கெப்லர்-11 (Kepler-11) என்பது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன். இந்த விண்மீனைக் குறைந்தது ஆறு புறக்கோள்கள் குறைந்த சுற்றுப்பாதையுடன் சுற்றிவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக 2011, பெப்ரவரி 2 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது[2]. இது பூமியில் இருந்து ஏறத்தாழ 2,000 ஒளியாண்டுகள் தூரத்தில், சிக்னசு என்ற விண்மீன் குழுவின் திசையில் அமைந்துள்ளது. நாசாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4]

கெப்லர்-11

கெப்லர்-11 உம் அதன் கோள்களும்.
நோக்கல் தரவுகள்
ஊழி ஜே2000      Equinox ஜே2000
பேரடை சிக்னசு
வல எழுச்சிக் கோணம் 19h 48m 27.62s
நடுவரை விலக்கம் +41° 54′ 32.9″
தோற்ற ஒளிப் பொலிவு (V)14.2[1]
வான்பொருளியக்க அளவியல்
தூரம்613[1] பார்செக்
இயல்புகள்
விண்மீன் வகைGV[2]
விவரங்கள்
திணிவு0.95 (± 0.1)[3] M
ஆரம்1.1 (± 0.1)[3] R
வெப்பநிலை5680 (± 100)[3] கெ
Metallicity[Fe/H] = 0 (± 0.1)[3]
அகவை8 (± 2)[3] பில்.ஆ
வேறு பெயர்கள்
புதன், வெள்ளி கோள்களுடன் ஒப்பீடு.

கோள்கள்

தொகு

இவ்விண்மீனைச் சுற்றும் ஆறு கோள்களும் b முதல் f வரை பெயரிடப்பட்டுள்ளன. இவற்றின் திணிவுகள் பூமியினதும் நெப்டியூனினதும் திணிவுகளுக்கு இடைப்பட்டதாகும். இவற்றின் குறைந்த அடர்த்தி காரணமாக, இவை எதுவும் பூமியினது சேர்வைகளைக் கொண்டிருக்கவில்லை[5]; டி, ஈ, எஃப் ஆகிய கோள்களில் குறிப்பிடத்தக்க ஐதரசன் மண்டலம் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது, அதே வேளை பி, சி ஆகியவை குறிப்பிடத்தக்களவு ஈலியத்தைக் கொண்டுள்ளன[2].

கோள் திணிவு
(ME)
ஆரை
(RE)
அடர்த்தி
(கி/செமீ3)
சுற்றுக்
காலம்

(நா)
அரைப்
பேரச்சு

(வாஅ)
Eccentricity ஏற்றம்
(°)
கண்டுபிடித்த
ஆண்டு
பி 4.3 (2.3 - 6.5) 1.97 ± 0.19 3.1 (1.6 - 5.2) 10.30375 0.091 0 88.5 2011[3]
சி 13.5 (7.4 - 18.3) 3.15 ± 0.30 2.3 (1.2 - 3.6) 13.02502 0.106 0 89 2011[3]
டி 6.1 (4.4 - 9.2) 3.43 ± 0.32 0.9 (0.6 - 1.4) 22.68719 0.159 0 89.3 2011[3]
8.4 (6.5 - 10.9) 4.52 ± 0.43 0.5 (0.3 - 0.7) 31.9959 0.194 0 88.8 2011[3]
எஃப் 2.3 (1.1 - 4.5) 2.61 ± 0.25 0.7 (0.3 - 1.4) 46.68876 0.25 0 89.4 2011[3]
ஜி < 300 (0.95 MJ) 3.66 ± 0.35 118.37774 0.462 0 89.8 2011[3]
 
கெப்லர்-11 இன் கோள்களின் பருமன்கள் ஒப்பீடு
(விண்மீன் (மஞ்சள்) இன் விட்டம் உண்மையான பருமனில் காட்டப்பட்டுள்ளது, கோள்களின் பருமன் 50 மடங்கால் அதிகரித்துக் காட்டப்பட்டுள்ளது.)
 
சூரியக் குடும்பத்துடன் ஒப்பீடு, கோள்களின் பருமன் 50 மடங்கால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Kepler Discoveries". NASA Ames Research Center. Archived from the original on 2017-04-01. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
  2. 2.0 2.1 2.2 Jack J. Lissauer; et al. (2011-02-03). "A closely packed system of low-mass, low-density planets transiting Kepler-11". நேச்சர் 470: 53–58. doi:10.1038/nature09760. http://arxiv.org/pdf/1102.0291v1.pdf. பார்த்த நாள்: 2011-02-02. 
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 "Star : Kepler-11". Extrasolar Planets Encyclopaedia. Archived from the original on 2012-06-16. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
  4. Astronomers Find 6-Pack of Planets in Alien Solar System
  5. Boyle, Alan (2011-02-02). "Planetary six-pack poses a puzzle". MSNBC Cosmic Log. msnbc.com. Archived from the original on 2018-05-13. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02. {{cite web}}: External link in |work= (help); Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்-11&oldid=3551163" இலிருந்து மீள்விக்கப்பட்டது