விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/தொகுப்பு03

declaration of warதொகு

என்பதற்கு போர் பிரகடனம் என்று தற்போது பயன்படுத்தி வருகிறேன். வேறு நல்ல தமிழ்த் தொடர் உள்ளதா?--சோடாபாட்டில் 18:57, 4 அக்டோபர் 2010 (UTC)

declaration என்பதற்கு சாற்றுதல் என பொருள் கொடுத்துள்ளார்கள். போர் சாற்றுதல் என்பது சரியாக இருக்கும் என தோன்றுகிறது. --குறும்பன் 14:39, 7 அக்டோபர் 2010 (UTC)
நல்லா இருக்கு.. “பறை சாற்றுதல்” ல வர்ர மாதிரி... பயன் படுத்திக்கிறேன்.

Creative Commonsதொகு

 • Creative Commons
 • Attribution (CC-BY)
 • Attribution Share Alike (CC-BY-SA)
 • Attribution No Derivatives (CC-BY-ND)
 • Attribution Non-Commercial (CC-BY-NC)
 • Attribution Non-Commercial Share Alike (CC-BY-NC-SA)
 • Attribution Non-Commercial No Derivatives (CC-BY-NC-ND)

--Natkeeran 02:29, 7 அக்டோபர் 2010 (UTC)

 • பொறி என்பது பொதுச் சொல்லாக உள்ளது. எரி பொறி என்பது பொருந்துமா? எல்லா எஞ்சின்களும் எரி பொறிகள் அல்லவே ??
engineக்கு எந்திரம் (இயந்திரம்) என்றும் சொல்லலாம். காட்டு-internal combustion engine = உள்ளெரி எந்திரம் அல்லது உள்ளெரி பொறி.--இரா. செல்வராசு 08:22, 14 நவம்பர் 2010 (UTC)

Boiler vs. Furnaceதொகு

Boilerக்குக் கொதிகலன் எனவும் Furnaceக்கு உலை என்றும் சொல்லலாம் என நினைக்கிறேன். தற்போது அவ்விரண்டு கட்டுரைகளும் ஒன்றையே குறிக்கின்றன (கொதிகலனை). தவிர உலை கட்டுரையில் மின் ஆலை படம் உள்ளது. --இரா. செல்வராசு 08:26, 14 நவம்பர் 2010 (UTC)

இதனைத் தமிழில் எழுதுவது பல வகையாகக் கையாளப்பட்டிருக்கிறது. காலரி, கேலரி, கலோரி... முதன்மைக் கட்டுரை இன்னும் உருவாக்கப் படவில்லை எனவே நினைக்கிறேன். கலோரியில் கட்டுரையை ஏற்படுத்தி, காலரி, கேலரியை வழிமாற்றிவிடலாமா? (கேலரி=Gallery என்றும் சில இடங்களில் இருப்பதால் கூடுதல் குழப்பம் உண்டாகும்). --இரா. செல்வராசு 08:39, 14 நவம்பர் 2010 (UTC)

கலோரி யை முதன்மையாக்கி காலரியை வழிமாற்றாக்கலாம்--சோடாபாட்டில் 18:23, 15 நவம்பர் 2010 (UTC)

Motion captureதொகு

 • Motion capture
 • Gesture recognition
 • dyneme
 • Feature extraction
 • image processing
 • kinematics

--Natkeeran 17:46, 19 திசம்பர் 2010 (UTC)

Immunity தொடர்பான சொற்கள்தொகு

ஆலமரத்தடியில் சொற்களை சரிபார்க்க உதவி தேவை] என்ற தலைப்பில் இருந்த கலந்துரையாடலை, இங்கே மாற்றியுள்ளேன்.

கீழ் காணும் சொற்கள் - சரியா எனக்கூறவும் - நந்தகுமார்

Immunology - எதிர்ப்பியல் Immune system - எதிர்ப்பு அமைப்பு Antigen - எதிர்ப்பி Antibody - எதிர்ப்பான் Immunity - நோயெதிர்ப்பு Vaccinology - தடுப்பாற்றலியல் Autoimmune diseases - தன்னெதிர்ப்பு நோய்கள் Immune complex - எதிர்ப்பு இணைவு

 • எனது உயிரியல் அறிவுக்கு எட்டியபடி அனைத்துச் சொற்களும் சரியானவையே நந்தகுமார். நீங்கள் விக்சனரியில் இவற்றைத் தேடிப் பார்க்கலாமே! விக்சனரி --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 10:36, 17 ஏப்ரல் 2011 (UTC)
சூர்யா, நந்தகுமார் இதனை விக்சனரி கோரப்பட்ட சொற்கள் பக்கத்தில் தான் இட்டிருந்தார். நான் தான், நமது உயிரியல் திட்டப்பயனர்களின் கருத்தைத் தெரிந்து கொள்ள இங்கு இடும்படி வேண்டுகோள் விடுத்திருந்தேன் (இங்கு ஆலமரத்தடியில் தற்போது உயிரியல் உரையாடல்கள் நடந்து கொண்டிருப்பதால், இதுவும் பல பேர் கண்ணில் படும் என்று நினைத்து)--சோடாபாட்டில்உரையாடுக 13:27, 17 ஏப்ரல் 2011 (UTC)

இலங்கையில் Immunology - நிர்ப்பீடனவியல், Immune system - நிர்ப்பீடனத்தொகுதி முதலான சொற்களைப் பயன்படுத்துகிறோம். இவை தூய தமிழ்ச் சொற்களா என்பது தெரியவில்லை.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 10:56, 17 ஏப்ரல் 2011 (UTC)

 • இலங்கை வழக்கில் உள்ள நிர் என்பது நிர்மூலம், நிர்தாட்சண்யம் போன்ற ஏராளமான சொற்களில் வரும் "இல்லை" என்னும் பொருள் தரும் சமசுக்கிருத முன்னொட்டு (இதனாலேயே நான் நிர்வாகம் என்பதை, நிருவாகம் என்று எழுதப் பரிந்துரைப்பது.. நில், நிற்பது என்பதால் நிறுவாகம் என்றும் சொல்லலாம்..). "-பீடனவியல்" என்பதும் பொருள் விளங்கவில்லை. எனவே இலங்கையில் வழங்கும் இச்சொற்களுக்கு மாறாக பிற நல்ல தமிழ்ச்சொற்கள் தேர்ந்தெடுப்பது நல்லது. கீழ்க்காணும் பரிந்துரைகளை எண்ணிப்பாருங்கள் (பலவும் நந்தகுமார் கூறியதே):
 • Immunology - நோயெதிர்ப்பியல்
 • Immune system - நோயெதிர்ப்பியம்
 • Antigen - எதிர்ப்பி, எதிர்க்கூறு
 • Antibody - எதிர்ப்பான்
 • Immunity - நோயெதிர்ப்பு, நோயெதிர்ப்பாற்றல்
 • Vaccinology - தடுப்பாற்றலியல், நோய்த்தடுப்பூட்டியல் (தடுப்பு ஊட்டு இயல்)
 • Autoimmune diseases - தன்னெதிர்ப்பு நோய்கள்
 • Immune complex - எதிர்ப்பு இணைவு, எதிர்ப்பிய அணைவம், எதிர்ப்பிய இணைமம்

--செல்வா 13:03, 17 ஏப்ரல் 2011 (UTC)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!!! நோயெதிர்ப்பியல் (infection and immunity) மற்றும் தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) ஆகியவற்றை உள்ளடக்கியிருப்பதால், எதிர்ப்பியல் (Immunology) என்பது சரி என்பது என் எண்ணம். மேலும் உரையாடுக. இச்சொற்கள் சரியாயின் இவை குறித்து எழுத விழைகிறேன் - நந்தகுமார்.

சூரிய பிரகாசுக்கு, தமிழ் விக்சனரியில் கீழ் கண்டவாறு பொருள் உள்ளது. சில சொற்கள் கடினமாக (அல்லது) பொருள் மயக்கமாக உள்ளதால் மேற்கூறிய சொற்களை எழுதியிருந்தேன்.

 • Immunology - தடுப்பாற்றலியல்; தடுப்பாற்றியல்; தடுப்புத்திறனியல்
 • Immune system - நோய் எதிர்ப்பு மண்டலம்;நோய் எதிர்புத் தொகுதி
 • Antigen - உடற் காப்பு ஊக்கி; எதிர்ச்செனி; பிறபொருளெதிரியாக்கி; எதிரியாக்கி
 • Antibody - உடற்காப்பு மூலம்; எதிர்ப்பொருள்; பிறபொருளெதிரி
 • Immunity - நோய் எதிர்ப்புத் திறன்; நோய்த் தடுதிறன்; நோய்த் தடைக் காப்பு
 • vaccinology -
 • Autoimmune diseases -
 • Immune complex - நோய்எதிர்ப்பிகளின் கூட்டு

- நந்தகுமார்

செல்வா கூறியதன்படி நிர்பீடனம் உகந்த சொல் அல்ல என்பது புரிகின்றது. நோயில் இருந்து காத்தல் ("protection from disease") என்பது ஆங்கிலத்தில் உள்ள கருத்து, எனினும் நோயை எதிர்த்தல் என்பதும் ஒன்று, செல்வாவின் பரிந்துரைகள் நன்று,
 • Immune system - நோயெதிர்ப்பியம்  , நோய் எதிர்ப்புத்தொகுதி என்றும் அழைக்கலாம் அல்லவா?
எனது பரிந்துரை:
 • Antigen - காவுடலாக்கி,
 • Antibody - காவுடல்
விளக்கம்:

Antigen என்பது antibody generator [Anti(body) + Gen] ; Antigen ஒன்று உடலில் புகுவதால் antibody உருவாக்கப்படுகின்றது. எதிர்ப்பி, எதிர்ப்பான் என்பது சரியே எனது பரிந்துரையின்படி சற்று இவற்றின் தொழிலை எண்ணிப்பார்த்தால்,

antibody என்பது உடலில் காக்கும் தொழில் புரிகிறது, மேலும் அவை சிறுதுணிக்கைகள் போன்றவை. எனவே எனது பரிந்துரை காக்கும் + உடல் = காவுடல் (இங்கு உடலைக் காக்கும் என்றும் எடுக்கலாம் அல்லது காக்கும் உடல் (protecting particle) என்றும் கருதலாம்).
antigen என்பது ஏற்கனவே கூறியது போல ( antibody generator [Anti(body) + Gen]) என்பதால் காவுடலாக்கி எனலாம்.--சி. செந்தி 20:31, 17 ஏப்ரல் 2011 (UTC)

செல்வாவின் விளக்கத்துக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 22:44, 17 ஏப்ரல் 2011 (UTC) ஆனால், செந்தி அவர்களே, antibody can be protective as well as pathogenic. எனவே, பொதுபெயரான "எதிர்ப்பான்" "எதிர்ப்பி" சரியாக இருக்கும் என எண்ணினேன் - நந்தகுமார்.

நீங்கள் antibody - autoimmune பற்றிக் கருதுகின்றீர்கள் என நினைக்கிறேன், அப்படி ஒரு கருத்து எழுமெனில் "எதிர்ப்பான்" "எதிர்ப்பி" என்பதற்கு எனக்கு மறுப்பேதும் கிடையாது.--சி. செந்தி 18:40, 19 ஏப்ரல் 2011 (UTC)


ஏற்கனவே இந்த சொற்களில் சிலவற்றைப்பற்றி வெவ்வேறு இடங்களில் கலந்துரையாடியுள்ளோம். அத்துடன் சில கட்டுரைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள கட்டுரைகளையும் பாருங்கள்.


--கலை 21:09, 19 ஏப்ரல் 2011 (UTC)

ஏற்கனவே இங்கு உள்ளது, மேலும் அவை பொருத்தமானவைகளாகத் தோன்றுகின்றது (பிறபொருளெதிரி என்று தமிழில் இலங்கையில் படித்ததாக ஞாபகம்!); குழப்பம் இல்லாமல் இவையே எல்லாக் கட்டுரைகளிலும் பயன்படுத்தல் நன்று எனக்கருதுகின்றேன்.--சி. செந்தி 21:23, 19 ஏப்ரல் 2011 (UTC)

tropicalதொகு

அருள்கூர்ந்து பின்வரும் சொற்களின் கலைச்சொற்களைச் சரிபார்க்க உதவுங்கள்:

 • tropical zone = அயனமண்டலம், வெப்பமண்டலம்
 • subtropical zone = அயனவயல் மண்டலம் (அயன+அயல் மண்டலம்) , மிதவெப்பமண்டலம்
 • subtropical climate = மிதவெப்பமண்டல தட்பவெப்பம் (காலநிலை)
 • temperate zone = ??? (குளிர்நாடு?)
 • temperate climate =???
 • tropical disease = அயனமண்டல நோய்கள்
தமிழ் விக்சனரியில் subtropical, temperate இரண்டுக்கும் "மிதவெப்ப" என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. temperateக்கு இடைவெப்பநிலை என்னும் சொல்லும் அங்கு உள்ளது (இதுவும் பொருந்தாது என நினைக்கிறேன்)--சி. செந்தி 06:28, 29 ஏப்ரல் 2011 (UTC)
ஆங்கில விக்சனரி தரும் பொருள்
en:wikt:tropical - கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி
en:wikt:subtropical நிலநடுக்கோட்டிலிருந்து tropical பகுதியையும் தள்ளிய நிலப்பகுதி
en:wikt:temperate கடக,மகர ரேகைகளுக்கும் துருவங்களுக்கும் இடைப்பட்ட மிகுந்த வெப்பமும் மிகுந்த குளிரும் இல்லாத நிலப்பகுதி
எனவே முறையே அயன மண்டலம், அயன அயல் மண்டலம், மிதக் காலநிலை மண்டலம் என்பன பொருந்தும் எனக் கருதுகிறேன்.--மணியன் 07:51, 29 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி மணியன். மிதக் காலநிலை மண்டலம் என்று பயன்படுத்துகின்றேன்.--சி. செந்தி 14:07, 29 ஏப்ரல் 2011 (UTC)