விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 22, 2011
(விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூன் 22, 2011 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
[[Image:|225px|{{{texttitle}}}]] |
இரண்டாம் உலகப் போரில் மே 10, 1940ல் நாசி ஜெர்மனியின் படைகள் பிரான்சு மீது படையெடுத்தன. பிரான்சு சண்டை என்றழைக்கப்பட்ட இப்படையெடுப்பில் அவை மின்னலடித் தாக்குதல் என்ற புதிய தாக்குதல் உத்தியைப் பயன்படுத்தி நேச நாட்டுப் படைகளை எளிதில் முறியடித்தன. ஜூன் 22ம் தேதி பிரான்சு சரணடைந்தது; படத்தில் இச்சரணடைவை ஏற்க பாரிசுக்கு வந்த இட்லர், தனது தளவாடத்துறை அமைச்சர் ஆல்பர்ட் இசுப்பியருடன் (இடது) நிற்கிறார். பின்னணியில் ஈஃபெல் கோபுரம் உள்ளது. |