இஸ்ரேல்

மேற்கு ஆசிய நாடு
(இசுரயேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இஸ்ரேல் (Israel, எபிரேயம்: יִשְׂרָאֵל‎; யிஸ்ராஎல்; அரபு மொழி: إِسْرَائِيل‎, யிஸ்ராஎல், அலுவலக ரீதியாக இஸ்ரேல் நாடு; [மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்), [தவுலத் இஸ்ராஇல்](அரபு)) என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.[9][10] இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.[11]

இஸ்ரேல் அரசு
Centered blue star within a horizontal triband
கொடி
Centered menorah surrounded by two olive branches
சின்னம்
நாட்டுப்பண்: கதிக்வா, நம்பிக்கை
Projection of Asia with Israel in green
தலைநகரம்எருசலேம்[1]
பெரிய நகர்யெரூசலம்
ஆட்சி மொழி(கள்)
இனக் குழுகள்
(2019)
மக்கள்இசுரேலியர்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி
ஐசக் ஹெர்சாக்
யாய்ர் லபிட்
சட்டமன்றம்கெனெசெட்
விடுதலை 
ஐ.இ. இடமிருந்து
• கூற்றம்
மே 14 1948
• அங்கீகாரம்
1 மே 1949
பரப்பு
• மொத்தம்
22,072 அல்லது 20,770[2][3] km2 (8,522 அல்லது 8,019 sq mi)
• நீர் (%)
2.12 (440 கிமி2 / 170 mi2)
மக்கள் தொகை
• 2013 மதிப்பிடு
8,134,100[4] (96வது)
• 2008 கணக்கெடுப்பு
7,412,200[5] (99வது)
• அடர்த்தி
387.63/km2 (1,004.0/sq mi) (34வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2013 மதிப்பீடு
• மொத்தம்
$274.504 billion[6] (49வது)
• தலைவிகிதம்
$34,875[6]
மொ.உ.உ. (பெயரளவு)2013 மதிப்பீடு
• மொத்தம்
$272.737 billion[6] (43வது)
• தலைவிகிதம்
$34,651[6]
ஜினி (2008)39.2[7]
மத்திமம் · 66வது
மமேசு (2013)0.888[8]
அதியுயர் · 19வது
நாணயம்புது இசுரேலிய சேக்கல் (‎) (ILS)
நேர வலயம்ஒ.அ.நே+2 (இசுரேலிய நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (இசுரேலிய கோடைகால நேரம்)
திகதி அமைப்பு
  • dd-mm-yyyy (கி.பி)
வாகனம் செலுத்தல்வலம்
அழைப்புக்குறி972
இணையக் குறி.il

29 நவம்பர் 1947 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரித்தானிய பாலஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின்[12] செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான டேவிட் பென்-குரியன் "இசுரேல் தேசத்தில் இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" என பிரகடனப்படுத்தினார். இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது.[13][14][15] அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது படையெடுக்க இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன.[16] அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் சில போர்கள் ஊடாக சண்டையிட்டு வருகின்றது.[17] இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, சீனாய் தீபகற்பம் (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை கோலான் குன்றுகள் என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது.[18][19][20][21][22] இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-பலத்தீன முரண்பாட்டு தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை.

இசுரேலின் வர்த்தக மையமாக டெல் அவீவ் காணப்பட,[23] எருசலேம் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகவும் தலைநகராகவும் உள்ளது.[note 1][24] இசுரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 6,045,900 பேர் யூதர்கள். அராபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.[4][25] இசுரேலிய அராபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்களாகவும், ஏனையவர்கள் கிறித்தவர்களாகவும் டூர்சுக்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர சிறுபான்மையாக மார்னோயர்கள், சமாரியர்கள், கருப்பு எபிரேய இசுரேலியர்கள்,[26] ஆர்மேனியர்கள், சிர்காசியர்கள் போன்ற இனத்தவர்களும் உள்ளனர். இசுரேல் குறிப்பிட்டளவு வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து புகலிடம் தேடியவர்களையும் கொண்டுள்ளது.

இசுரேல் நாடாளுமன்ற முறை, விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை, பொது வாக்குரிமை என்பவற்றுடன் சார்பாண்மை மக்களாட்சி கொண்ட ஓர் நாடு.[27][28] இசுரேலிய அதிபர் அரசாங்கத்தின் தலைவராகவும் கெனெசெட் இசுரேலின் சட்டசபையின் சட்டமியற்றும் உறுப்பாக செயல்படுகிறது. இசுரேல் ஒரு வளர்ந்த நாடும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பு நாடும் ஆகும்.[29] 2012இன்படி இதன் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 43வது இடத்தில் உள்ளது. இசுரேல் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் மத்திய கிழக்கில் உயர்வாகவும் ஆசியாவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.[30] இதன் குடிமக்கள் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் உலகில் அதிகம் ஆயுள் எதிர்பார்ப்பு உள்ள குடிமக்களில் உள்வாங்கப்படுகின்றனர்.[31]

பெயர்

 
இந்த மெனெப்தா நடுகலிலுள்ள எழுத்து முறை "இசுரேல்" என்று குறிப்பதாக பல விவிலிய தொல்பொருளாளர்கள் மொழிபெயர்த்துள்ளனர். இதன் மூலம் "இசுரேல்" எனும் பதம் வரலாற்றுப் பதிவில் கிடைக்கப்பட்டுள்ளது.

