விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டெம்பர் 21, 2008

வரவுகள் செலவுகள்
   
   
   
   
   

கணக்கியலில் இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை (Double-entry bookkeeping system) என்பது, வியாபார நிறுவனம் மற்றும் வியாபாரமல்லா நிறுவனங்கள் என்பவற்றில் இடம்பெறும் பலவிதமான நிதிக்கொடுக்கல் வாங்கல் ஊடுசெயல்களைப் பதிவு செய்வதற்கெனப் பின்பற்றப்படும் ஒர் அடிப்படை நியம முறையாகும். நிறுவனங்களின் நிதிநிலமை,நாணய மதிப்பு, பலவகையான வர்த்தக நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் என்பனவற்றை கணிப்பதற்கு இம் முறை பெரிதும் உதவுகின்றது. இக் கணக்குவைப்பு(bookkeeping) முறையில் ஒவ்வோர் ஊடுசெயலும் இரு வேறுபட்ட கணக்கேடுகளில் பதியப்படும். காரணம் நிறுவனத்தில் இடம்பெறும் ஒவ்வோர் ஊடுசெயலும் இருவிதமான தாக்கங்களை உண்டு பண்ணும் எனும் அடிப்படை அணுகுமுறையே ஆகும்.


பஞ்சமரபு என்பது வெண்பாக்களால் அமைந்த ஒரு நூல். இவ்வெண்பாக்களை சேறை அறிவனார் என்னும் புலவர் இயற்றினார். இவரது காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் ஐந்தொகை என்பதாகும். சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை எனும் பாயிர வரி இதனை மெய்ப்பிக்கும். இந்நூலின் காலப்பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.


பஞ்சாப் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் ஹரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டீகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு அதிகம் உள்ளனர். பஞ்சாபில் கோதுமை அதிகம் விளைகிறது. பஞ்சாபில் ஜீலம், செனாப், ராவி, பீஸ், சட்லஜ் ஆகிய ஐந்து ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது.