விக்கிப்பீடியா:வலையுரைகள்

தமிழ் விக்கிமீடியா சமூகத்தின் ஊடாட்டத்தைக் கூட்டும் வகையிலும் பல்வேறு விக்கி சார் தலைப்புகள், திறன்கள் குறித்து உரையாடும் வகையிலும் வலையுரைகளை (webinar) ஏற்பாடு செய்யலாம். ஒரு வார முன்னறிவிப்பு இட்டு அனைவரும் இது போன்ற உரைகளை ஒருங்கிணைக்கலாம்.

பதிப்புரிமை தொகு

இத்தொடரின் முதல் வலையுரையில் பதிப்புரிமை குறித்து உரையாடுவோம். இது தொடர்பான உங்கள் கேள்விகளைக் கீழே தாருங்கள். ஒரு வேளை, நீங்கள் வலையுரையில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும், இக்கேள்விகளுக்கான விடைகளை அலசுவோம். தமிழ் விக்கிப்பீடியாவிலும் முறையாக ஆவணப்படுத்துவோம்.

நேரம் தொகு

  • இவ்வலையுரைக்கான நேரம் விரைவில் உறுதி செய்யப்படும். பெரும்பாலும் இந்திய / இலங்கை இரவு 08.30 - 10.30 மணிக்குள் தொடங்கி 90 நிமிடங்கள் நடக்குமாறு அமையலாம்.
  • bit.ly/tawiki-hangout என்ற முகவரியில் கூகுள் கூடல் மூலம் இவ்வலையுரை நிகழும்.

பங்கேற்போர் தொகு

  1. --இரவி (பேச்சு) 09:20, 12 மார்ச் 2016 (UTC)
  2.  மாதவன்  ( பேச்சு ) 09:49, 12 மார்ச் 2016 (UTC)
  3. மதனாகரன் (பேச்சு) 14:55, 12 மார்ச் 2016 (UTC)
  4. பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:10, 17 மார்ச் 2016 (UTC)
  5.  அன்புமுனுசாமி பேச்சு 05:42, 18 மார்ச் 2016 (UTC)
  6. மயூரநாதன் (பேச்சு) 06:06, 25 மார்ச் 2016 (UTC)

கேள்விகள் தொகு

  1. பதிப்புரிமை என்றால் என்ன?
  2. விக்கிப்பீடியா பின்பற்றும் பதிப்புரிமை என்ன? ஏன் இதனைப் பின்பற்றுகிறார்கள்? ஏன் இதில் (படிமங்களை நீக்குவது போன்ற) மிகுந்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்?
  3. நியாயப் பயன்பாடு என்றால் என்ன?
  4. ஒரு நூல் / கட்டுரை / நிகழ்பட ஆவணத்தைப் பார்த்து விட்டு என் சொந்தச் சொற்களில் அவற்றைச் சுருக்கியோ சொற்களை மாற்றியோ எழுதினால் பதிப்புரிமை மீறலாகுமா? இதில் எந்த எல்லைக்கு உட்பட்டுச் செயற்படுவது?
  5. தமிழ் விக்கி நோக்கில் இந்திய / இலங்கை பதிப்புரிமைச் சட்டத்துக்குச் சுருக்கமான அறிமுகம் தர முடியுமா? எந்த நாட்டுச் சட்டத்தைப் பின்பற்றுவது?
  6. ஒரு படிமம் அல்லது கோப்பு தமிழ் விக்கியில் பதிவேற்றப்படும் போது, துப்புரவாளர்கள் அதனை எப்படி சரி பார்க்கிறார்கள்? துப்புரவுப் பணிப் போக்கு எப்படி அமைகிறது?
  7. ஏன் என்னுடைய ஒரு படிமத்தை நீக்குகிறீர்கள்? அதே போன்ற இன்னொரு படிமத்தை விட்டு வைக்கிறீர்கள்?
  8. ஒரு புத்தகம் பற்றிய கட்டுரையில் அப்புத்தகத்தில் மேல் பகுதியை படம் எடுத்து பதிவேற்றும்போது அதனை [1]நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு உரியவரிடம் உரிமைச்சான்று தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அப்புத்தகத்தை எழுதியவரோ, பதிப்பித்தவரோ இருந்தால் அவர்களிடம் எப்படி, எந்த முறையில் உரிமைச்சான்று வாங்கி பதிவேற்ற முடியும், என்பதை தெளிவுபடுத்துங்கள். சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லையென்றால் வேறு வழிமுறை என்ன?
  9. எந்தவொரு வெளியீட்டுக்கும் பதிப்புரிமைக்கான இயல்கால வரம்பு உண்டு. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம்.இதற்கு உலக அளவிலான ஏற்புடைய பொதுச் சட்ட வரையறைகள் உள்ளனவா? இருந்தால் அதைப் பற்றிய அறிவு விக்கிபீடியருக்கு உதவும்.