத்து மாணவ மாணவியர்களும் இப்பிரிவின் கீழ் பங்கேற்கலாம்.

  • இப்பிரிவில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் சட்டம் மற்றும் சட்டத்துடன் தொடர்புடைய எந்தவொரு தலைப்பையும் தேர்வு செய்து அத்தலைப்பில் சிறப்பான கட்டுரைகளை எழுதலாம்.

விளையாட்டுக் கல்வி

தொகு

தமிழ்நாட்டிலுள்ள விளையாட்டுக் கல்விக்கான பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து விளையாட்டுக் கல்விக்கான கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவியர்களும் இப்பிரிவின் கீழ் பங்கேற்கலாம்.

  • இப்பிரிவில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்கள் தொடர்புடைய எந்தவொரு தலைப்பையும் தேர்வு செய்து அத்தலைப்பில் சிறப்பான கட்டுரைகளை எழுதலாம்.

வேளாண்மைக் கல்வி

தொகு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து வேளாண்மைக் கல்லூரிகள், தோட்டக்கலைக் கல்லூரிகள், வனக் கல்லூரிகள் போன்றவற்றில் பயின்று வரும் மாணவ மாணவியர்கள் இப்பிரிவின் கீழ் பங்கேற்கலாம்.

  • இப்பிரிவில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் வேளாண்மை மற்றும் வேளாண்மைத் தொழில்நுட்பம் தொடர்புடைய எந்தவொரு தலைப்பையும் தேர்வு செய்து அத்தலைப்பில் சிறப்பான கட்டுரைகளை எழுதலாம்.

கலை மற்றும் அறிவியல் கல்வி

தொகு

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் கலை, அறிவியல் மற்றும் இத்துடன் தொடர்புடைய பிரிவுகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் போன்றோர் இப்பிரிவின் கீழ் பங்கேற்கலாம்.

  • இப்பிரிவில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் கலை, அறிவியல் மற்றும் பொதுவான எந்தவொரு தலைப்பையும் தேர்வு செய்து அத்தலைப்பில் சிறப்பான கட்டுரைகளை எழுதலாம்.

மாதிரிக் கட்டுரைகள்

தொகு

கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ/மாணவியர்கள் கீழ்காணும் தலைப்பிலான தனிப்பக்கத்திற்குச் சென்று தங்கள் பிரிவுக்கேற்ற கட்டுரைகளைப் பார்வையிட்டு அந்தக் கட்டுரையைப் போல் தாங்களும் சிறப்பான கட்டுரைகளை எழுத முயற்சிக்கலாம்.

வலைவாசல்:கட்டுரைப்போட்டி/மாதிரிக் கட்டுரைகள்

சில தலைப்புகள்

தொகு

கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ/மாணவியர்கள் தங்கள் பிரிவுக்கேற்ற எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் கட்டுரைகளை எழுதலாம். அந்தத் தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இல்லாதிருப்பது நல்லது என்பதால் தங்கள் நன்மைக்காக தேவைப்படும் சில கட்டுரைகளின் தலைப்புகள் கீழ்காணும் பக்கத்தில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இவைகளையும் பார்வையிட்டுத் தலைப்புகளைத் தேர்வு செய்யலாம்.

வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல்

புதிய தலைப்புகள்

தொகு

புதிய தலைப்பைத் தேர்வு செய்யும் மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு பக்கத்திலும் இடது பகுதியில் உள்ள தேடுக என்கிற தலைப்பின் கீழுள்ள பெட்டியில் தங்களின் தலைப்பை மற்றும் கட்டுரைப் பொருளின் மாற்றுத் தலைப்புகளை உள்ளீடு செய்து கீழுள்ள செல் அல்லது தேடுக எனும் பொத்தானைச் சொடுக்கி அந்தத் தலைப்பில் கட்டுரைகள் எதுவுமில்லை என உறுதி செய்து கொண்டு அந்தத் தலைப்பிலான கட்டுரையை எழுத வேண்டுகிறோம்.