1948 இல் சுதந்திரத்தைத் தொடர்ந்து, அந்நாடு "இசுரேல் அரசு" (மெதிநாத் யிஸ்ராஎல்) என்பதை எடுத்துக் கொண்டது. இதனுடன் இசுரேல் தேசம், சீயோன், யூதேயா ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டன.[32] இசுரேலின் குடிமக்கள் இசுரேலியர் என அழைக்கப்படுவர் என வெளிவிவகால அமைச்சு அறிவித்தது.[33]

இசுரேல் தேசம், இசுரயேலின் பிள்ளைகள் ஆகிய பெயர்கள் விவிலிய இசுரயேல் அரசு பற்றியும் முழு யூத அரசு பற்றியும் குறிக்கப் பயன்பட்டது.[34] இசுரேல் எனும் பெயர் குலப்பிதாவாகிய யாக்கோபுவை (எபிரேயம்: யிஸ்ராஎல், இஸ்ராஇல்; கிரேக்க மொழி: Ἰσραήλ இஸ்ராயல்; "கடவுளுடன் போரிட்டவர்"[35]) குறிக்கப் பயன்பட்டது. எபிரேய விவிலியத்தின்படி, அவர் கடவுளின் தூதனுடன் மல்யுத்தம் செய்து வென்ற பின் அப்பெயர் அவருக்கு கிடைத்தது.[36] யாக்கோபின் பனிரெண்டு மகன்களும் இசுரயேலரின் மூதாதையர்கள் ஆவர். இவர்கள் இசுரேலின் பனிரெண்டு குலங்கள் அல்லது இசுரயேலின் பிள்ளைகள் எனவும் அழைக்கப்படுவர். யாக்கோபும் அவர் மகன்களும் கானானில் வாழ்ந்தாலும் பஞ்சத்தின் நிமித்தம் எகிப்துக்கு செல்ல கட்டாயமாக்கப்பட்டு, அவர்களின் நான்காம் தலைமுறை மோசே வரை அங்கு வாழ்ந்தனர்.[37] மோசே தலைமையில் இசுரயேலர் கானானுக்குத் திரும்பினர். ஆரம்ப தொல்பொருளாய்வுப் பொருள் மெனெப்தா நடுகலில் "இசுரேல்" என்ற சொல்லைக் கொண்டுள்ளது. பண்டைய எகிப்தின் இந்நடுகல் கி.மு. 13ம் நூற்றாண்டைக்குரியது.[38]

இது யூதம், கிறித்தவம், இசுலாம், பகாய் ஆகிய ஆபிரகாமிய சமயங்களுக்கு புனிதமாக இருப்பதால் திருநாடு எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி யூதேயா, சமாரியா, தென் சிரியா, சிரியா பாலத்தீனா, எருசலேம் பேரரசு, இதுமேயா மாகாணம், கோலே-சிரியா, ரெட்டேனு மற்றும் கானான் உட்பட்ட பல பெயர்களால் பல நூற்றாண்டுகளிலும் அழைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

பழங்காலம்

 
இசுரயேல் அரசு, கி.மு. 11ம் நூற்றாண்டு

தொல்லியல் சான்றின்படி, எகிப்திய நினைவுச் சின்னமாகிய "மெனெப்தா நடுகல்" என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்பு முதன்முதலில் இசுரேலியல் என்ற சொல்லைக் குறிப்பிட்டது. இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர்.[39] மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் 'இசுரேல்' என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாக கருதி வந்துள்ளனர். தோராவின்படி, யூதர்களின் பிதாப்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுக்கு கடவுள் நாட்டை வாக்களித்ததாக நம்புகின்றனர்.[40][41] விவிலியத்தின் அடிப்படையில், அம்மூன்று பிதாப்பிதாக்களின் காலம் கி.மு 2ம் மில்லேனியத்தின் ஆரம்பம் என கருதப்படுகின்றது.[42] முதலாவது இசுரயேல் அரசு தோராயமாக கி.மு. 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இசுரேலிய முடியாட்சியும் அரசும் சிறிதும் பெரிதுமாய் இடைவெளி விட்டு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர்.[43][44][45][46]

வட இசுரேலிய அரசு கி.மு 722 இல் வீழ்ச்சியுற்றது. தென் யூத அரசு புது அசிரிய ஆட்சி வரை நிலைத்தது. புது பபிலோனியா பேரரசின் வருகையால் கி.மு. 586 இல் யூத அரசு வெற்றி கொள்ளப்பட்டது.

முற்காலம்

பின்னர் வந்த அசிரிய, பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, ரோமானிய, பைசாந்திய அரசுகளின் ஆட்சியில் சிறிதும் பெரிதுமாய் யூதர்கள் இசுரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் அருகிவிட்டது.

சியோனிசம் அலியா

இசுரேல் அல்லது அலியா என்னும் இன்றுள்ள நாட்டின் நிலத்தில் தற்காலக் குடியேற்றம் 1881ல் தொடங்கியது. பிற நாடுகளில் சிறுபான்மையாராக வாழ்ந்து இனவேற்றுமையாலும் பிற துன்பங்களாலும் உழன்ற யூதர்கள் மோசசு ஃகெசு (Moses Hess) என்பவர் போன்ற கருத்துக்களைப் பின்பற்றி இசுரேல் நிலத்தைமீண்டும் பெறுவதற்காக சிறிது சிறிதாக நிலங்களை ஆட்டோமன் மற்றும் அரேபியர்களிடமமிருந்து வாங்கத் தொடங்கினர்.

தியோடோர் ஹெர்ட்சு (1860–1904) என்னும் ஆஸ்திரிய யூதர் சியோனிய இயக்கம் ஒன்றைத் தொடங்கினார் 1896ல் செருமானிய மொழியில் டெர் யூடென்ஸ்டாட் ("யூதர் நாடு) என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த ஆண்டு முதல் உலக சியோனியப் பேரவையைக் கூட்ட உதவினார்.

சியோனிய இயக்கம் தொடங்கிய பின்னர் இரண்டாவது அலியா அமைக்க வழி வகுத்தது. சுமார் 40,000 யூதர்கள் 1904–1914 ஆண்டுகளில் வந்துசேர்ந்தனர். 1917ல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்ஃவோர் அவர்கள் பால்ஃவோர் பேரறிவிப்பு எனப்படும் அறிவிப்பில் யூதர்களுக்கென தாயகமாக ஒரு தனி பாலசுத்தீனம் அமைப்பதில் இசைவான நோக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். 1920ல் பாலசுத்தீனம் உலகநாடுகள் குழுமத்தில் பிரித்தானியர் ஆட்சி செலுத்தும் ஒரு நிலமாக மாறியது.

முதலாம் போருக்குப் பின்னர், மூன்றாவது அலையாக 1919-1923 ஆம் ஆண்டுகளிலும், நான்காவது அலையாக 1924–1929 ஆம் ஆண்டுகளிலும், யூதர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. இவை அலியா-3 என்றும் அலியா-4 என்றும் அழைக்கப்படுவன. 1929ல் நிகழ்ந்த அரேபிய கலவரங்களில் 133 யூதர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 67 பேர் எபிரோனைச் சேர்ந்தவர்கள்.

1933 வாக்கில் எழத்தொடங்கிய நாசிசத்தால் ஐந்தாவது அலையாக யூதர்கள் குடியேறினர். இந்த அலியா-5 க்குப் பிறகு, 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11% யூதர்களாக இருந்தநிலை மாறி, 1940ல் யூதர்கள் மக்கள் தொகையில் 30% ஆக உயர்ந்தார்கள். நிலப்பகுதியில், 28% சியோனிச நிறுவனங்கள் வாங்கியிருந்தன. இது தவிர யூதர்கள் தனிப்பட்ட முறையிலும் நிலங்களை வாங்கியிருந்தனர். இசுரேலின் தென் பாதி வறண்ட பாலை நிலமாகவும், மக்கட்தொகை நெருக்கமற்றதாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், ஒப்புதலின்றி (சட்டமுரணாக) ஏராளமான வெளி நாட்டு யூதர்கள் வந்து இறங்கினர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பாலசுத்தீனத்தில் சுமார் 600,000 யூதர்கள் இருந்தனர்.

1939ல், பிரித்தன் பாலஸ்தீனத்தில் யூத வந்தேறுதலை யுத்ததின் போது 75000 க்கு கட்டுப்படுத்தவும், அவர்களால் நிலம் விலைக்கு வாங்கப்படுவதை கட்டுப் படுத்தவும் திட்டமிட்டது. அது 36-39 அரபு ரகளைகளுக்கு பதிலாக இருக்கலாம். இத்திட்டம் யூதர்களாலும், சியோனிஸ்டுகளாலும், 1917 பால்பர் ஆணைக்கு எதிரான நம்பிக்கைத்துரோகமாகக் கருதப் பட்டது. அராபியர்களும் திருப்தி அடையவில்லை; ஏனெனில் அவர்கள் யூத வந்தேறுவதை முற்றிலும் தடுக்கக் கோரினர். அப்படியும், இத்திட்டத்தை பிரிட்டன் ஐநா ஒப்பாட்சி முடியும் வரை கடைப்பிடித்தது.

யூதர்களின் தலைமறைவான குழுக்கள் (பாசறைகள்)

பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களேதங்களை பாதுகாக முடிவெடுத்தனர்.

பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேரியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது.. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின.

நாடு நிறுவப்படுதல்

 
டேவிட் பென்-குரியன் டெல் அவீவில் மே 14, 1948ல் இசுரேல் நாட்டின் தோற்றத்தை அறிவித்தல்

1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது.

இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது.

பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது.

விடுதலைப் போரும் மக்கள் திரண்டு வருவதும்

இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.

போர்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன.

பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாட்டினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது)

யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்

1950களிலும் 1960களிலும்

1954–1955 ஆண்டுகளில் தலைமை அமைச்சராய் இருந்த மோசே சாரெட் அரசு எகிப்து மீதான குண்டுவீச்சில் தவறியதால் மதிப்பிழந்தது. 1956ல் எகிப்து நாடு பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் அதிருப்தி அடையத்தக்க வகையில் சுயஸ் கால்வாயை (Suez Canal) நாட்டுடைமையாக்கியது. இதைதொடர்ந்து இசுரேல் இவ்விரு ஐரொப்பிய அரசாங்களுடன் மறைமுக அணி அமைத்து, எகிப்து மீது போர் தொடுத்தது. சூயஸ் முட்டுதலுக்கு பின், உலக நிர்பந்தத்தினால் இசுரேல் சைனாய் குடாவிலிருந்து வெளியேறியது.

1955ல் பென் குரியன் மீண்டும் தலைமை அமைச்சராகி 1963ல் ராஜிநாமா செய்தார். அவருக்கு பின் லீவை எஷ்கால் தலைமை அமைச்சரானார்.

1961ல், 'கடைசி முடிவு' என்றழைக்கப் பட்ட யூத அழிவுத் திட்டத்தை இயக்கிய நாஜி யுத்த குற்றவாளி அடால்ப் ஐக்மனைக் கைது செய்து இசுரேலுக்குக் கொண்டுவந்து விசாரித்துத் தூக்கிலிட்டனர். ஐக்மன் இசுரேலிய வழக்கு மன்றங்களினால் தூக்கு போடப் பட்ட ஒரே நபர்.

மே 1967 ல், இசுரேலுக்கும், அதன் பக்க நாடுகளுக்கிடையே மறுபடியும் சூடு பிடித்தது. சிரியா, யோர்தான் எகிப்து போர் வீராப்பு பேசின; எகிப்து ஐ.நா. பார்வையாளர்களை வெளியேற்றியது. எகிப்து இசுரேலிய கப்பல்களுக்கு திராணா குடாவில் தடையிட்ட போது, அது போருக்கான அறிகுறியாகக் கருதி, இசுரேல் எகிப்தை முன்னேற்பாடாக சூன் 5ல் தாக்கியது. ஆறு நாட்கள் நீடித்த அரபு-இசுரேலிய போரில், இசுரேல் அரபுப்படைகளைத் தோற்கடித்து, விமானப்படைகளைத் தூளாக்கி வென்றது. கிழக்கு எருசலேம், மேற்குக்கரை, காசா நிலப்பட்டை, சைனாய், கோலன் சிகரங்கள் இவற்றை அரபு நாடுகளிடமிருந்து கைப்பற்றியது. 'பச்சை கோடு'-1949 கைப்பற்றப்பட்ட நிலங்களின் நிர்வாக எல்லையாயிற்று. பத்து வருடங்களுக்கு பின், எகிப்துடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி காசாவை எகிப்துக்குக் கொடுத்தது.

1967ல், அமெரிக்க கப்பலான லிபர்ட்டி இசுரேல் விமானங்களால் தாக்கப்பட்டு 34 அமெரிக்க துருப்புகள் உயிரிழந்தனர்; பின்னர் மேற்கொண்ட ஆய்வின்படி அது கப்பலை சரியாக அடையாளம் காண முடியாமல் செய்த பிழை என உறுதியிடப்பட்டது.

1969ல். கோல்டா மேர் என்ற பெண் தலைமை அமைச்சரானார்.

1970களில்

1967ன் போருக்குப் பின் 1968–1972 ஆண்டுகளில் இசுரேல், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே பற்பல சண்டைகள் நிகழ்ந்தன. 1970 முதலில், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகள் இசுரேல், யூத குறிகள் மீது பல தாக்குதல்களைத் தொடங்கியன. இவற்றில் முதன்மையானது, 1972 ஒலிம்பிக் விளையாட்டுகளில், பாலஸ்தீன பயங்கரவாதிகள் இசுரேல் விளையாட்டு வீர்ர்களை பிணையாக பிடித்து, அவர்களைக் கொன்றனர். பதிலுக்கு, இசுரேல் 'கடவுள் பழி' என்ற செய்கைகளினால் மொசாத் ஆட்களின் மூலம் பல பயங்கர வாதிகளை கொன்றது.

அக்டோபர் 6, 1973, யோம் கிப்புர் யூத நோன்பு நாளில், எகிப்து, சிரிய படைகள் திடீரென்று, முன்னறிவிப்பன்றி தாக்கின. ஆனால், முதலில் திகிலாக்கியும், அவை 1967ல் இஸ்ரேலுலிடம் இழந்த நிலங்களை மீள்கொள்ள முடியவில்லை. போரின் பின் பல வருடங்கள் சண்டையின்றி இருந்ததால், சமாதான பேச்சுகளுக்கு உடந்தையாக இருந்தது.

1974ல், மைரின் பதவி விலகளுக்குப்பின், இட்ஷாக் ரபின் ஐந்தாவது பிரதான அமைச்சரானார். 1977 கெனெச்சட் தேர்தல்களில் 1948 லிருந்து ஆளுமணியிலிருந்த மார்ச் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியே வந்தது. மேனாசம் பெகின் தலைமையிலான புதிய லிகுட் கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்றது.

1974 நவம்பரில், எகிப்து ஜனாதிபதி அன்வர் சாதத், யூத நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் செய்து கெனெச்சட் என்ற மக்களவைக்கு மொழி பெயர்ந்தார். இதுவே இசுரேலுக்கு ஒரு அரபு நாட்டின் முதல் ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்து காம்ப் டேவிட் இழைகளுக்கு வித்திட்டது . மார்ச் 1979ல், வாஷிங்டனில், இசுரேல்-எதிப்த்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இசுரேல் 1967ல், எகிப்தினிடம் கைப்பற்றிய எல்லா பகுதிகளையும் திருப்பிக் கொடுத்தது. பாலஸ்தீனர்களுக்கும் சுயாட்சி படலாம் என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

1980கள்

சூலை 7 ஆம் நாள் 1981ல் இசுரேலிய வானூர்திப் படை இராக் நாட்டில் ஓசிரிக் என்னும் இடத்தில் இருந்த (அணுக்கரு உலை உள்ள) அணுக்கரு நிலையத்தைத் தாக்கியழித்தனர். இராக்கியர்கள அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்கவே இம்முயற்சி என்று கூறப்பட்டது.

1982ல் இசுரேல் லெபனான் மீது தாகுதல் தொடங்கியது., இஸ்ரேல் 1975 முதல் உள்நாட்டுப் போரில் முழுகியிருந்த லெபனான் மேல் படையெடுத்தது. அதை முதலில் வடக்கிலிருக்கும் குடிகளை பாலஸ்தீனிய பயங்கரவாத தாக்குதலிருந்து காப்பாற்றவதாக சாக்கு சொல்லப் பட்டது. ஆனால் 40 கி.மீ. எல்லைக்கு வெளியே காப்பு மண்டலம் ஏற்படுத்திய பின், இஸ்ரேலி படை இன்னும் வடக்கே முன்னேறி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டை கைப்பற்றியது. பாலஸ்தீன விடுதலை அணி லெபனானிலிருந்து வெளியேற்றப்பட்டபின், டுநீசியாவின் தலைநகர் டூனிசிக்கு புலம் பெயர்ந்தன. இந்த விளைவினால் ஆரம்பித்த லெபனான் போர்களில் சோர்வுற்ற பிரதமர் பெகின் 1983ல் ராஜிநாமா செய்து, இட்ஷாக் ஷமீருக்கு இடம் விட்டார்.. 1986ல், லெபனானிலிருந்து பெரியளவில் வெளியேறினாலும், காப்பு மண்டலம் 2000 வரை வைக்கப் பட்டது. அதையும் 2000ல், காலி செய்தது.

1980ல் அரசாங்கம் இடது-வலதுசாரிகளினிடையே மாறி மாறி ஆயிற்று. 1984ல் இடது சாரி ஷிமோன் பெரெஸ் பிரதமரானார்; 1986ல் ஷமீர் மறுபடியும் பதவியேற்றார்.. பாலஸ்தீன முதல் எழுச்சி (இண்டிபாடா) 1987ல் தொடங்கி வன்முறைகள் நிகழ்ந்தன. அதனால் ஷமீர் 1988ல், பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படார்.

1990கள்

வளைகுடா யுத்தத்தில், ஒரு பங்கும் இல்லாமலேயே, ஒரு கட்சியும் சாராமலேயே, இஸ்ரேல் பல இராக்கிய ஏவுகணைகளால் அடிக்கப் பட்டு 2 குடிகள் கொல்லப்பட்டனர்.

1990ல், அப்போது குலைந்த சோவியத் ஒன்றியத்திலிருந்து பேரளவு யூத வந்தேரிகள் புகுந்தனர். அவர்கள் 'மீள்வருகை நீதி'யின் படி, இஸ்ரேலிய குடிமக்கள் உரிமையை உடனே பெற்றனர். 1990-91ல், 380000 பேர் வந்து குடியிருப்பு உரிமை பெற்றனர். அவர்கள் வாக்குகளை கவர தொழிலாளர் கட்சி, வேலையில்லாமை, வீடு மூட்டப் பிரச்சினைகள் போன்றவற்றை ஆளும் லிகுத் கட்சியின் மேல் போட்டு பரப்புரை செய்தது. அதனால் வந்தேரிகள் தொழிலாளர் கட்சிக்கே 1992 தேர்தலில் ஆதரவு காட்டி வாக்கிட்டு, அக்கட்சிக்கு மக்களவையில் 61% பெரும்பான்மை உரிமையை கொடுத்தனர்..

தேர்தல் தீர்ப்பின்படி, இட்ஷாக் ரபின் பிரதம அமைச்சராகி, இடது சாரி அரசாங்கத்தை மேற்கொண்டார். தேர்தல் போது, அவர் இஸ்ரேலியர்களுக்கு தற்காப்பும், அராபிகளுடன் மொத்த சமாதானத்தையும் 9 மாதங்களுக்குள் காட்டுவதாக சூளுரைத்தார். 1993ல். அரசாங்கம் மட்றீட் சமாதான பேச்சை கைவிட்டு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பாலஸ்தீன விடுதலை அணியுடன் சமாதான சம்மதம் அளித்தது. அதனால் ஜோர்டன் இசுரேலை ஏற்றுக்கொள்ளும் இரண்டாவது அரபு நாடானது.

முதலில் பெருமளவிலிருந்த சமாதான சம்மதத்தின் ஆதரவு, ஹமாஸ் போன்ற பாலஸ்தீன சம்மதத்தின் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களால் கீழிறங்கியது. நவம்னர் 4, 1995ல். இகால் அமீர் என்ற யூத வெறியாளர் பிரதமர் ரபீனை சுட்டுக் கொன்றார். இக்கொலையினால் கொந்தளிப்புற்ற பொதுமக்கள், ஆஸ்லோ சம்மதத்தின் எதிரிகளின் மேல் வெறுப்பு கொண்டு, சம்மதத்தின் யூகியான ஷிமொன் பெரசுக்கு ஆதரவு காட்டத் தொடங்கினர். ஆனால் புதிய பாலஸ்தீனிய தற்கொலை சம்பவங்களாலும், பயங்கர வாதத்தை புகழ்ந்த யாச்சர் ஆராபத் மேலிருந்த எரிச்சலாலும், பெரச் ஆதரவு ஓரளவு மலிந்து, 1996 தேர்தலில் பெரெச், லிகுட் வேட்பாளர் பின்யமின் நடன்யாகு என்பவரிடம் தோற்றார்.

ஆஸ்லோ சம்மததின் எதிரி போல தோன்றினாலும், நடன்யாகு ஹெப்ரான் பகுதியிலிருந்து வெளியேரி, பாலஸ்தீன தேசீய மன்றத்திற்கு மேலும் ஆதீனம் கொடுக்குமாறு கையெழுத்திட்டர். நடன்யாகு ஆட்சிகாலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் ஓரளவு மழுங்கின. ஆனால் 1999 தேர்தல்களில் தொழிலாளர் கட்சி எஹூத் பராக் நடன்யாகுவை பெருவித்தியாசத்தில் தோற்கடித்து, அடுத்த பிரதமரானார்.

இசுரேலின் நில நாட்டு அமைப்பு

 
இசுரேல் நிலப்படம்
 
இசுரேல் இட அமைப்பு நிலப்படம்
 
ஞாயிறு மறைவில் டெல் அவீவ் நகரில் ஒரு கரை

இசுரேலுக்கு வடக்கில் லெபனான், கிழக்கில் சிரியா, ஜோர்தான், மற்றும் மேற்குக் கரை, தென்மேற்கில் எகிப்து மற்றும் காசா கரை ஆகிய நாடுகளும் பகுதிகளும் அமைந்தன. மேற்கில் நடுநிலக்கடலும் தெற்கில் அக்காபா விரிகுடாவிலும் கடற்கரைகள் உள்ளன.

1967ல் நிகழ்ந்த ஆறுநாள் போரில் இசுரேல் யோர்தானைச்சேர்ந்த மேற்குக்கரை (West Bank) சிரியாவைச் சேர்ந்த கோலான் குன்றுகள் (Golan Heights), எகிப்த்தைச் சேர்ந்த காசாப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது. 1982வுக்கு முன் பல படையினர்களும் குடியேற்றவர்களும் சைனைவிலிருந்து திரும்பப்பெற்றுள்ளது. மேற்குக்கரை, காசா கரை, கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளின் நிலைமையை இன்று வரை முடிவு செய்யவில்லை.

1967ல் கைப்பற்றின நிலங்களை தவிர இசுரேலின் மொத்த பரப்பளவு 20,770 கிமீ² அல்லது 8,019 சதுர மைல்; (1% நீர்). இசுரேல் சட்டத்தின் படி கிழக்கு ஜெரூசலெம் மற்றும் கோலான் குன்றுகள் உட்பட மொத்த பரப்பளவு 22,145 கிமீ² அல்லது 8,550 மைல்²; ஒரு சதவீதம் கீழே நீர். இசுரேல் கட்டுப்பாட்டில் மொத்த பரப்பளவு 28,023 கிமீ² அல்லது 10,820 மைல்² (~1% நீர்).

மாநகரப் பரப்பளவுகள்

2004 இசுரேல் புள்ளியியல் மையத்தின் கணக்கெடுப்பின் படி டெல் அவீவ் (மக்கள் தொகை 2,933,300), ஹைஃபா (மக்கள் தொகை 980,600), பீர்ஷெபா (மக்கள் தொகை 511,700) ஆகிய மூன்று மாநகரங்கள் இசுரேலில் உள்ளன.[47] ஜெரூசலெமும் இசுரேலின் மாநகரங்களில் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்நகரத்தின் எல்லைகள் உறழ்வு பட்டுள்ளது காரணமாக சரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்கமுடியாது. 2005 கணக்கெடுப்பின் படி அரசின் படி ஜெரூசலெம் மக்கள் தொகை 706,368 ஆகும். சில வேளைகளில் அரபு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான நாசரேத்தும் மாநகரமாக குறிப்பிட்டுள்ளது. [1] பரணிடப்பட்டது 2007-11-12 at the வந்தவழி இயந்திரம்.

சட்ட மன்றம்

 
The கெனெசெட் building, Israel's parliament

இசுரேலின் ஆட்சி ஒரேயொரு சட்டமன்றத்தின் அடிப்படையில் நிகழுகின்றது. இசுரேலின் நாடாளும் சட்டமன்றத்திற்கு கெனெசெட் (Knesset ஃஈபுரு மொழியில் כנסת = கூட்டம், மன்றம், assembly) என்று பெயர். இதில் 120 கெனெசெட் உறுப்பினர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உண்டு.

ஆட்சி செலுத்துவோர்

இசுரேலியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் எனினும் அதிக ஆட்சிப்பொறுப்புகளும் ஆணை மற்றும் கட்டளை இடும் உரிமையும் அற்றவர். தேர்தலில் பெரும்பானமை வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை தலைமை அமைச்சராய் தேர்ந்தெடுப்பது குடியரசுத் தலைவரின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று. நாட்டை நடத்தும் பொறுப்பும் அதிகாரமும் தலைமை அமைச்சரைச் சேர்ந்தது. தலைமை அமைச்சர் தன் அமைச்சர் குழுவைக்கொண்டு நாட்டை நடத்துவார்.

மக்கள்

மக்கள் வகைப்பாடு

இசுரேலின் நடுவண் புள்ளியியல் துறையின் மே 2006 ஆம் ஆண்டின் கணக்குப்படி இசுரேலில் 7 மில்லியன் உள்ளனர். அவற்றில் 77% மக்கள் யூதர்கள், 18.5% அராபியர்கள், 4.3% மற்ற இனத்தவர்..[48] யூதர்களில் 68% மக்கள் இசுரேலில் பிறந்தவர்கள் (இவர்களை சபரா என்பர்), அல்லது ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர் (இவர்கள் ஓலிம் எனப்படுபவர்), 22% மக்கள் ஐரோப்பாவில் இருந்தும் அமெரிக்கவில் இருந்தும் வந்து குடியேறியவர், 10% ஆசியா-ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்.[49]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. யெரூசலம் is the official capital, and the location of the presidential residence, government offices and the கெனெசெட், Israel's Parliament. In 1980, the Knesset asserted Jerusalem's status as the nation's "eternal and indivisible capital", by passing the Basic Law: Jerusalem — Capital of Israel. However, the ஐக்கிய நாடுகள் அவை does not recognize this designation. The bulk international community argues that the city is still legally an international Corpus separatum and the final issue of the status of Jerusalem will be determined in future Israeli-Palestinian negotiations. Most countries maintain their embassies in டெல் அவீவ் (CIA Factbook பரணிடப்பட்டது 2006-07-16 at the வந்தவழி இயந்திரம்). See the article on எருசலேம் for more information.
  2. "Israel". Central Intelligence Agency. 27 February 2023. Archived from the original on 10 January 2021. பார்க்கப்பட்ட நாள் 24 February 2023 – via CIA.gov.
  3. "Israel country profile". BBC News. 24 February 2020. Archived from the original on 24 January 2021. பார்க்கப்பட்ட நாள் 27 January 2021.
  4. 4.0 4.1 "Monthly Bulletin of Statistics for Population". Israel Central Bureau of Statistics. 7 August 2013. Archived from the original on 20 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "The 2008 Israel Integrated Census of Population and Housing" (PDF). Israel Central Bureau of Statistics. 28 December 2008. Archived from the original (PDF) on 14 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 February 2012.
  6. 6.0 6.1 6.2 6.3 "Report for Selected Countries and Subjects". அனைத்துலக நாணய நிதியம். October 2013. பார்க்கப்பட்ட நாள் October 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Distribution of family income – Gini index". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 13 ஜூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 1 September 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "2014 Human Development Report Summary" (PDF). United Nations Development Programme. 2014. pp. 21–25. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  9. "Israel". The World Factbook. Central Intelligence Agency. 20 November 2012. Archived from the original on 27 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 3 December 2012.
  10. (Skolnik 2007, ப. 132–232)
  11. "Israel". Freedom in the World. Freedom House. 2008. Archived from the original on 23 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Then known as the Zionist Organization
  13. "Declaration of Establishment of State of Israel". Israel Ministry of Foreign Affairs. 14 May 1948. பார்க்கப்பட்ட நாள் 8 April 2012.
  14. Brenner, Michael; Frisch, Shelley (April 2003). Zionism: A Brief History. Markus Wiener Publishers. p. 184.{{cite book}}: CS1 maint: date and year (link)
  15. "Zionist Leaders: David Ben-Gurion 1886–1973". Israel Ministry of Foreign Affairs. பார்க்கப்பட்ட நாள் 13 July 2011.
  16. Yoav Gelber, Palestine 1948, 2006 — Chap.8 "The Arab Regular Armies' Invasion of Palestine".
  17. Gilbert 2005, ப. 1
  18. "The status of Jerusalem" (PDF). The Question of Palestine & the United Nations. United Nations Department of Public Information. East Jerusalem has been considered, by both the General Assembly and the Security Council, as part of the occupied Palestinian territory.{{cite book}}: CS1 maint: postscript (link)
  19. BBC News (29 March 2006). "Analysis: Kadima's big plans". http://news.bbc.co.uk/2/hi/middle_east/4856762.stm. பார்த்த நாள்: 10 October 2010. 
  20. Kessner, BC (2 April 2006). "Israel's Hard-Learned Lessons". Homeland Security Today. பார்க்கப்பட்ட நாள் 26 April 2012.
  21. Kumaraswamy, P. R. (5 June 2002). "The Legacy of Undefined Borders". Tel Aviv Notes. பார்க்கப்பட்ட நாள் 25 March 2013.
  22. "Israel Journal: A Land Without Borders". The Epoch Times இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927210110/http://www.theepochtimes.com/n2/world/israel-journal-a-land-without-borders-34590.html. பார்த்த நாள்: 20 March 2012. 
  23. "GaWC – The World According to GaWC 2008". Globalization and World Cities Research Network. பார்க்கப்பட்ட நாள் 1 March 2009.
  24. "''Basic Law: Jerusalem, Capital of Israel''". Knesset.gov.il. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.
  25. "Latest Population Statistics for Israel". Jewish Virtual Library. 2013. Archived from the original on 12 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 21 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  26. Rice, Stephanie (4 May 2009). "The Black Hebrews of Israel". GlobalPost. http://www.globalpost.com/dispatch/israel-and-palestine/090430/israels-black-hebrews. பார்த்த நாள்: 12 August 2012. 
  27. (Rummel 1997, ப. 257). "A current list of liberal democracies includes: Andorra, Argentina, … , Cyprus, … , Israel, ..."
  28. "Global Survey 2006: Middle East Progress Amid Global Gains in Freedom". Freedom House. 19 December 2005. Archived from the original on 23 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  29. "Israel's accession to the OECD". Organisation for Economic Co-operation and Development. பார்க்கப்பட்ட நாள் 12 August 2012.
  30. "Human development indices" (PDF). United Nations Development Programme. Archived from the original (PDF) on 21 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 4 November 2010.
  31. "WHO: Life expectancy in Israel among highest in the world". Haaretz. 24 May 2009. http://www.haaretz.com/news/who-life-expectancy-in-israel-among-highest-in-the-world-1.276618. 
  32. "Popular Opinion". The Palestine Post (Jerusalem): p. 1. 7 December 1947. http://www.jpress.org.il/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToSaveGifMSIE_TAUEN&Type=text/html&Locale=english-skin-custom&Path=PLS/1947/12/07&ChunkNum=-1&ID=Ar00105&PageLabel=1. 
  33. "On the Move". Time (New York). 31 May 1948 இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080406013437/http://www.time.com/time/magazine/article/0,9171,798687-2,00.html. பார்த்த நாள்: 6 August 2007. 
  34. Levine, Robert A. (7 November 2000). "See Israel as a Jewish Nation-State, More or Less Democratic". The New York Times. http://www.nytimes.com/2000/11/07/opinion/07iht-edlevine.t.html. பார்த்த நாள்: 19 January 2011. 
  35. Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 381. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-05383-8. entry "Jacob".
  36. "And he said, Thy name shall be called no more Jacob, but Israel: for as a prince hast thou power with God and with men, and hast prevailed." (Genesis, 32:28, 35:10). See also Hosea 12:5.
  37. Exodus 6:16–20
  38. (Barton & Bowden 2004, ப. 126). "The Merneptah Stele … is arguably the oldest evidence outside the Bible for the existence of Israel as early as the 13th century BCE."
  39. "The Stones Speak: The Merneptah Stele". பார்க்கப்பட்ட நாள் 2006-04-08.
  40. "And the Lord thy God will bring thee into the land which thy fathers possessed, and thou shalt possess it; and he will do thee good, and multiply thee above thy fathers." (Deuteronomy 30:5).
  41. "But if ye return unto me, and keep my commandments and do them, though your dispersed were in the uttermost part of the heaven, yet will I gather them from thence, and will bring them unto the place that I have chosen to cause my name to dwell there." (Nehemiah 1:9).
  42. "Walking the Bible Timeline". Walking the Bible (Public Broadcast Television). http://www.pbs.org/walkingthebible/timeline.html. பார்த்த நாள்: 29 September 2007. 
  43. (Friedland & Hecht 2000, ப. 8). "For a thousand years Jerusalem was the seat of Jewish sovereignty, the household site of kings, the location of its legislative councils and courts."
  44. (Ben-Sasson 1985)
  45. Matthews, Victor H. (2002). A Brief History of Ancient Israel. Westminster John Knox Press. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-664-22436-3. {{cite book}}: Invalid |ref=harv (help)
  46. Miller, J. Maxwell (1986). A History of Ancient Israel and Judah. Westminster John Knox Press. p. 523. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-664-21262-9. {{cite book}}: Invalid |ref=harv (help); Unknown parameter |coauthors= ignored (help)
  47. Central Bureau of Statistics, Government of Israel. "Localities, population and density per sq. km. in the metropolitan area_km2s of Tel Aviv, Haifa and Beer Sheva" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2006-04-08. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help) PDF
  48. Central Bureau of Statistics, Government of Israel. "Population, by religion and population group" (PDF). Archived from the original (PDF) on 2015-11-05. பார்க்கப்பட்ட நாள் 2006-04-08. PDF
  49. Central Bureau of Statistics, Government of Israel. "Jews and others, by origin, continent of birth and period of immigration" (PDF). Archived from the original (PDF) on 2006-03-25. பார்க்கப்பட்ட நாள் 2006-04-08. PDF

குறிப்பு

  1. The Jerusalem Law states that "Jerusalem, complete and united, is the capital of Israel" and the city serves as the seat of the government, home to the President's residence, government offices, supreme court, and parliament. United Nations Security Council Resolution 478 (20 August 1980; 14–0, U.S. abstaining) declared the Jerusalem Law "null and void" and called on member states to withdraw their diplomatic missions from Jerusalem. The United Nations and all member nations refuse to accept the Jerusalem Law (see (Kellerman 1993, ப. 140)) and maintain their embassies in other cities such as Tel Aviv, Ramat Gan, and Herzliya (see the CIA Factbook பரணிடப்பட்டது 2016-05-27 at the வந்தவழி இயந்திரம் and Map of Israel). The U.S. Congress subsequently adopted the Jerusalem Embassy Act, which said that the U.S. embassy should be relocated to Jerusalem and that it should be recognized as the capital of Israel. However, the US Justice Department Office of Legal Counsel concluded that the provisions of the act "invade exclusive presidential authorities in the field of foreign affairs and are unconstitutional". Since passage of the act, all Presidents serving in office have determined that moving forward with the relocation would be detrimental to U.S. national security concerns and opted to issue waivers suspending any action on this front. The பலத்தீன தேசிய ஆணையம் sees கிழக்கு எருசலேம் as the capital of a future Palestinian state. The city's final status awaits future negotiations between Israel and the Palestinian Authority (see "Negotiating Jerusalem," Palestine–Israel Journal). See எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள் for more information.

வெளி இணைப்புக்கள்

அரசாங்கம்
பொது தகவல்
வரைபடங்கள்
விபரக்கோவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்ரேல்&oldid=4105394" இலிருந்து மீள்விக்கப்பட்டது