விக்கிப்பீடியா:கலந்துரையாடல்/தொகுப்பு01

விக்கிபீடியாவின் இந்தத் தமிழ்ப் பதிப்பு, தமிழ்மீதும் தமிழ் மக்கள் முன்னேற்றத்தின்மீதும் ஆர்வமுள்ள ஒரு அன்பரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தயவுசெய்து அவர் தன்னுடைய பெயர் விபரங்களை இங்கே பதிவுசெய்து விடவும்.

இவரைத் தொடர்ந்து இக் கலைக்களஞ்சியத்தின் இடைமுகத்தையும் (interface) மற்றும் இதன் முதன்மைப் பக்கத்தையும் தமிழாக்கம் செய்வதில் நான் என்னாலியன்ற பங்களிப்பைச் செய்துள்ளேன். மேலும் சில பக்கங்களையும் தொடர்ந்து தமிழாக்கம் செய்ய உத்தேசித்துள்ளேன்.

ஆர்வமுள்ள ஏனைய நண்பர்களும் தங்கள் தங்கள் துறைகளில் அவர்களுக்குள்ள அறிவயும், அனுபவத்தையும் பயன்படுத்தி இக் கலைக்களஞ்சியத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்து சகல அறிவுத்துறைகளிலும் தமிழ் வளர உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

இ.மயூரநாதன்
Mayooranathan 13:36, 25 நவ 2003 (UTC)

மயூரநாதன் அவர்களே,

நல்ல முயற்சி. எனக்கு இந்த திறந்தவெளி மென்பொருளாக்கத்தில் பழக்கமில்லை. நீங்கள் எதாச்சிம் உதவி தேவைப்பட்டால் நான் செய்ய ஆயத்த தயாராக உள்ளேன்.

அமல சிங்கம்.

கழஞ்சியம் இல்லை. களஞ்சியம். அருள் கூர்ந்து பிழைத்திருத்தம் செய்யவும்.

___

தை பிறக்கத் தமிழ் வளரும் போலுள்ளது. வாருங்கள் ஒத்துழைப்போம்.

மிக்க அன்புடன் ,

இரமணன் , rama at uklinux dot net


Apologies for posting in English, but could someone put the Tamil translation for "The free encyclopedia" on http://meta.wikipedia.org/wiki/Wikipedia_subtitle_translations? Thanks --Nohat


மிக அருமையான முயற்சி -- இதை ஆரம்பித்தமைக்கு மயூரநாதன் அவர்களுக்கு என் நன்றிகள்.

அன்புடன் அசோகன்


Apologies for posting in English, but I don't know how to post in Tamil. My main problem is that the Tamil fonts displayed are not readable. Can someone tell me, whether I should download any special (Tamil) fonts to view Wikipedia? Thank you.

Ramesh (User: Ramesh at English Wikipedia).

I've seen you on the English wikipedia. Welcome Ramesh. -- Sundar \பேச்சு 05:53, 16 ஆகஸ்ட் 2005 (UTC)
For tamil typing help see WP:SB--ரவி (பேச்சு) 08:51, 16 ஆகஸ்ட் 2005 (UTC)

Same as Ramesh,Apologies for posting in English.I am posting this to know that how a lesser language like marathi has come in the divisions of 1000+ and tamil comes under 100+? Please respond

Tamizhpriyan(User:madrazz at English Wikipedia).

It depends on how many people accessing the web know about Tamil wikipedia. These days we're seeing a number of new wikipedians mainly due to increased awareness through blog postings and interwiki links in English wikipedia. I hope that the rich-gets-richer phenomenon will help us from here. -- Sundar \பேச்சு 05:53, 16 ஆகஸ்ட் 2005 (UTC)
Hi thamizhpiriyan , i could not find user:madrazz in en wikipedia. So I am posting here. I am happy to inform u that we have crossed the 1000 article mark now. The rate of creation of new articles is slow partly due to the reason that all the currently active editors are quality writers and concentrate in writing comprehensive articles rathere than creating just stubs as may be the case in other fast growing wikipedias. also, we are involved a lot in organising TWpedia from the scratch and evolving a better tamil user interface. By the way, Marathi is not a lesser language..I belive that those people are as spirited as Tamizh makkaL. With enthusiasts like u I hope that TWpedia will grow at a faster rate from now on. For tamil typing help see WP:SB--ரவி (பேச்சு) 08:51, 16 ஆகஸ்ட் 2005 (UTC)

தமிழ் விக்கிபீடியா தற்போது 1000 கட்டுரைகளைத் தாண்டியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆயிரம் கட்டுரைகளில் ஏராளமான குறுங்கட்டுரைகள் இருக்கின்றன. முழுமையாக மொழி பெயர்க்கப்படாத கட்டுரைகளும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் முழு அளவுத் தமிழ்க் கட்டுரைகளாக வளர்த்து எடுக்க வேண்டியுள்ளது. ஆயிரம் தாண்டிய உற்சாகத்தோடு மேலும் உழைப்போம். ஹிந்தி, மராட்டி போன்றவற்றை எட்டிப்பிடிப்பது பெரிய விடயமல்ல. ஆங்கில மொழியிலுள்ளது போல இலடசக்கணக்கில் தமிழிலும் கட்டுரைகள் வேண்டும்.

தமிழ்ப்பிரியன் மராட்டி மொழியில் உள்ளதைவிடத் தமிழில் ஏன் கட்டுரைகள் குறைவாக இருக்கின்றன என்று கேட்டிருக்கிறார். மராட்டி மொழி குறைந்த மொழியல்ல. அதுவும் வளமுள்ள மொழிதான். கட்டுரைகளின் எண்ணிக்கைகளைக் கூட்டுவது கஷ்டமானதல்ல. குறுங்கட்டுரைகளை அதிக அளவு உருவாக்குவதன் மூலம் கட்டுரை எண்ணிக்கையை விரைவில் கூட்டமுடியும். பல மொழிகளில் இவ்வாறு செய்கிறார்கள். ஆரம்பத்தில் நானும் பல குறுங்கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். பின்னர் அவற்றை விரிவு படுத்தியும் இருக்கிறேன். தமிழில் கட்டுரை எழுதுபவர்கள் பயனுள்ள விபரங்கள் அடங்கிய கட்டுரைகளை எழுதுவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்கள் ஏனைய இந்திய மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழிலேயே நீளமான கட்டுரைகள் அதிக விகிதத்தில் உள்ளன. கடந்த மே மாதத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களிலிருந்து எடுக்கப்பட்ட விபரங்கள் சிலவற்றை கீழே தருகிறேன். இவை தமிழ் விக்கிபீடியாவின் ஆரோக்கியமான வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

விபரம் - தமிழ் - ஹிந்தி - சமஸ் - மராட்டி - தெலுங்கு
கட்டுரை எண்ணிக்கை (அதிகாரபூர்வ) - 665 - 1200 - 1100 - 1000 - 180
கட்டுரை எண்ணிக்கை (மாற்று முறை) - 586 - 426 - 733 - 161 - 132
ஒரு கட்டுரைக்கான சராசரி பைட்டுகள் - 5508 - 1592 - 1902 - 882 - 2990
கட்டுரைகள் 0.05 kb க்கு மேல் - 71% - 22% - 46% - 10% - 41%
கட்டுரைகள் 2.0 kb க்கு மேல் - 26% - 7% - 6% - 3% - 11%
தரவுத்தள அளவு - 3.6M - 2.5M - 6.7M - 0.76M - 0.64M
சொற்கள் - 185K - 119K - 124K - 32K - 29K
உள் இணைப்புகள் - 13.0K - 8.3K - 4.0K - 0.145K - 1.2K
படிமங்கள் - 560 - 229 - 65 - 55 - 24

இது பல வகையிலும் தமிழ் விக்கிபீடியா முண்ணணியில் இருப்பதைத்தான் காட்டுகிறது. இந்த நிலையை நாங்கள் பாதுகாத்துவர வேண்டும். கட்டுரைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும் அதே நேரம் அவற்றின் தரத்தை அதிகரிக்கவும் முயல வேண்டும். கடந்த மே மாதம் வரை விக்கிபீடியா புள்ளிவிபரங்களைக் கிரமமாக வெளியிட்டு வந்தார்கள். ஆரம்பத்தில் மேற்கண்ட விடயங்களில் தமிழ் விக்கிபீடியாவின் நிலையை உயர்ந்த மட்டத்தில் பேணுவதற்கு இவ்விபரங்கள் மிகவும் உதவியாக இருந்தன இப்போது இவ்விபரங்கள் இற்றைப்படுத்தப் படுவதில்லை. Mayooranathan 20:49, 16 ஆகஸ்ட் 2005 (UTC)


Any Unicode font should doPraise from a user தொகு

[ copied from en:User talk:ஜீகபோ ] -- Sundar \பேச்சு 07:24, 18 நவம்பர் 2005 (UTC)Reply[பதிலளி]

The Tamil at ta.wikipedia is impressive. Refreshingly high quality. Thank you for your effort. -- Priya.