விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/தொகுப்பு02

Natkeeran 21:01, 11 ஜூன் 2008 (UTC) தொகு

 • en:Geothermal
 • en:Geothermal heating
 • en:Demand responsive transport or on demand bus
 • en:Arcology
 • bowling
 • juggling
 • curling
 • en:Pocket billiards
 • stand up comedy
  • மேடைச் சிரிப்புரை (மேடைப் பேச்சு என்பது போல)
 • instrumentation
  • அளவீட்டு சமைதியம் (சமைதியம் = system); அளவீட்டு ஒருங்கியம் (ஒருங்கியம்=system); அளவீட்டு அமையம்.
 • brain and cognitive sciences
  • மூளையும் குறிப்புணர்வியலும்; மூளை, குறிப்பறிவியல்
 • management - நிர்வாகம், மேலாண்மை, முகாமைத்துவம் ?
  • மேலாண்மை, முகாமை, முகமை; முகமையம்
 • physical education
  • உடற்பயிற்சி செய்கல்வி
 • gender
  • பால் (ஆண்பாலா, பெண்பாலா; அலியா, பேடியா, அரவாணியா..)

பரிந்துரைகள். --செல்வா 03:42, 16 ஏப்ரல் 2008 (UTC)Reply[பதில் அளி]

விலங்குகள் அழிவு-காப்புநிலை பற்றிய சொற்களுக்கான பரிந்துரைகள் தொகு

 • Lower risk = குறைந்த தீவாய்ப்பு
 • Least Concern species = தீவாய்ப்புக் கவலை இல்லை
 • Near Threatened species = அருகும்தருவாயில் உள்ளவை
 • Conservation Dependent = காப்புநிலையைப் பொருத்தது
 • Vulnerable species = அழியும் வாய்ப்புநிலையில் உள்ள இனம்; அழிவாய்ப்பு இனம்
 • Endangered species = அருகிவிட்ட இனம்; அருகியுள்ள இனம்
 • Critically endangered species = அருகும் எல்லையில் உள்ள இனம்>>> மிக அருகிவிட்ட இனம்; மிக அருகியுள்ள இனம்
 • Species extinct in the wild =இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்
 • Extinct species =அற்றுவிட்ட இனம்; முற்றழிவுற்ற இனம்
 • Possibly Extinct ==அற்று இருக்கக்கூடியது
 • Critically Imperiled = நிலைமாறி அழிவுற உள்ளன >>>மிக அழிசரிவுற்றது
 • Imperiled = அழிசரிவுற்றது
 • Vulnerable = அழிதருவாயில் உள்ளன; அழிவுறக்கூடியன; அழிவாய்ப்புடையன
 • Apparently Secure = நிலைபெற்றுள்ளதாகக் கருதப்ப்படுகிறது
 • Secure = நிலைபெற்றுள்ளது; நிலை ஊன்றியுள்ளது
 • Presumed Extinct = அற்றுவிட்டதாகக் கருதப்படுவன
 • Nationally Critical == நாட்டளவில் அழியவுள்ளது
 • Nationally Endangered ==நாட்டளவில் அருகிவிட்டது
 • Nationally Vulnerable = நாட்டளவில் அழிவுறக்கூடியன; நாட்டளவில் அழிவாய்ப்புள்ளன
 • Serious Decline = மிகவும் குறந்தநிலை; வலுவான சரிவு; பெருஞ்சரிவு
 • Gradual Decline = சிறுகச்சிறுகக் குறைதல்; மெதுவான சரிவு
 • Sparse = ஐது; ஐதாக உள்ளது; விலத்தி
 • Range Restricted = வாழிடம் சுருங்குதல்

--செல்வா 03:28, 16 ஏப்ரல் 2008 (UTC)Reply[பதில் அளி]

