விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2011டிசம்பர் 28, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மாதுளை வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு செடி வகைசார்ந்த பழ வகையாகும். இதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகைகள் உள்ளன. 100 கிராம் மாதுளையில் 346 கிலோ யூல் ஆற்றல் கிடைக்கப்பெறும். இதன் தாயகம் பாரசீகம் மற்றும் இமயமலை சார்ந்த பகுதிகளாகும். இது இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்திற் பயன்படுகிறது. ஆஃப்கானிஸ்தானிலுள்ள கந்தகார் நகரம் அதன் சுவைமிகு மாதுளைகளுக்காகப் பெயர்பெற்றது. படத்தில் பிளந்து வைக்கப்பட்டுள்ள அடர் செந்நிறம் கொண்ட மாதுளை காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுடிசம்பர் 25, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

செயல்வழி நிலப்படம் என்பது நிலப்படம் மற்றும் செயல்வழிப் படம் ஆகியவற்றின் கூறுகளை தன்னிடத்து கொண்டுள்ள ஒரு வித நிலப்படம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பொருட்களின் நகர்வை படம்பிடித்துக் காட்டுகின்றது. மேலுள்ளது சார்லஸ் ஜோசப் மினார்டின் புகழ்பெற்ற செயல்வழி நிலப்படம். நெப்போலியனின் உருசியப் படையெடுப்பைக் காட்டுகிறது. நெப்போலியனின் படையிலிருந்த வீரர்கள் எண்ணிக்கை எப்படி நாட்கள் செல்லச் செல்ல குறைகின்றது; குளிர்காலத்தில் வெப்பம் குறையக் குறைய படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் மாண்டு, எப்படி படை அழிகின்றது என்பதை மினார்ட் விளக்குகின்றார்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுடிசம்பர் 21, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அப்பல்லோ 11 பயணத்திட்டம் நிலவில் இறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். இது அப்பல்லோ திட்டத்தில் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும். ஜூலை 16, 1969 அன்று அமெரிக்காவின் கேப் கனவரல் தளத்திலிருந்து ஏவப்பட்ட இது மூன்று விண்வெளி வீரர்களைத் தாங்கிச் சென்றது. அவர்களில் இருவர் - நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினர். படத்தில் ஆல்ட்ரின் நிலவில் நடப்பது காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுடிசம்பர் 18, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சுமைதாங்கி என்பது, சுமைகளைச் சுமந்து செல்வோர் அதனைப் பிறர் துணையின்றிச் சுலபமாக இறக்கி வைப்பதற்காக பாதை ஓரங்களில் கட்டப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் மேற்பகுதி ஒரே மட்டமாக இல்லாமல் தலையிலும் தோளிலும் சுமப்பவர்கள் இறக்கி வைப்பதற்கு ஏற்றாற்போல் பல்வேறு மட்டங்களில் அமைந்திருக்கும். கருவுற்ற பெண் குழந்தை பெறாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் நீங்கும் என்பது நம்பிக்கை. படத்தில் வழக்கமான ஒரு சுமைதாங்கிக் கல் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுடிசம்பர் 14, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தியனன்மென் சதுக்கம் சீன மக்கள் குடியரசின் தலைநகரம் பெய்ஜிங்கின் நடுப் பகுதியில் ஒரு சதுக்கம் ஆகும். 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இச்சதுக்கம் உலகில் மிகப்பெரிய நகர்ப்புற சதுக்கம் ஆகும். சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான இடம் ஆகும். சீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச்சதுக்கத்தில் நடைபெற்றுள்ளன. அவற்றுள் புகழ்பெற்றது 1989இல் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுடிசம்பர் 11, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

செங்குருதியணு அல்லது இரத்தச் சிவப்பணு முதுகெலும்புடைய விலங்குகளின் குருதியில் உள்ள உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும். இவையே இவ்விலங்குகளில் ஆக்சிசனை நுரையீரலிலிருந்து இழையங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. பிற்பாடு, இழையங்களிலிருந்து வெளியிடப்படும் கரியமில வாயுவையும் நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன. படத்தில் நோய் தொற்றினை அறிய அகார் தட்டுகளில் வளர்க்கப்படும் செங்குருதியணுக்கள்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுடிசம்பர் 7, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சி. என். கோபுரம், கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள 1976 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட கோபுரம் ஆகும். 2010 இல், புர்ஜ் கலிஃபா என்ற துபாய் கோபுரம் கட்டி முடிக்கப்படும் வரையில், 34 ஆண்டுகளாக, இது உலகின் மிக உயரமான கோபுரமாக திகழ்ந்தது. 553.33 மீட்டர்கள் உயரமுடைய இந்தக் கோபுரத்தின் அழகிய இரவுத் தோற்றத்தைக் காட்டும் படம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுடிசம்பர் 4, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
[[Image:|350px|{{{texttitle}}}]]

காது குத்துதல் என்பது பிறந்த குழந்தைகளுக்கு மொட்டையடித்துக் காதில் தோடணிவிக்கும் சடங்கு. இந்து சமயம் சார்ந்த தமிழர்களால் பின்பற்றப்படும் இவ்வழக்கம், அவர்கள் சாதியின் கட்டுப்பாடுகளுக்கேற்ப குலதெய்வக் கோவில்களிலோ அவர்கள் விரும்பும் கோவில்களிலோ செய்யப்படுகிறது. தற்போது கோவில்கள் தவிர்த்து வீடுகளில் கூட இது செய்யப்படுகிறது. பொதுவாகக் காதுகுத்தலின் போது குழந்தை தாய்மாமன் மடியில் அமரவைக்கப்பட்டு சடங்குகள் செய்யப்படுகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 30, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சாலட் பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். சலாது, கேரட், வெள்ளரி, சலரி, காளான், வெங்காயம் போன்ற காய்கறிகளும் அன்னாசி, மாம்பழம், வெண்ணெய்ப் பழம் போன்ற பழங்களும் பாதாம், மரமுந்திரி, வால்நட் போன்ற பருப்புகளும் கலந்து இது தயாரிக்கப்படும். பெரும்பாலும் பச்சையாக, பெரிதும் கொழுப்பு இல்லாத பொருட்களால் சாலட் செய்யப்படுவதால் உடலுக்கு நல்லது எனப்படுகிறது. படத்தில் வெதுப்பி கலந்த சாலட் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 27, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சாமுராய் வர்க்கத்தினர் தொழில்மயமாக்கத்திற்கு முற்பட்ட ஜப்பானிய படைத்துறையில் இடம்பெற்ற ஒரு குழுவினர். கி.பி. 7ம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை ஜப்பானிய படைத்துறையின் முதுகெலும்பாய் இருந்தவர்கள். ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, தன்கட்டுப்பாடு, போரில் தோல்வி ஏற்பட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் கையால் மாய்த்துக் கொள்வது போன்ற கட்டுக்கோப்பான சட்ட திட்டங்களுக்காகவும் போர்த் திறனுக்காகவும் இவர்கள் பரவலாக அறியப்பட்டனர். ஜப்பானின் அரசியலில் பல நூற்றாண்டுகளுக்கு சாமுராய் குழுக்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. படத்தில் ஒரு கவசமணிந்த சாமுராய் தன் நீண்ட வாளை உருவிய வண்ணம் நிற்கிறார்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 23, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நீல அச்சுப்படி என்பது, தொழில்நுட்ப வரைபடங்களைப் படியெடுக்கும் ஒரு குறிப்பிட்ட முறை மூலம் பெறப்படும் அச்சுப்படிகளைக் குறிக்கும். அண்மைக்காலத்தில் பெரிய அளவு தாள்களில் ஒளிப்படப்படிகள் எடுப்பதற்கான பொறிகள் பயன்பாட்டுக்கு வரும்வரை கட்டடக்கலை, பல்வேறு பொறியியல் துறைகள் போன்றவை சார்ந்த வடிவமைப்பு வரைபடங்களைப் படியெடுப்பதற்கு நீல அச்சுப்படி முறையே பயன்பாட்டில் இருந்து வந்தது. தொடக்க காலத்தில் இத்தகைய அச்சுப்படிகள் அடர்நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறக் கோடுகளையும் எழுத்துக்களையும் கொண்டதாக இருந்தன. இதனாலேயே இவற்றை நீல அச்சுப்படிகள் என அழைத்தனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 20, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

டெயிட் என்பது கேனரி தீவுகளிலுள்ள ஓர் எரிமலை ஆகும். இதன் உயரம் 3,718 மீ ஆகும். இதுவே ஸ்பெயினின் மிக உயர்ந்த பகுதியும் உலகின் மூன்றாவது பெரிய எரிமலையும் ஆகும். இந்த எரிமலை கடைசியாக 1909ஆம் ஆண்டு வெடித்தது. 18,900 எக்டேர் பரப்பளவு கொண்ட இம்மலையைச் சுற்றியுள்ள டெயிட் தேசியப் பூங்கா யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. படத்தில் வடக்கு திசையிலிருந்து இம்மலையின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 16, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஒளியணு (ஃபோட்டான்) என்பது ஓர் அடிப்படைத் துகளாகும். இது மின்காந்த இடைவினை, ஒளி மற்றும் அனைத்து பிற மின்காந்த கதிர்வீச்சுகளின் அடிப்படையான அலகளவாகக் கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படைக் கருத்துருவாக்கம் ஐன்ஸ்டீனால் உருவாக்கப்பட்டது. இது நிறையற்றது, மின்சுமையற்றது; மேலும் வெளியில் தானாகச் சிதைவுறாது. இது வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தில் செல்லக்கூடியது. படத்தில் இராணுவ வீரர் ஒருவர் சீரான லேசர் கற்றையிலிருந்து வெளிவரும் ஒளியணுக்களைப் பார்வையிடுகிறார்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 13, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

செவ்வந்திக்கல் நகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான குவார்ட்சு ஆகும். இது பிப்ரவரி மாதத்திற்குரிய பிறப்புக்கல். மேலும் இது செவ்வூதா நிறத்திலும் குவார்ட்சின் அளவே கடினத்தன்மையும் கொண்டதால் இதன் பெரும்பயன்பாடு நகைகளிலேயே உள்ளது. எக்ஸ் கதிர், காமா கதிர் முதலியவற்றைக் கொண்டு செயற்கைச் செவ்வந்திக்கற்கள் செய்யப்படுகின்றன. இவையும் இயற்கையான கற்களில் உள்ள அனைத்து இயற்பியல் வேதியியற்பண்புகளையும் பெற்றுள்ளன. பிரேசில், உருகுவே ஆகிய நாடுகள் செவ்வந்திக்கல் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 9, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சிவிங்கிப்புலி பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இது மணிக்கு 112 முதல் 120 கிமீ வேகத்தில் ஓடும். சிவிங்கிப்புலி மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இது தற்போது ஆப்பிரிக்காவில் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 6, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

யால்ட்டா மாநாடு‎ இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளான ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையே பெப்ரவரி 4, 1945 முதல் பெப்ரவரி 11, 1945 வரையில் இடம்பெற்ற உச்சி மாநாடு ஆகும். இதில் போர் முடிந்த பின்னால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல முக்கிய உடன்படிக்கைகள் ஏற்பட்டன. படத்தில் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட் மற்றும் ஜோசப் ஸ்டாலின் அமர்ந்திருக்கின்றனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுநவம்பர் 2, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கிரிஸ் கத்தி மலாய் தீவு கூட்டங்களில் வாழும் மக்களின் பாரம்பரிய கத்தியாகும். இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புரூணை, ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் முன்னர் பயன்படுத்தப்பட்ட போதிலும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. மற்ற கத்திகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இது வடிவத்தில் அதிகளவில் வேறுபட்டிருக்கும்; நெளிவு நெளிவாக முறுக்கியபடியான அமைப்பைக் கொண்டிருக்கும். இது இரும்பினால் செய்யப்படுகிறது. படத்தில் உள்ள கிரிஸ் கத்தியின் பிடியில் சாவகத் தொன்மவியல் பாத்திரமான செமாரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 30, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஹபிள் என்றழைக்கப்படும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும். அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. இது மிகப் பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றும் மிகச் சிறந்ததும் ஆகும். ஹபிள் காலவெளியில் நம்மைக் கடந்த காலத்திற்கு இட்டுச் செல்லும் காலப் பொறியாகவும் செயல்படுகிறது. படத்தில் ஹபிள் தொலைநோக்கியை மிக அண்மையில் எடுத்த படம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 26, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சென்னை புறநகர் இருப்புவழி சென்னை மாநகரத்தை அதன் புறநகர்ப் பகுதிகளுடன் இணைக்கிறது. 1930-ஆம் ஆண்டு வாக்கிற் செயற்படத் தொடங்கியது. பின் மேலதிக தொடருந்துப் போக்குவரத்து சேவையாக 1990 களிற் சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம் தொடங்கப்பட்டது. இடப்புறம் உள்ளது இவ்விரு சேவைகளின் வழித்தட வரைபடமாகும். புறநகர்த் தொடருந்து வழித்தடங்கள் பச்சை, நீல, சிவப்பு நிறங்களிலும் பறக்கும் தொடருந்து வழித்தடங்கள் செம்மஞ்சள் நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 23, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கிவி பழம் (பசலிப்பழம்) என்பது தோல் பச்சையாகவும் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழவகை ஆகும். இதில் A, C, E முதலிய உயிர்ச்சத்துகள் உள்ளன. இது தென் சீனத்தைத் தாயகமாகக் கொண்டது. மேலும் இது சீனத்தின் தேசியப் பழமாக உள்ளது. கிவி பழ உற்பத்தியில் இத்தாலி, நியூசிலாந்து, சிலி ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. முறையாகப் பாதுகாக்கப்பட்டால் பழுத்த கிவி பழம் இரு வாரங்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம். இது சீனத்தின் நெல்லி என்றழைக்கப்படுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 19, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

2011ஆம் ஆண்டு ஏற்பட்ட கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம் ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அறியப்படும் கென்யா, சோமாலியா, உகாண்டா முதலிய நாடுகளைக் கடுமையாகத் தாக்கி இன்றுவரை கிட்டத்தட்ட 29,000 பேர் இறந்துள்ளனர். கடுமையான வறட்சி, மனித உதவியின்மை போன்ற காரணங்களால் இப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோமாலியாவில் தொடர்ந்து வரும் தீவிரவாதமும் இதற்கான முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. இவ்விடங்களில் ஐ.நா.வும் இன்னபிற தன்னார்வல அமைப்புகளும் பல உதவிகள் செய்துவருகின்றன. தபாப் எனும் இடத்தை அடையப் பல நாட்கள் உணவின்றிப் பாலைவனத்தில் நடந்து இறந்த போன 70 குழந்தைகளைப் புதைத்த இடத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒரு சிறுமியின் படம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 16, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பிதாகரஸ் தேற்றம் என்பது ஒரு செங்கோண முக்கோணத்தின் மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் தேற்றம். இதனைக் கிரேக்க அறிஞர் பிதாகரஸ் கண்டுபிடித்தார் என்று நம்பப்படுவதால் அவரது பெயரில் வழங்கப்படுகிறது. இத்தேற்றத்தின்படி, "ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் இருமடி அதன் மற்ற இரு பக்கங்களின் இருமடிகளின் கூடுதலுக்குச் சமம் ஆகும்". படத்தில் a, b, c ஆகியவை முறையே இரு பக்கங்கள் மற்றும் கர்ணத்தின் நீளம் ஆகும். நிறுவலின் படி, c2 = a2 + b2 ஆகும். இந்நிறுவலின் வடிவியல் வழியிலான விளக்கம் இவ்வியங்குபடத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்வுறவைக் கொண்ட எண்களை பிதாகரஸின் மூன்றன் தொகுதி என்பர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 12, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மன்ஹாட்டன் நியூ யார்க் நகரின் ஐந்து பெரும் பிரிவுகளில் ஒன்று. ஒரு சதுர மைலுக்கு 71,201 பேர் வசிக்கும் இது உலகில் மிக மக்களடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா மற்றும் உலகத்தின் வர்த்தக, நிதிஆதார மற்றும் பண்பாட்டு மையமாகவும் மன்ஹாட்டன் விளங்குகிறது. அமெரிக்காவின் பெரும் வர்த்தக மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைமையகங்களும் ஐக்கிய நாடுகள் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளன. இவை தவிர பங்குச் சந்தைகள், புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இங்கு அமைந்துள்ளன. படத்தில் ராக்ஃபெல்லர் மையத்தின் உச்சியிலிருந்து மன்ஹாட்டன் நகரப் பகுதியின் அந்தி நேர விரிந்த காட்சி காணப்படுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 9, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
அடன்சோனியா கிரான்டிடியரி

அடன்சோனியா கிரான்டிடியரி மடகாஸ்கரின் மிகவும் புகழ்பெற்ற ஆறு பாஓபாப்களுள் (பெருத்த அடிபாகம் கொண்ட மரங்கள்) ஒன்று. தீவாய்ப்புள்ள இவ்வினம் அடன்சோனியா என்ற பேரினத்தைச் சார்ந்தது. இது மடகாஸ்கரின் அகணிய உயிரி ஆகும். இம்மரத்தின் பெயர் ஃப்ரெஞ்சு தாவரவியலாளர் ஆல்ஃப்ரெட் கிரான்டிடியரின் (1836-1921) பெயரிலிருந்து வைக்கப்பட்டதாகும். இம்மரத்தின் முழுமையான தோற்றம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 5, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஒன்பதாவது அலை எனும் ஓவியம் உருசிய ஓவியரான இவான் ஐவாசோவ்ஸ்கியால் 1850இல் வரையப்பட்டதாகும். இது ஓர் இரவு நேரப் புயலுக்குப் பின் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள உடைந்த கப்பலிலிருந்து கடலில் குதிக்கும் காட்சியை விவரிக்கிறது. இங்கு கடலுக்கு மிதமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது அது அச்சுறுத்தத் தக்கதாக இல்லை என்பதையும் உயிருக்குப் போராடுவோருக்கு வாழ ஒரு வாய்ப்பளிக்கும் விதமாகவும் இருப்பதை உணர்த்துகிறது. அலைகள் தொடர்ச்சியாக சிறிது சிறிதாகப் பெரிதாகி இறுதியாக மிகப் பெரிய ஒன்றாக உருவெடுக்கும். ஒன்பதாவது (அல்லது பத்தாவது) அலையில் அந்தத் தொடர் மீண்டும் தொடங்கும். இதைக் காரணமாகக் கொண்டே இது இப்பெயருடன் அழைக்கப்படுகிறது. இவ்வோவியம் "உருசியாவின் மிக அழகான ஓவியம்" என்றும் சில வேளைகளில் அழைக்கப்படுவதுண்டு.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஅக்டோபர் 2, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பெரும் பொருளியல் வீழ்ச்சி என்பது 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒரு உலகளாவிய பொருளாதார இறங்குமுக நிலையாகும். 1929 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச் சந்தைப் பெரும் சரிவால் உருவான இவ்வீழ்ச்சி சில ஆண்டுகளுக்குள் உலகெங்கும் பரவியது. உலக வணிகமும் அத்துடன் தனியார் வருமானம், வரி வருமானம், விலைகள், இலாபம் என்பனவும் ஆழமான பாதிப்புக்கு உள்ளாயின. லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பின்றி வறுமையில் ஆழ்ந்தனர். இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாகும் வரை இந்நிலை நீடித்தது. படத்தில் ஃபுளாரன்சு ஓவன்சு தாம்சன் என்ற அமெரிக்கத் தாயும் அவரது குழந்தைகளும் காணப்படுகின்றனர். வறுமையால் நாடோடிக் கூலியாட்களாக மாறிய இவர்களை 1936ல் டாரத்தியா லாஞ்சு என்ற ஒளிப்படக் கலைஞர் ஒளிப்படம் எடுத்தார். "புலம்பெயர்ந்த தாய்” என்று அழைக்கப்பட்ட இப்படம் பெரும் புகழ் பெற்று பெரும் பொருளியல் வீழ்ச்சியின் போது அமெரிக்க மக்கள் அனுபவித்த வறுமைக்கான சின்னமாக மாறியது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 28, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பண்பேற்றம் என்பது செயல்படுத்துவதற்கு சுலபமானதாக செய்திச் சமிக்ஞையை மாற்றம் செய்யும் செயல்முறையாகும். இது மற்றோர் அலைவடித்தோடு தொடர்புடைய அலைவடிவத்தை மாற்றச் செய்வதோடு தொடர்புகொண்டுள்ளது. ஓர் அலையைப் பண்பேற்றும் கருவி பண்பேற்றி என்றும், பண்பேற்றப்பட்ட அலையைப் படிக்கும் கருவி பண்பிறக்கி என்றும் அழைக்கப்படும். இவை இரண்டையும் செயல்படுத்தும் ஒரு கருவியே இணக்கி எனப்படுகிறது. படத்தில் ஒரு சமிக்ஞை எவ்வாறு அதிர்வெண் பண்பேற்றத்திலும் (FM) வீச்சுப் பண்பேற்றத்திலும் (AM) பண்பேற்றப்பட்டு இன்னோர் இடத்திற்குத் தகவலாக அனுப்படுகின்றது என்பது அசைவுப்படமாகக் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 25, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

புரோக்கோலி என்பது ஒரு முட்டைக்கோசுக் குடும்பத் தாவரமாகும். இதன் அடர்த்தியான உண்ணத்தக்க பகுதி, தடித்த தண்டில் இருந்து மரம்-போன்ற தோற்றத்தில் சீரான கிளைபரப்பிய குருத்துகள் முதலிய தோற்றப் பண்புகளைப் பெற்றுள்ளது. 2000 ஆண்டுகளாக இது காய்கறிகளுள் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் தோன்றிய இது 1806 இல் அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளுள் ஒன்றாக மாறியது. இதில் உயிர்ச்சத்துகள் , சி, கே ஆகியவை உள்ளன. இதன் உற்பத்தியில் உலக அளவில் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. படத்தில் புரோக்கோலியின் குறுக்குவெட்டுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 21, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கார்பன் நானோகுழாய்கள் என்பவை உருளைவடிவ நானோ கட்டமைப்பு உடைய கார்பனின் புறவேற்றுமைத்திரிவுகள் ஆகும். நானோகுழாய்கள் நீளம்-விட்டம் விகிதத்தில் வரை உருவாக்கப்படுகின்றன. இவை ஒற்றைச்சுவர் நானோகுழாய்கள், பலசுவர் நானோகுழாய்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. தற்போது இவை புறமின்தேக்கிகளிலும் இயக்கமுறை நினைவக மூலகங்களிலும் படச்சுருள்களிலும் உடலினுள் குறிப்பிட்ட இடத்தில் மருந்தைச் செலுத்தவும் ஒற்றைத் தாள் மின்கலங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. படத்தில் ஒற்றைச்சுவர் நானோகுழாயின் அசைவுப் படம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 18, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வின்சென்ட் வான் கோ ஒரு புகழ் பெற்ற டச்சு ஓவியர். பின்-உணர்வுப்பதிவுவாத பாணியிலான இவரது ஓவியங்கள் இவர் உயிருடன் இருந்த காலத்தில் புகழ்பெறவில்லை. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை படைத்த வான் கோ, தனது வாழ்நாளின் பெரும்பகுதி வறுமையில் உழன்றார். மனநிலை பாதிக்கப்பட்டு தனது 37வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். பிரகாசமான நிறங்களும் ஆழ்ந்த உணர்வுத் தாக்கமும் கொண்ட இவரது ஓவியங்கள் 20ம் நூற்றாண்டு ஓவியக் கலை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இன்று உலகில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இடப்புறம் உள்ள படம் வான் கோ தன்னைத் தானே வரைந்த ஓவியங்களுள் ஒன்று.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 14, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வெள்ளை மாளிகை அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் ஆகும். இது வாசிங்டன் டி. சி.யில் அமைந்துள்ளது. இது நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையில் அமைந்த மணற்கல் மாளிகையாகும். 1812ஆம் ஆண்டு போரின் போது இதன் சுற்றுச் சுவர் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் இது புதியதாகக் கட்டப்பட்டது. படத்தில் வெள்ளை மாளிகையின் தெற்கு நோக்கிய தோற்றம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 11, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

காட்மியம் ஓரளவிற்கு அரிதாகவே கிடைக்கக்கூடிய நீலம் கலந்த வெண்மை நிறமுடைய ஓர் உலோகம் ஆகும். இது பொதுவாக துத்தநாகம் உள்ள கனிமங்களுடன் கிடைக்கின்றது. இது புற்றுநோய் உண்டாக்கும் பொருட்களில் ஒன்றாககும். இது பெரும்பாலும் மின்கலங்களிலும், நெகிழி போன்ற பொருட்களில் நிறமிகளாகவும் பயன்படுகின்றது. தென் கொரியா, சப்பான் ஆகிய இரு நாடுகளிலும் இது அதிகமாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. படத்தில் காட்மியம் படிக வடிவிலும் கட்டி வடிவிலும் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 7, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

காற்றாலை என்பது, காற்றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். இவை காற்று உருவாக்கும் இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத தூய ஆற்றல் ஆகும். பழங்காலத்தில் இவற்றின் ஆற்றல் தானியங்களை அரைக்கவும், நீர் இறைக்கவும், மர அறுவைக்கும் பயன்பட்டது. தற்காலத்தில், இவை மின் உற்பத்திக்கே அதிகம் பயன்படுவதால் காற்றுச் சுழலிகள் என்றும் அழைக்கப்டுகின்றன. இந்தியாவின் காற்று வழி மின் உற்பத்தியில் தமிழ்நாடு 55% பங்கு வகிக்கிறது. படத்தில் கடல் நடுவில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசெப்டம்பர் 4, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கடற்சாமந்திகள் என்பவை நீர்வாழ் கொன்றுதின்னும் விலங்குகள் ஆகும். இவை பார்ப்பதற்குச் சாமந்தி மலரைப் போன்று இருப்பதால் கடற்சாமந்திகள் என்று அறியப்படுகின்றன. இவை பவளப்பாறைகள், ஜெல்லி மீன்கள், ஹைட்ரா போன்ற பாலிப் உயிரினங்களோடு மரபியல் தொடர்புடையவை. இவை 4 மிமீ முதல் 2 மீ வரை வளரக் கூடியவை. இவற்றில் சில வகைகள் அடித்தளத்தில் ஒட்டியபடியும் சில வகைகள் மிதந்தபடியும் இருக்கின்றன. இவற்றில் சிறப்பான உணர் உறுப்புகள் இல்லை.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 31, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

எரிகற்குழம்பு (லாவா) என்பது எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பைக் குறிக்கும். இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700 °C முதல் 1200 °C வரை இருக்கும். இக்குழம்பின் பாகுநிலை நீரினை விட சுமார் மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறைக் குழம்பு வெகுதூரம் உறையாமல் ஓடக்கூடியது. படத்தில் கிட்டத்தட்ட 10 மீ உயரத்தில் பீய்ச்சி அடிக்கும் எரிகற்குழம்பு காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 28, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நாய்ச்சண்டை என்பது வான்போரில் ஈடுபடும் சண்டை வானூர்திகள் பங்கேற்கும் ஒரு சண்டை வகை. பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்கள் இச்சண்டையில் பங்கேற்கின்றன. பங்கேற்கும் விமானங்கள் அருகில் எதிரி விமானங்கள் உள்ளன என்பதை உணர்ந்தே சண்டையில் ஈடுபடுகினறன. குறுகிய எல்லைக்குள் அதிவேகத்தில் நடக்கும் இச்சண்டையின் இலக்கு எதிரி விமானத்தை வீழ்த்துவதே. இதற்காக துப்பாக்கிகள், ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை விமானங்கள் பயன்படுத்துகின்றன. நாய்க்கூட்டங்கள் மூர்க்கத்துடன் சாகும்வரை ஒன்றையொன்று தாக்கிச் சண்டையிடுவது போல இந்த சண்டை முறை அமைந்திருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. படத்தில் அமெரிக்க வான்படையின் இரு எப்-18 போர் வானூர்திகள் நாய்ச்சண்டைப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 24, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது யாழ்ப்பாணத்தில் நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை. இவ்வாலய மகோற்சவம் இருபத்தைந்து நாட்கள் நடைபெறும். ஆவணி மாத அமாவாசையன்று தீர்த்தமும் முதல் நாள் தேர்த்திருவிழாவும் நடைபெறும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 21, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆம்ஸ்டர்டாம் நகரில் 1869ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக வரைபடம். ஜெரார்டு வான் சாகன் எனும் நிலப் பட வரைவியலாளரால் வரையப்பட்ட இந்த வரைபடம் தாமிரத்தைச் செதுக்கி உருவாக்கப்பட்டது. இவ்வரைபடத்தில் ஆசிய ஆப்பிரிக்கக் கண்டங்கள் தனி வட்டப் பகுதியிலும் வட தென் அமெரிக்கக் கண்டங்கள் தனி வட்டப் பகுதியிலும் புவியின் இரு துருவங்களும் இரு தனி வட்டப் பகுதிகளிலும் காட்டப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 17, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆகாயகங்கை அருவி தமிழ் நாட்டில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீசுவரர் கோவிலுக்கு அருகில் இந்த அருவி உள்ளது. அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது. படத்தில் அருவியின் முழுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 14, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பிளாட்டினம் ஒரு வேதியியல் தனிமம். இதனைத் தகடாகவும் கம்பியாகவும் மாற்றலாம். பளபளப்பேறும் வெண் சாம்பல் நிறமுடைய எடைமிகுந்த உலோகம். தங்கம் போலவே விலை உயர்ந்த நகை அணிகள் செய்யவும் மின் கருவிகளில் உறுதியான மின்னிணைப்புதரும் மின் முனைகளாகவும் தானுந்துகளில் இருந்து வெளியேறும் வாயுக்களிலுள்ள சூழலுக்குக் கேடு தரும் கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்களின் நச்சுத்தன்மையைக் குறைக்கவும் இது பயன்படுகின்றது. படத்தில் உருக்கித் திண்மமாக்கப்பட்ட பிளாட்டினம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 10, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சீதா முதன் முதலில் வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் விளைந்த அனோனா என்ற தாவர இனம். இது 8 மீ உயரம் வளரக்கூடிய குறுமரமாகும். அனோனா இனங்களில் இதுவே உலகில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில் இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் சீதாப் பழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 7, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

புத்தகப்புழு 1850 இல் செருமனிய ஓவியரும் கவிஞருமான கார்ல் இசுப்பிட்சுவெக் என்பவரால் வரையப்பட்ட எண்ணெய் வண்ண ஓவியம். இவ்வோவியம் நெப்போலியப் போர்களுக்கும், 1848 ஆம் ஆண்டின் புரட்சிக்கும் இடைப்பட்ட காலத்து ஐரோப்பாவின் உள்நோக்கிய, பழமைவாத மனப்போக்கைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதே நேரம், பரந்த உலகில் சுற்றிலும் நடப்பது பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் கல்விமான் ஒருவரினூடாக அவ்வாறான மனப்போக்கைக் கேலியும் செய்கிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஆகஸ்டு 3, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

2004ஆம் ஆண்டு சுமத்ரா தீவின் வடமேற்குக் கரையில் ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக எழுந்த ஆழிப்பேரலையின் விளைவாக இந்தியா உட்பட 6 நாடுகளில் மொத்தமாக பேர் உயிரிழந்தனர். இந்த இயங்குபடத்தில் நிலநடுக்கம் உருவான இடத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவிய விதம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூலை 31, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அல்கம்பிரா என்பது தெற்கு எசுப்பானியாவில் உள்ள கிரெனடாவின் இசுலாமிய ஆட்சியாளர்களால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாளிகை, கோட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுதி. ஒரு காலத்தில் கிரெனடாவின் முசுலிம் ஆட்சியாளர்களின் இருப்பிடம் ஆக இருந்த இவ்விடம் இன்று எசுப்பானியாவின் புகழ் பெற்ற இசுலாமியக் கட்டிடக்கலைப் பாணியிலான கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. அல்கம்பிரா யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூலை 27, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நெப்டியூன் ஸ்பியர் நடவடிக்கை என்பது மே 1, 2011 இல் பாக்கித்தான் அப்பாட்டாபாத்த்தின் நகர்ப்பகுதியில் மறைந்திருந்த அல் கைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட நடவடிக்கை. கண்காணிப்புக்குப் புலப்படாத அதிநவீன உலங்கு வானூர்திகள் மூலம் பின் லாடன் தங்கியிருந்த வீட்டைத் தாக்கிய அமெரிக்க ”நேவி சீல்” அதிரடிப்படையினர், பின் லாடனை சுட்டுக் கொன்றனர். அவரது உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கடலில் அடக்கம் செய்யப்பட்டது. படத்தில் வெள்ளை மாளிகையின் நிலவர அறையில் அதிபர் பராக் ஒபாமாவுடன் அமெரிக்க அரசின் உயரதிகாரிகள் பின் லேடன் வீடு மீதான தாக்குதல் பற்றிய செய்திகளுக்காகக் காத்திருக்கின்றனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூலை 24, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கருவாடு என்பது உப்பு தடவப்பட்டு வெயிலில் உலர்த்தப்பட்ட மீன் இன்ன பிற கடல்வாழ் உயிரினங்களைக் குறிக்கும். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட மீன்கள் நெடுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனால், இவற்றைக் கடலில் இருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு எடுத்துச் சென்று உணவிற்காக விற்பனை செய்ய முடிகிறது. படத்தில் உலர வைக்கப்பட்டுள்ள மீன்கள் காட்டப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூலை 20, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சனி சூரியக் குடும்பத்தில் ஆறாவதாக அமைந்துள்ள கோள். இது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரியது. அடர்வு குறைவான கோள்களுள் ஒன்று. இதற்கு 61 துணைக்கோள்கள் உள்ளன. இக்கோள் அதன் வளையங்களுக்காகவே சிறப்பாக அறியப்படும். இவ்வளையங்களை கலீலியோ கலிலி கண்டுபிடித்தார். புற ஊதாக் கதிர் மூலம் எடுக்கபட்ட படம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூலை 17, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மட்பாண்டக் கலையில் தேர்ந்தவர்கள் குயவர்கள். இப்பெயர் தொழிலையும் சாதியையும் சார்ந்த ஒரு பெயராகும். பொதுவாக, ஒரு சக்கரத்தில் ஈரக் களி மண்ணை வைத்துச் சுழற்றித் தேவையான பாங்கில் வனையும் போது பானை கிடைக்கிறது. அளவு, வடிவம் இவற்றைப் பொறுத்து, செய்யும் முறைகளிலும் சிறிது மாற்றங்கள் ஏற்படும். படத்தில் ஈரக் களி மண் கொண்டு பானை வனையும் குயவர் காட்டப்பட்டுள்ளார்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூலை 13, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பை என்ற கணித மாறிலியின் வரையறையைக் காட்டும் ஓர் இயங்குபடம். ஓரலகு விட்டமுடைய வட்டத்தின் மூலம் ஓர் எண் கோடு வரையப்படுகிறது. சுழியத்தில் தொடங்கி அவ்வட்டம் அதன் பரிதியைக் கொண்டு "பிரிபடுகிறது". மூன்று முழு சுற்றுக்குப் பிறகு சிறிதளவு நீட்டிய பகுதி மீதம் இருக்கிறது. இம்மூன்று முழு சுற்றுகளுடன் நீட்டிய அப்பகுதியினையும் சேர்த்து π என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வெண் மெய்யெண் ஆனால், விகிதமுறாதது. இதன் தோராய மதிப்பு 22/7 என்று பழங்காலத்திலும் 3.14 என்று நவீன காலத்திலும் மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வெண்ணின் துல்லியமான மதிப்பு இன்னும் முடிவுசெய்யப்படாத ஒன்றாகவே உள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூலை 10, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பொற்கோவில் என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அம்ரித்சர் நகரில் அமைந்துள்ள சீக்கிய மதத்தவரின் கோவிலாகும். இது நான்காவது சீக்கிய குருவான குரு ராம் தாசால் 1585இல் கட்டத் தொடங்கப்பட்டு, 1604ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவிலின் மேற்கூரையை பேரரசர் ரஞ்சித் சிங் பொன்னால் வேய்ந்தார். படத்தில் பக்தர் ஒருவர் கோவிலை சுற்றி அமைந்துள்ள சரோவர் புனித ஏரியில் நீராடிவிட்டு வரும் பின்னணியில் பொற்கோவில் உள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூலை 6, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஹவாய் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். இது ஒரு தீவுக்கூட்டம். ஐக்கிய அமெரிக்காவின் முதன்மையான நிலப்பகுதியிலிருந்து 3700 கி.மீ. தூரத்தில் வட பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஒனலுலு. இது ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது. படத்தில் செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்பட்ட இத்தீவுக் கூட்டத்தின் படம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூலை 3, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஏறுதழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டு. இது தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வடதமிழகத்தில் வடம் ”மஞ்சுவிரட்டு” என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயலுகின்றனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூன் 29, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

முத்துத் தோட்டுடனான சிறுமி நெதர்லாந்து ஓவியர் வெர்மீரின் மிகச் சிறந்த ஓவியங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்வோவியம் வரையப்பட்ட பின்னணி, படத்தில் உள்ள பெண் யார் என்பது போன்ற விவரங்கள் அறியப்படவில்லை. எனினும் இது உலகப் புகழ்பெற்ற ஓவியங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இதன் பெயர் குறிப்பதுபோலவே இதில் வெர்மீர் பெண்ணின் காதில் உள்ள முத்துத் தோட்டை ஒரு குவியப்புள்ளியாகப் பயன்படுத்தியுள்ளார். இந்த ஓவியம் தற்போது, ஹேக் நகரில் உள்ள மோரித்சுயிஸ் எனப்படும் அருங்காட்சியகத்தில் உள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூன் 26, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கெப்லர்-11 என்பது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன். இந்த விண்மீனைக் குறைந்தது ஆறு புறக்கோள்கள் குறைந்த சுற்றுப்பாதையுடன் சுற்றிவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக 2011, பெப்ரவரி 2 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இது பூமியில் இருந்து ஏறத்தாழ 2,000 ஒளியாண்டுகள் தூரத்தில், சிக்னசு என்ற விண்மீன் குழுவின் திசையில் அமைந்துள்ளது. நாசாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படத்தில் கெப்லரும் அதன் புறக்கோள்களும் காட்டப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூன் 22, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
[[Image:|225px|{{{texttitle}}}]]

இரண்டாம் உலகப் போரில் மே 10, 1940ல் நாசி ஜெர்மனியின் படைகள் பிரான்சு மீது படையெடுத்தன. பிரான்சு சண்டை என்றழைக்கப்பட்ட இப்படையெடுப்பில் அவை மின்னலடித் தாக்குதல் என்ற புதிய தாக்குதல் உத்தியைப் பயன்படுத்தி நேச நாட்டுப் படைகளை எளிதில் முறியடித்தன. ஜூன் 22ம் தேதி பிரான்சு சரணடைந்தது; படத்தில் இச்சரணடைவை ஏற்க பாரிசுக்கு வந்த இட்லர், தனது தளவாடத்துறை அமைச்சர் ஆல்பர்ட் இசுப்பியருடன் (இடது) நிற்கிறார். பின்னணியில் ஈஃபெல் கோபுரம் உள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூன் 19, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டில் உள்ளது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள். ஆபிரகாமிடமிருந்து மரபுவழி வருகின்ற சமயங்களாகிய யூத சமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது. படத்தில் எருசலேம் நகரின் பரந்த தோற்றம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூன் 15, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பாம்பன் பாலம் பாக்கு நீரிணையில் இராமேசுவரத்தையும் இந்தியாவின் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பாலம். இப்பெயரில் தரைப்பாலம், தொடருந்துப் பாலம் இரண்டும் அழைக்கப்பட்டாலும், பொதுவாகப் படத்தில் காணப்படும் தொடருந்துப் பாலத்தையே இப்பெயரால் குறிப்பிடுவர். இதுவே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் பாலமாகும். இதன் நீளம் 2.3 கிமீ.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூன் 12, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அரவிந்தர் இந்திய விடுதலைப் போராட்ட வீரராய் இருந்து, பின் ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டவர். இவர் கொல்கத்தாவில் பிறந்தவர். கேம்பிரிட்சில் படிக்கும்போதே புரட்சிகர சிந்தனைகளைக் கொண்டிருந்தார். 1893இல் இந்தியா திரும்பி விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் புதுச்சேரி சென்று விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகி ஆன்மீகத்தில் ஈடுபட்டார். அக்காலகட்டத்தில் பாரதியாரோடு நட்பு கொண்டிருந்தார். இவர் சாவித்திரி காவியம் எனும் நூலைப் படைத்துள்ளார்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஜூன் 5, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சைவர்களின் முதன்மைக் கடவுளாகிய சிவனின் இன்னொரு தோற்றமே நடராசர் திருக்கோலம். நடராசர் ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலை, படத்தில் காணப்படுகிறது. இத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை படைத்தலையும், அடைக்கலம் தரும் கை காத்தலையும், தீச்சுவாலை அழித்தலையும், தூக்கிய கால் அருளல் ஆகிய முத்தி நிலையையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 29, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சிகாகோ பெருந்தீ சிகாகோ நகரில் நடைபெற்ற பெரும் தீ விபத்து. 1871, அக்டோபர் 8 இல் எரிய ஆரம்பித்து, அக்டோபர் 10 வரை தொடர்ந்து எரிந்தது. நூற்றுக்கணக்கானவர்களை எரித்து சிகாகோவின் நான்கு சதுர மைல்களில் உள்ள அனைத்தையும் எரித்து நாசப்படுத்தியது இத்தீ. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய தீயான இதனால் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டாலும் நகரத்தின் புனரமைப்பு வெகு வேகமாக செய்யப்பட்டது. சிகாகோவின் கொடியில் உள்ள இரண்டாம் நட்சத்திரம் இப்பெரும் தீயினைக் குறிக்கிறது. இந்நாள் நாள் வரை இந்தத் தீ உருவான காரணம் அறியப்படவில்லை.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 22, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கூழைக் குரங்கு என்று அழைக்கப்படும் கருப்பு-வெள்ளை கொலோபசுக் குரங்கு ஆப்பிரிக்காவில் வாழும் குரங்கு இனம். இதில் ஐந்து வகைகள் உள்ளன. இது தென்னாப்பிரிக்காவைத் தவிர்த்து அக்கண்டத்தின் பிற பகுதிகளில் இயற்கையாகவே காடுகளில் வாழ்கின்றது. இக்குரங்குக்குக் கட்டைவிரல் ஏறத்தாழ இல்லாமல் இருக்கும். இது இலை தழைகளையும் பூக்களையும் பழங்களையும் உண்கின்றது. பகலில் உணவுண்டு நடமாடும் இனம். இது சிறு குழுக்களாக மரத்துக்கு மரம் தாவி உணவு உண்டு வாழ்கின்றன. படத்தில் காட்டப்பட்டுள்ளது போர்வை குவேரேசா எனும் வகையாகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 15, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
[[Image:|260px|{{{texttitle}}}]]

குருதியருவி என்பது கிழக்கு அண்டார்க்டிக்காவில் உள்ள டெய்லர் பனியாற்றின் நுனியில் செம்பழுப்பு நிறத்தில் வெளிப்படும் உப்புநீர் வடிவு ஆகும். இந்நீரில் இரும்பு ஆக்சைடு கலந்திருப்பதால் சிவப்பு நிறம் தோன்றுகிறது. இக்குருதியருவி டெய்லர் பனியாற்றிலிருந்து கிழக்கு அண்டார்க்டிக்காவில் விடோரியா லாண்டு என்னும் இடத்தில் மக்மர்டோ உலர் பள்ளத்தாக்கு பகுதியில் டெய்லர் பள்ளத்தாக்கில் உள்ள பனி மூடிய மேற்கு பானி ஏரி மீது விழுகின்றது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 8, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தமிழ்நாட்டுப் புறத்திலிருந்து அகத்தியமலையின் பரந்த தோற்றம். இம்மலைமுடி மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. இதன் உயரம் 1,868 மீட்டர்கள். நெய்யாறு கானுயிர்க் காப்பகத்தின் ஒரு பகுதியான இது, தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆறு இம்மலையில் தோன்றி திருநெல்வேலி மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது. இம்மலையின் கேரளப்பக்கப் பகுதிகள் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மூலம் மழை பெறுகின்றன. ஆனால் தமிழகப் பக்கத்தில் மழைக்காற்று வருவதை இம்மலை தடுத்து விடுவதால், மழை மறைவுப் பகுதி ஒன்று உருவாகி, வறண்டு காட்சி அளிக்கிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமே 1, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஓஊ (ʻōʻū) என்பது ஹவாய் தீவுகளிலுள்ள தனிச் சிறப்பான மிக அருகிவிட்ட ஒரு பறவையினம் ஆகும். இதனைப் பற்றி மிக அண்மைக் காலத்திய பதிவுகள் எதுவும் கிடைக்கப் பெறாமையால், இது ஒரு வேளை முற்றாக அற்றுப்போயிருக்கலாம். ஹவாய்த் தீவுகளின் ஆறு பெருந்தீவுகளில் முன்னர் பரவி வாழ்ந்த இப்பறவையினம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே எண்ணிக்கையில் குறைவடையத் தொடங்கியது. இப்பறவை 1989ஆம் ஆண்டு கடைசியாக கௌவாய் பகுதியில் காணப்பட்டது பதியப்பட்டுள்ளது. படத்தில் கீழிருப்பது ஆண் பறவை, மேலே இருப்பது பெண் பறவையாகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 24, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

செவ்வாய் சூரியக் குடும்பத்திலுள்ள நான்காவது கோள் ஆகும். இது சிவப்புக் கோள் என்றும் அழைக்கப்படுகிறது. நாசாவின் மரைனர்-4 எனும் விண்கலம் முதன்முதலில் செவ்வாய்ப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. அதன்பின்னர் சோவியத் ஒன்றியம் மட்டுமே வெற்றிகரப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் முயற்சி 2004ஆம் ஆண்டு தோல்வியில் முடிந்தது. வருங்காலத்தில் பல நாடுகள் செவ்வாய்க்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டம் வகுத்துள்ளன. படத்தில் காட்டப்பட்டுள்ளது செவ்வாயின் குசேவ் கிரேட்டர் எனுமிடத்திலிருந்து மே 19, 2005 அன்று ஸ்பிரிட் விண்கலத்தால் எடுக்கப்பட்டச் சூரிய மறைவுக் காட்சி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 17, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இலங்கை வேடர்கள் என்போர் இலங்கை காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையைப் பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர். இவர்கள் பேச்சு மொழி தற்போது இலங்கையில் வாழும் ஏனைய சமூகத்தினரின் மொழியில் இருந்து வேறுப்பட்டது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கும் அதேவேளை, திராவிட மொழிகளை ஒத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தற்காலத்தில் வேடர்களில் பெரும்பான்மையானோர் இலங்கையின் ஏனைய சமூகத்தவருடன் இணைந்து கலந்து தற்கால வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். அண்மைக் காலங்களில் இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு ஏனைய சமூகத்துடன் இணைக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 10, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இறம்புட்டான் சப்பின்டேசி குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பல்லாண்டுத் தாவரமாகும். தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டு மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, இலங்கை முதலான நாடுகளில் பரந்து காணப்படுகிறது. இப்பழத்தில் பழுப்பு நிறம் கொண்ட கொழுப்பும் எண்ணெயும் நிறைந்த விதை இருக்கிறது. இது சமையலிலும் சோப்பு தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இறம்புட்டானின் இலைகளும் தண்டுகளும் வேர்களும் மருத்துவத்திலும் சாயத் தொழிலும் பயன்படுத்தப்படுகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுஏப்ரல் 3, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ரோசுமேரி என்பது தடித்த வாசம்மிகு பசுமை மாறா, ஊசி போன்ற இலைகளைக் கொண்ட பல்லாண்டு வாழக்கூடிய வாழக்கூடிய ஒரு மூலிகைத் தாவரமாகும். மத்தியத் தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது புதினா குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது. ரோசுமேரியில் காணப்படும் கார்னோசிக் அமிலமானது மூளை சம்மந்தப்பட்ட நரம்பியல் நோய்களைத் தடுக்கக் கூடியது என்று அறியப்பட்டுள்ளது. மேலும் இதன் பொடியானது புற்றூக்கிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது இதன் பூக்கள் வெண்மை, இளஞ்சிவப்பு, ஊதா, நீலம் போன்ற நிறங்களை உடையவையாக இருக்கும். படத்தில் உள்ளது பொதுவாகக் காணப்படக்கூடிய நீல நிற மலர் ஆகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச்சு 27, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நீர்நிலைகளிலோ நீர்பரப்புகளிலோ மிதந்து வாழும் உயிரினங்கள் மிதவைவாழிகள் அல்லது அலைவாழிகள் என அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் நீர்வாழ் பேருயிர்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. இவற்றில் சிறிய நுண்ணுழையாட்கள் முதல் பெரியதான சொறிமுட்டை வரை அடங்கியுள்ளன. இவை எதன் துணையும் இன்றி நீர்போன போக்கில் நகர்ந்துகொண்டே வாழக்கூடியவை. படத்திலுள்ளது 1-2 மி.மீ. உயரமுடைய கோப்பாட் எனும் இரு உணர்கொம்புகளும் முட்டையுருவும் கொண்ட ஒரு மிதவைவாழி ஆகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச்சு 20, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நீலான் நடு இந்தியா, வட இந்தியா, தென் நேபாளம், கிழக்கு பாக்கித்தான் பகுதிகளில் மிகப்பெரும் அளவில் காணப்படும் மான் இனம். ஆசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே நீலான் உருவ அளவில் மிகப் பெரியது. நன்கு வளர்ந்த ஆண் நீலான் குதிரையின் உருவத்தை ஒத்திருக்கும். இதன் உடல் நீலம் கலந்த நிறத்தில் இருப்பதால், இது நீலான், நீலமான், நிலகைமான் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. படத்தில் இருப்பது நன்கு வளர்ந்த ஓர் ஆண் நீலான் ஆகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச்சு 13, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சாளுவன்குப்பம் புலிக்குடைவரை எனும் குடைவரை தமிழ் நாட்டிலுள்ள மாமல்லபுரத்துக்கு வடக்கே சென்னை நோக்கிச் செல்லும் பாதைக்கு அருகே சாளுவன்குப்பம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில் காணப்படும் ஏனைய குடைவரைகளினின்றும் வேறுபாடான அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் நோக்கம் குறித்துப் பல கருத்துக்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு கோவில் என்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடை என்றும் முன்னேயுள்ள வெளியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மன்னன் இருந்து பார்ப்பதற்கான மேடை என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுமார்ச்சு 6, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தஞ்சைப் பெருவுடையார் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 வது ஆண்டோடு வயது நிறைவடைந்தது. இக்கோவில் முழுமையாகத் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது என்றும் படையெடுப்புகளால் காலப்போக்கில் அது அழிந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்திய அரசு இக்கோவிலை ரூ 1000 தாளில் வெளியிட்டும் அஞ்சல் தலையில் வெளியிட்டும் பெருமைப்படுத்தியுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 27, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

