விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 5, 2008

மிளகு (Piper nigrum) என்பது பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினை சார்ந்த தாவரமாகும். இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு தாளிப்புப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவை கூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில், அதன் பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என பலவகைகள் உண்டு. மிளகு கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். இங்கேயே பெருமளவு இத்தாவரம் பயிரிடப்படுகிறது. மிளகு கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதனால், இப்பகுதியின் தட்பவெப்ப நிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாக கருதப்படுகிறது.


அலைக்கம்பம் மின் கம்பத்தில் பயணிக்கும் மின்காந்த அலையை வெறுவெளியில் இடுவதற்கும், வெறுவெளியில் உள்ள மின்காந்த அலையை உள்வாங்கி மின் கம்பத்தின் ஊடாக சாதனங்களுக்கு வழங்குவதற்கும் பயன்படும் ஒரு மின் கருவி. அதாவது மின்கம்பத்தின் துணையுடன் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் இடையே நிகழும் உருமாற்றத்துக்கு அலைக்கம்பம் உதவுகின்றது. அலைக்கம்பம் தொலைதொடர்பு சாதனங்கள் (சமிக்கை செலுத்திகள், சமிக்கை பெறுவிகள்), ராடர், வழிகாட்டிகள், வானலை வானியல் சாதனங்கள் போன்ற பல உபகரணங்களில் பயன்படுகின்றது.


உங்களுக்குத் தெரியுமா