Critically endangered species எனபதற்கு மிக அருகிவிட்ட இனம்; மிக அருகியுள்ள இனம் என்பதும் Critically Imperiled மிக அழிசரிவுற்றது எனவும் எழுதினால் சரியாக இருக்குமா? -- −முன்நிற்கும் கருத்து Trengarasu (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
பரிந்துரைகள் நன்று, செல்வா. ஒவ்வொன்றிலும் நீளத்தில் குறைந்த சொற்றொடர்கள் நன்று. மற்றவர்கள் கருத்தை அறிந்து வார்ப்புருவை மாற்றிவிடலாம். -- சுந்தர் \பேச்சு 15:02, 16 ஏப்ரல் 2008 (UTC)Reply[பதில் அளி]

டெரன்சு, Critically imperiled என்பதற்கு மிக அருகிவிட்ட அல்லது மிக அழிசரிவுற்ற என்று கூறலாம். சுந்தர், இவை முதல்நிலை பரிந்துரைகளே. எடுத்து வழங்கத்தொடங்கினால், தேவையான மாற்றங்களைத் தானே எய்தும். Gradual Decline என்பதற்கு மெதுசரிவு என்று சொல்லலாம், ஆனால் கடினமாக உள்ளதென்று நினைப்பார்களோ என்று சற்றி நீட்டியே சொற்களை இட்டுள்ளேன். நாட்டளவில் என்பதை நாட்டிடையே, (அல்லது நாட்டுள்) என்றும் சொல்லலாம். இது பற்றி சற்று உரையாடினாலும், சொற்கள் திருத்தமுறும், செப்பம் அடையும். டெரன்சுக்கும் உங்களுக்கும் நன்றி.--செல்வா 15:17, 16 ஏப்ரல் 2008 (UTC)Reply[பதில் அளி]

ஆம், வேண்டுமானால் பின்னர் திருத்திக்கொள்ளலாம். இதன் சுருக்கங்களையும் தமிழ்படுத்தினால் படிமம்:Status iucn3.1 EN.svg போன்றவற்றையும் மொழிபெயர்த்துவிடலாம். உயிரியல் பகுப்பு ஒரு முற்காட்டுதலாக அமைய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 15:25, 16 ஏப்ரல் 2008 (UTC)Reply[பதில் அளி]
படத்தில் Threatened என்று உள்ளதற்கு அழிவச்சம் என்று சொல்லலாம் (அதாவது அழிவஞ்சு நிலை).--செல்வா 16:30, 16 ஏப்ரல் 2008 (UTC)Reply[பதில் அளி]

கணிதத்தில் மாடுலோ என்னும் சொல்லாட்சி தொகு

பேரா வி.கே அவர்கள் சமானம், மாடுலோ n என்னும் சொல்லை Congruence modulo n என்பதற்கு ஈடாக ஆண்டுள்ளார். விக்சனரியில் தமிழ் இணைய பல்கலைக்கழகச் சொல்லாட்சியில் இருந்து மட்டுக்கூட்டல் என்னும் சொல்லை modulo addition என்பதற்கும், எஸ். மட்டுச் சாவசமம் என்னும் சொல்லை modulo-s congruence என்பதற்கு ஈடாகவும் இங்கு கொடுத்துள்ளார்கள். (எஸ். மட்டுச் சர்வ சமம் என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்). மாடுலோ என்பதற்கு நாம் ஏன் மீதி, மிச்சம், எச்சம், எஞ்சி இருப்பது என்னும் அடிப்படையில் சொல்லாக்கி ஆளலாகாது? 38 என்பதை   என்று எழுதும் பொழுது 38 என்பது 2 மீதகம் 12 என்று கூறலாமே. மீதகம் என்பதற்கு மாறாக (அல்லது பகராக) மீதியம் என்றும் கூறலாம். அதாவது 38 ஐ 12 ஆல் வகுத்தால் மீதி இருப்பது 2. இதனைக் குறிக்க 2 மீதியம் 12 எனலாம். மட்டு என்னும் சொல்லை என்ன பொருளில் ஆண்டுள்ளார்கள் என்று விளங்கவில்லை. மாடுலோ என்று ஆள்வதில் எனக்கு மறுப்பு இல்லை. கூடவே பொருல் விளங்குமாறு தமிழ்ச்சொல் ஒன்றும் இருத்தல் நல்லது என்பது என் கருத்து. மட்டுக்கூட்டல் என்பதை விட மீதியக் கூட்டல், மீதகக் கூட்டல், மீந்தியக் கூட்டல் (மீந்தியம்) என்று ஏதேனும் பொருள் விளங்குமாறு இருக்கலாமே! --செல்வா 23:51, 25 நவம்பர் 2008 (UTC)Reply[பதில் அளி]

மட்டு எனப்து முழுதாக கழிக்கப்பட்டபின் என்னும் பொருளில் ஆக்கி இருக்கலாம். முழுதாக பலமுறை ஓர் எண்ணால் வகுத்தபின் எஞ்சி இருப்பது என்பதும் பொருள் தருவதே. இந்நோக்கில் 2 மட்டு 12 என்று கூறலாம். --செல்வா 03:08, 13 ஜூலை 2010 (UTC)
மீந்திய, மட்டு இரண்டும் நன்றாக உள்ளது. முந்தையது உடனடியாகப் பொருள் காட்டும் வகையில் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 09:16, 13 ஜூலை 2010 (UTC)

Moral Hazard தொகு

moral hazard, market fragmentation, short selling, tranche, amortisation போன்ற ஊகவணிகம் தொடர்பான தொடர்களின் தமிழாக்கம் என்ன?--Sodabottle 09:21, 2 ஜூலை 2010 (UTC)

Three Gorges Dam தொகு

விக்சனரியில் Gorge என்பதற்கு ஆழ்பள்ளத்தாக்கு; மலையிடுக்கு; மலையிடைச்சந்து என்று பொருள் கொடுத்துள்ளார்கள். எனவே இதை மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை எனலாமா? வேறு தகுந்த சொல் பயன்படுத்தலாமா? சீனத்தில் எப்படி அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை --குறும்பன் 02:51, 22 ஜூலை 2010 (UTC)

ஆங்கிலத்தில் வரும் Titles of Nobility (duke, baron, earl, marquess, viscount) தமிழில் எப்படி எழுதுவது. பொதுவாக அனைத்து துரைகளையும் “பிரபு” என்றே இதுவரை தமிழ் எழுத்தாளர்கள் குறிப்பிட்டுவந்துள்ளார்கள் (எ. கா. பக்கிங்காம் பிரபு). இப்படியே நாமும் குறிப்பிடலாமா இல்லை “ட்யூக், பாரன், இயர்ல், மார்க்வேஸ், விஸ்கவுன்ட்” என்று தமிங்கலத்தில் குறிப்பதா?--சோடாபாட்டில் 14:02, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

duke, baron, earl, marquess, viscount என்பன பெருமைப்படுத்தும் விருது என்றால் அப்படியே பயன்படுத்தலாம் (நோபல் பரிசாளர், நோபலியர் போல), ஆனால் இவை ஒருவகையான பதிவிகள்-சிற்றரசன், மன்னர், குறுமன்னர், வேள், குறுநிலவேள் போன்றவை என்றால் வேறுவிதமாகவும் பயன்படுத்த முடியும். டியூக் எனும் நிலையில் உள்ள சிற்றரசன் அல்லது பிரித்தானிய சிற்றரசன் என விரித்துக் கூறலாம். வைக்கவுண்ட் அல்லது வைக்கௌண்ட் (viscount) என்பது ஏர்ல், கௌண்ட் அல்லது கவுண்ட் நிலைக்குக் கீழானது என்பதால் கவுண்ட்டை என்ன சொல்லி அழைப்போமோ அதன் துணைக்கவுண்ட் என்று கூறலாம். ஏர்ல் முதலானவற்றைக் குறிக்கும்பொழுது பிரித்தானிய வேள் என்றுகூடச் சொல்லலாம். பிரித்தானிய கோ, கோன், குறுங்கோ, குறுங்கோன் இப்படி...பிரித்தானிய மரபுசார்ந்த உள்நாட்டு உள்ளளட்சித் தலைமைகளின் பெருமைப்பெயர்கள் இவை. நோபிள்கள் என்பவர்கள் சான்றோர்கள் என்பதாகக் கொள்கை(ஆனால் தமிழில் சான்றோர் என்பது சற்று வேறு பொருளில் வழங்குவது). பொதுவாக ஒரு பண்பாட்டில் உள்ள பெயர்களை மற்றொரு பண்பாட்டில் ஏற்றிச்சொல்வது கடினம். எனினும் பொருள் விளங்குமுகமாக தமிழில் சொல்லும் தேவை இருக்கலாம். பிரிதானிய வேள் என்று ஒரு நிலையில் உள்ள தலைவனைக் குறித்தால், அடுத்து, பெருவேள், குறுவேள், என்று குறைந்தது 3 நிலைகளை வகுக்கலாம். பிரித்தானியக் குறுந்தலைவன் என்றால், மேல் குறுந்தலைவன், கீழ்க்குறுந்தலைவன் எனலாம். இப்படி ஏதேனும் ஒரு முறையைச் சீராகப் பயன்படுத்தினால் பயனுண்டு. டியூக், பேரன் (அல்லது உபேரன், பே'ரன்), ஏர்ல், மார்க்குவிசு, வைக்கவுண்ட், நைட் என்றும் அழைக்கலாம். ஆங்கிலத்தில் ஏர்ல் என்பதற்கு பெண்பால் இல்லையாம், நாம் தமிழில் ஏர்லி எனலாம் :) --செல்வா 14:50, 1 ஆகஸ்ட் 2010 (UTC)


மதிப்பிற்குரிய நண்பர் செல்வா அவர்களுக்கு அன்பு வணக்கம்!

மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம் பற்றிய உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியாவில் அங்கங்கே படித்திருக்கிறேன். உங்களுடைய அந்தக் கருத்துகள்தாம் என்னுடைய கொள்கைகளும்!

ஆனால் மேலே நீங்கள் கூறியிருக்கும் கருத்தோடு நான் மரியாதையுடன் மாறுபடுகிறேன். ஏனென்றால் எல்லாருக்கும் பொதுவான சொற்களுக்குத்தான் கலைச்சொல்லாக்கம் செய்ய வேண்டும். மாறாக தனிப்பட்ட ஒரு நாட்டுக்கோ மொழிக்கோ பண்பாட்டுக்கோ இனத்துக்கோ உரிய சொற்களுக்குக் கலைச்சொல் ஆக்கினால் அவை மொழிக்குத் தேவையில்லாத சுமையாக அமையும். மொழியியலாளர்கள் இதை ஆதரிக்க மாட்டார்கள். மேலும் நீங்களே மேலே சொல்லி இருக்கிறீர்கள், மற்றவர்களின் பண்பாட்டுக்கு உரிய சொற்களை நம் மொழியில் ஏற்றிச் சொல்வது கடினம் என்று. ஆனால் பொருள் விளங்குவதற்காக அவ்வாறு செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். பொருள்விளக்கம் வேண்டுமென்றால் அடைப்புக்குறிக்குள்ளோ அடிக்குறிப்பிலோ குறிப்பிடலாமே? அதற்கென்று ஒரு கலைச்சொல்லை ஆக்குவது தேவைதானா?

அதே நேரம் இச்சொற்களை ஒலிபெயர்த்துப் பயன்படுத்தும்படி நீங்கள் குறிப்பிட்டிருப்பதையும் நான் படிக்காமல் இல்லை. ஆனால் இப்படி அடுத்தவர் பண்பாட்டுக்குரிய சொற்களுக்குக் கலைச்சொல்லாக்கம் செய்வது தவறு என்ற கருத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பி. கு: குறுங்கோன், குறுவேள், கீழ்த் தலைவன் போன்ற சொற்களெல்லாம் தமிழில் கிடையாது. ஆனால் இப்படிப்பட்டவர்களைக் குறிக்க குறுநிலவேளான், குறுநில உடையார், பெருநில உடையார், கிழார் போன்ற சொற்கள் வழக்கிலிருந்தன.

அன்புடன்: --இ.பு.ஞானப்பிரகாசன் 13:05, 5 ஆகஸ்ட் 2010 (UTC)


வணக்கம். விக்கிப்பீடியாவில் எழுதும்பொழுது தொடக்கவரியில் முதலில் இடம் விடாமல் எழுத வேண்டுகிறேன். வரியின் முதல் சொல்லுக்கு முன் இடம் இருக்க வேண்டும் என்று கருதினால் ஒரு முறையோ பல முறையோ   என்னும் மீசுட்டுமொழிக் (HTML) குறியீட்டை இடலாம். உங்கள் கருத்து புரிகின்றது, ஆனால் duke, baron, earl, marquess, viscount, knight போன்ற சொற்களைத் தமிழில் எப்படிக் குறிக்கலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என்று கூறுங்கள், கூடி சிந்தித்துப் பார்க்கலாம். குறுக்கோன், குறுவேள் என்றெல்லாம் தமிழில் சொற்கள் (இதுகாறும்) கிடையாது என்பது உண்மைதான், ஆனால் தேவையெனில் ஆக்கிக்கொள்ளலாம்தானே ? இலக்கணப்படி மைந்த , பொருள் சுட்டும் எந்தச்சொல்லும் தமிழில் ஏலும்தானே? பிரித்தானியக் குறுங்கோன், பிரித்தானியக் குறுவேள் என்று சேர்த்திக் கூறலாம். இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அதாவது அவர்கள் குமுகத்தில் உள்ள (பெரியோர்/செல்வாக்குடையோர்) பெருமைப் படிநிலைகளை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள் என்று கூறுங்கள். இப்படிப் பல்வேறு குமுகங்களிலும் உண்டே. என்ன செய்யலாம்? --செல்வா 14:16, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

திரு.செல்வாவுக்கு பதில் தொகு

நட்பார்ந்த திரு.செல்வா அவர்களுக்குப் பணிவன்பான வணக்கம்!

ஆகத்து 5க்குப் பின் இன்றுதான் விக்கிப்பீடியாவுக்கு வர முடிந்தது. எப்படி இருக்கிறீர்கள்?

'நோபில்' பதவிகள் பற்றி மேலே விவாதித்துக் கொண்டிருந்தோம். இப்படிப்பட்ட பதவிகள் தமிழ்ப் பண்பாட்டில் இல்லாவிட்டாலும் பல்வேறு குமுகங்களிலும் இருப்பதால் இவற்றைத் தமிழில் குறிக்கத் தனிச் சொற்கள் தேவைதான் என்கிறீர்கள். அப்படியானால் சரி ஐயா.

ஒரு குறிப்பிட்ட பண்பாட்டில் மட்டுமே இருக்கிற சொற்களுக்காக நம் மொழியில் நாம் தனிச் சொற்கள் ஆக்கினால் அது பிற மொழிக் குறியீட்டுச் சொற்களுக்குக் கலைச்சொல் ஆக்குவது போன்ற முயற்சியாக அமைந்துவிடும் என்பதால்தான் நான் முதலில் இதை மறுத்துரைத்தேன். ஆனால் நீங்கள் கூறுவது போல் பல்வேறு குமுகங்களிலும் இப்படிப்பட்ட பதவிகள் இருக்கின்றன என்றால் இச்சொற்களுக்குத் தமிழில் கலைச்சொல்லாக்கம் செய்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை; உடன்பாடே! மகிழ்ச்சியே!

அன்புடன்: இ.பு.ஞானப்பிரகாசன் 11:18, 3 செப்டெம்பர் 2010 (UTC)


வேள் போன்ற சொற்களுக்குத் தமிழில் சிறப்பான பொருள் உண்டு. எனவே இவற்றுக்குத் தொடர்பில்லாத பிற பண்பாட்டுக் கருத்துருக்களுக்கு இவ்வாறான சொற்களைப் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது எனது கருத்து. எடுத்துக்காட்டாக, January என்பதை தை என்று குறிப்பிடாமல் சனவரி என்றே குறிப்பிடுகின்றோம் அதுபோல டியூக்கு (அல்லது இடியூக்கு), பாரன் என்றே குறிப்பிடுவதுதான் நல்லது. இச்சொற்கள் தமிழ் மொழிக்குள் வேரூன்றிப் பரவும் வாய்ப்புக்களும் இல்லை. -- மயூரநாதன் 13:45, 3 செப்டெம்பர் 2010 (UTC)
மயூரநாதன், ஞானப்பிரகாசன், வணக்கம். நான் மேலே ஆகத்து 1, 2010 இல் முதலில் இட்ட கருத்தை அருள்கூர்ந்து பார்க்க வேண்டுகிறேன். அப்படியே பயன்படுத்தலாம் என்று முதலிலும் இறுதிப் பகுதியிலும் கூறியுள்ளேன். தேவை என்றால், எப்படிக் கூறக்கூடும் என்று கூறினேன். பிரித்தானிய-, இடேனிய- (danish), முதலான முன்னொட்டுகள் இட்டுக் குறித்து வந்தால் குழப்பம் ஏதும் வராது (ஆனால் அப்படிக் கூற வேண்டும் என்று கூறவில்லை!!). டியூக்கு அல்லது இடியூக்கு, பேஆரன் (எகர-ஆகார (æ) ஒலியை இப்படியும் குறிக்கலாம். குறிக்க வேண்டும் என்று கூறவில்லை!! குறிக்கலாம்.) என்றெல்லாம் சீராக எல்லா இடத்திலும் குறித்து வரலாம். நம் விக்கிப்பீடியர்கள் எப்படி முடிவெடுத்தாலும் எனக்கு உவப்பே.--செல்வா 15:29, 3 செப்டெம்பர் 2010 (UTC)

Strategic Vs Tactical தொகு

ராணுவ வரலாறு தொடர்பான கட்டுரைகளில் strategy, tactic ஆகிய சொற்களுக்கு இணையான தமிழ்சொற்கள் தேவை. மற்ற இடங்களைப் போலல்லாமல் போர் விஷயங்களில் இவற்றுக்கு மாறுபட்ட அர்த்தம் வரவேண்டும். (எ. கா) ஒரு சண்டையில் ஒரு தரப்புக்கு tactical victory கிடைக்கலாம் ஆனால் அம்முடிவே அதற்கு strategic defeat அகவும் அமைய வாய்ப்புண்டு. பெருவுத்தி சிறுவுத்தி என்று மொழிபெயர்க்கலாம் என்று நினைத்தேன் ஆனால் இவை சரி என்று தோணவில்லை. --சோடாபாட்டில் 15:33, 14 செப்டெம்பர் 2010 (UTC)

--Natkeeran 00:40, 15 செப்டெம்பர் 2010 (UTC)

விக்‌ஷனரியின் தேடிப்பார்த்தவனுக்கு இங்கு தேடிப்பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லையே. ;-). மிக்க நன்றி நற்கீரன்.--சோடாபாட்டில் 03:43, 15 செப்டெம்பர் 2010 (UTC)