விவிலிய இறை ஏவுதல் என்பது கிறித்தவர்களின் திருநூலாகிய விவிலியம் கடவுளிடமிருந்து வந்தது என்றும், அதை விவிலிய பாடத்திலிருந்தும், கிறித்தவ மரபிலிருந்தும், திருச்சபைப் போதனையிலிருந்தும் நிரூபிக்க இயலும் என்றும் கூறுகின்ற இறையியல் கொள்கை ஆகும். இக்கொள்கை இரு உண்மைகளை வலியுறுத்துவதற்காக எழுந்தது. அவை: விவிலியத்தில் அடங்கியுள்ள நூல்கள் இலக்கியம் என்னும் அடிப்படையில் இலக்கிய ஆய்வுக்கும் மொழி ஆய்வுக்கும் உட்பட்டவை, விவிலியம் வெறுமனே ஓர் இலக்கியத் தொகுப்பு மட்டுமல்ல; அது கடவுள் மனிதருக்கு வழங்கிய மீட்புச் செய்தியையும் உள்ளடக்கி அமைந்த இலக்கியப் படைப்பாக உள்ளது. எனவேதான், விவிலியம் "மனித மொழியில் அமைந்த இறைவாக்கு" என்று அழைக்கப்படுகிறது. படத்தில் உள்ளது மத்தேயு நற்செய்தி ஆசிரியருக்கு வானதூதர் வழி இறை ஏவுதல் கிடைத்தல். ஓவியர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). ஒல்லாந்து.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 20, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சிகிரியா இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஃபிராஸ்கோ முறையில் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்றும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றன. சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் பாதுகாக்கப்படவேண்டிய உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் உள்ளது சிகிரியாக் குன்றின் வாயிலில் செதுக்கப்பட்டுள்ள சிங்கம் ஒன்றின் பாதம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 13, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் (1715–1777) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு ஃபிளெமியர். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிக நிலையொன்றை இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள குளச்சலில் நிறுவுவதற்காக அக்கம்பனியின் கடற்படைத் தளபதியாக அனுப்பப்பட்ட போது 1741 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர்ப் படைகளுடன் ஏற்பட்ட போரில் தோல்வியடைந்து போர்க் கைதி ஆனார். ஆயினும், பின்னர் இவர் திருவிதாங்கூர்ப் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். மன்னன் மார்த்தாண்ட வர்மரின் கீழிருந்த அந்நாட்டின் பிற்காலப் போர் வெற்றிகளுக்கு இவர் பெரிதும் துணை புரிந்ததாகக் கருதப்படுகிறது. குளச்சல் போரின்பின் டி லனோய் சரணடைவதைப் படம் காட்டுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுபெப்ரவரி 6, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் கிலாண்டு பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் இவ்வமைப்பின் முதன்மையான பணி தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் சிக்கல்களுக்கான நடைமுறைத் தீர்வுகளை உலகம் அறிந்து கொள்ள உதவுவதும் அதனால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்திற்கான சவால்களை உலகம் எதிர்கொள்ள உதவுவதும் ஆகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 30, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பீமன் சிலந்தி ஓர் அபூர்வ வகைச் சிலந்தி. நான்கு முதல் ஆறு அங்குலம் வரை நீளமும் இரண்டு அங்குல அகலமும் உள்ள இவற்றின் உடல் நடுவில் மஞ்சள் நிறக் கோடுகளும், புள்ளிகளும் நிறைந்து காணப்படும். தரையில் இருந்து குறைந்தது ஆறு மீட்டர் வரை உயரத்திற்கு இவை வலை பின்னும். சில நாடுகளில் இந்த வலைகளை கொண்டு சிறிய மீன்களைப் பிடித்து வருகின்றனர். அடர்ந்த காடுகளில் மட்டுமே இவ்வகை சிலந்திகள் காணப்படும். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் தென்படாது. வனங்கள் செயற்கையாக அழிக்கப்படுவது, தீயில் எரிந்து நாசமாதல் போன்ற பல்வேறு காரணங்களால், இவ்வகை சிலந்தி இனம் அழிந்து வருகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 23, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அங்குலிமாலா என்பவன் பீகாரில் புத்தரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு கொடிய திருடன். இவன் 999 பேரைக் கொன்று ஆயிரமாவது ஆளுக்காகக் காத்திருந்த வேளையில் அங்குலிமாலாவின் வயதான தாய் மகனைத் தேடி வருவதையும் அதே வேளையில் புத்தர் எதிர்ப்படுவதையும் படம் காட்டுகிறது. புத்தர் அவனை மனமாற்றமடையச் செய்து தனது சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். துறவி அங்குலிமாலா வெளியே சென்ற போது மக்கள் அவரைக் கல்லால் அடித்து துன்புறுத்தினர். ஒரு நாள் மாடு ஒன்று முட்டி துறவி அங்குலிமாலா கொல்லப்பட்டார். அங்குலிமாலாவின் முடிவு மனிதர்கள் தங்கள் கருமவினையிலிருந்து எவ்வேளையிலும் எவ்வழியிலும் தப்ப முடியாது என்பதை விளக்குவதாய் அமைகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 16, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இலங்கைச் சிறுத்தை என்பது பூனைப் பேரினக் குடும்பத்தில் பான்தெரா என்ற சாதியைச் சேர்ந்த விலங்கு இனம். இவை ஊனுண்ணும் முலையூட்டிகள். இலங்கையில் காணப்படும் சிறுத்தைகள் ஏனைய நாடுகளில் காணப்படும் சிறுத்தைகளிலிருந்து பல விதங்களில் வேறுபடுகின்றன. இந்தியப் பெருநிலத்திலுள்ள சிறுத்தைகளிலிருந்து கடலினால் பிரிக்கப்பட்டிருப்பதனால் இலங்கைச் சிறுத்தைகள் வித்தியாசமான முறையில் கூர்ப்படைந்திருப்பதாக விலங்கியலாளர்கள் கருதுகின்றனர். எனவே இவற்றை அவர்கள் உப இனமொன்றாகப் பாகுபடுத்தி உள்ளனர். இது பான்தெரா பார்டஸ் கொட்டியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 9, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பனி மந்தி என்றழைக்கப்படும் சப்பானிய மக்காக்கு சப்பான் நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஒரு வகைக் குரங்கு. மனிதனைத் தவிர மற்ற முதனிகள் யாவினும் இதுவே வடமுனைக்கு அருகே உள்ளது. இவற்றின் மயிர் சாம்பலும் பழுப்பும் கலந்தும் முகம், உள்ளங்கை முதலியன சிவந்தும் இருக்கும். படத்தில் சப்பானின் நகானோ நகரில் உள்ள சிக்கோகுடானி வெந்நீரூற்றில் பனி மந்திகள் குளிக்கும் காட்சி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகுசனவரி 2, 2011 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

புலம்பல் என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். கிறித்தவர்கள் இந்நூலின் பகுதிகளைப் பெரிய வெள்ளிக்கிழமையில் இயேசுவின் துன்பங்களை நினைவுகூரும் வண்ணம் அறிக்கையிட்டு தியானிப்பது வழக்கம். கி.மு. 586 இல் எருசலேமுக்கு நேரிட்ட பேரழிவையும், அதன் தொடர் நிகழ்ச்சியான நாடுகடத்தப்படுதலையும் பற்றிய புலம்பலாக இந்நூல் அமைந்துள்ளது. ஓவியத்தில் எருசலேமின் அழிவு குறித்துப் புலம்புகின்றார் எரேமியா இறைவாக்கினர். ஓவியர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). காப்பிடம்: ஆம்ஸ்டர்டாம், ஒல்லாந்து.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு