விக்கிப்பீடியா:தள அறிவிப்பு
நோக்கம்
தொகுMediawiki:Sitenotice, Mediawiki:Anonnotice ஆகிய இரு பக்கங்களின் மூலம் தள அறிவிப்பு செய்வதன் மூலம் விக்கப்பீடியா பங்களிப்புகள் பற்றி பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
பின்னணி
தொகு"பிழையைத் திருத்தி உதவுங்கள்" பரப்புரையின் வெற்றியை தொடர்ந்து, இதனைப் போல் பல பரப்புரைகளை நாம் மேற்கொண்டால் விக்கிப்பீடியாவைப் பற்றிப் புரிதலை மேம்படுத்தலாம். நிரலின் மூலம் புகுபதிகை செய்தவர்களுக்குத் தனிப்பட்ட பரப்புரையும், அனானிகளுக்கு தனிப்பட்ட பரப்புரையும் நாம் மேற்கொள்ளலாம். இப்பக்கத்தைத் தள அறிவிப்புப் பரப்புரைக்கு மையமாக வைத்து, பரப்புரை வாசகங்களையும், படிமம் கொண்ட பதாகைகளையும் (banner) கூட்டாக முடிவு செய்து, மாதம் 1 அல்லது 2 முறை புதிய பரப்புரைகளை மேற்கொள்ளலாம். அனானிகளிடம் digital outreach செய்திகளையும், புகுபதிகை செய்த பயனர்களுக்கு கொள்கை / சூழல் விழிப்புணர்வு செய்திகளையும் வெளியிடலாம். ஒவ்வோர் பரப்புரைக்கும் ஒரு landing page தேவை.
பதாகைகள்
தொகுவிளைவுகள்
தொகு2011 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையில் இருந்து:
- களப்பரப்புரை நிகழ்வுகளைத் தவிர விக்கியின் தள அறிவிப்புகளில் விக்கியர்களின் ஒளிப்படங்களை இட்டு புதிய பயனர்களைக் கவரும் திட்டம் சூலை-நவம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட்டது. இவற்றின் தாக்கத்தை அளந்து கூற நேரடித் தரவுகள் இல்லையெனினும் இந்தக் காலகட்டத்தில் செயல்படும் பயனர்கள் எண்ணிக்கை 45% கூடியதை இவற்றின் வெற்றிக்கான ஒரு சான்றாகக் கொள்ளலாம்.[1]
புகுபதிகை செய்தவர்களுக்கான பரப்புரை யோசனைகள்
தொகு- பேச்சு பக்கங்கள் -- பயனர்களுடன் பேசுங்கள், கட்டுரைகளில் உரையாடுங்கள்.
- விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள்
- படிமங்கள் சேர்ப்பது எப்படி?
- உங்கள் படிமங்களை அளியுங்கள்
- கட்டுரைகளில் பிழை திருத்துங்கள்.
- முதற்பக்க கட்டுரைப் பரிந்துரைப்புகள்
- விக்கி செய்தித் திட்டத்துக்கான பரப்புரை
- விக்கி நூல்கள் திட்டத்துக்கான பரப்புரை
- விக்கிமூலம் திட்டத்துக்கான பரப்புரை
- இந்திய விக்கிமீடியா பிரிவுக்கு இணைப்பு?
- தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவு அறிமுகம் ?
- அவரவர் ஊர்களில் பயிற்சிப் பட்டறை நடத்த விருப்பமா என்று வினவல், அதற்கான விவரங்களைத் தரும் பக்கத்துக்கு இணைத்தல்.
- விக்கிப்பீடியா:முதற்பக்கக்_கட்டுரைகள், விக்கிப்பீடியா:இன்றைய_சிறப்புப்_படம்/2011 ஆகியவற்றுக்கு இணைப்பு தருவதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் சிறந்த படைப்புகளுக்கான பார்வைகளைக் கூட்டுதல்.
அனானிகளுக்கான பரப்புரை யோசனைகள்
தொகு- பிழையைத் திருத்தி உதவுங்கள்
- வாங்க பங்களிக்கலாம் -- கணக்கு தொடங்கி பங்களியுங்கள்.
- என் விக்கிப்பீடியா -- ஃபயர்ஃபாக்சு, குரோம் நீட்சிகள்
- விக்கிப் பக்கங்களை ஃபேசுபுக்கிலும் , ட்விட்டரிலும் குறுந்தொடுப்பு மூலம் பகிர்க
மேற்கோள்கள்
தொகு- ↑ 25 சூன், 2011 இல் தமிழ் விக்கியில் 30 நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளைச் செய்த பயனர்கள் எண்ணிக்கை - 193. டிசம்பர் 15, 2011 இல் அதே எண்ணிக்கை 284 ஆக உயர்ந்திருந்தது, wikistatistics.net