விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்/பெயரிடல் வழிமுறை
தாவரவியல் சொற்கள் பன்னாட்டு மொழியில் இருப்பதாலும், உலகின் தாவரப் பயன்பாடுகள் வேறுபடுவதாலும், தமிழ் மொழியில் அச்சொற்கள் அனைத்தும் இல்லை. பிற மொழியில் இருக்கும் சொற்களின், பிறப்பிடங்களை ஒட்டியும், அதன் மூலப் பொருளுக்கு ஏற்படவும் புதிய பெயர்களை ஏற்படுத்த பின்வரும் கட்டுரைகள் உங்களுக்கு உதவலாம். மேலும், இப்பக்கத்தில் தொடர்புடைய கணிய நுட்பங்களும் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
- தாவரவியல் அருஞ்சொல் விளக்கத்தொகுதி
- இலத்தீன் கிரேக்க அறிவியற்பெயர்ப் பட்டியல்
- தாவரவியலாளர் பெயர்சுருக்கப் பட்டியல்
- தாவர வகைப்பாட்டின் பதவுரைப் பட்டியல்
- பகுப்பு:தாவரவியல் கலைச்சொற்கள் என்ற பகுப்பினையும் காணவும்.
- பகுப்பு:தாவரவியல் பெயருடையக் கட்டுரைகள் என்பதற்கு பொருத்தமான தமிழ் பெயர்கள் இருப்பின், மேலுள்ள உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
வழிமுறைகள்
தொகுஒரு தாவர இனத்தின் பிறப்பிடம்/தாயகம் ஒரே ஒரு நாடு என்றாலோ, மூலப்பெயரின் பொருள் தெரிந்தாலோ, தமிழ் பெயர் இல்லா சூழ்நிலையில், தமிழ் பெயரினை வைக்கலாம். எ-கா: Jasminum amabile என்பதன் பேரினம் மல்லி ஆகும். amabile என்ற இலத்தீனிய சொல்லுக்கு அழகு என்பது பொருளாகும். இதன் தாயகம் நேபாளம் என்பதால் நேபாள அழகு மல்லி என தமிழ்பெயரை முதலில் உருவாக்கலாம். ஆனால், பிறருக்கு அதனை அறிவித்து, பிறரின் எண்ணமறிந்து, விக்கிமீடிய வழிமுறைகள் படி, கட்டுரைக்கு பெயர் வைத்தல் வேண்டும்.
- எடுத்துக்காட்டு: மல்லியினங்களுக்கான முன்மொழிவினை, பேச்சுப்பக்கத்தில் இட்டுள்ளேன். காண்க: பேச்சு:மல்லிகை இனங்களின் பட்டியல்#மல்லி_இனங்களின்_பெயரிடல்
நுட்பங்கள்
தொகு- தாவரவியல் பெயர்களை தமிழில் மாற்ற இந்த நுட்பத்தினை பயன்படுத்துதல். எ-கா: Jasminum amabile ↔ ஜாஸ்மினும் அமாபைல் (இதில் கிரந்தம் தவிர்க்க மூல ஒலிமாற்று நிரலை மாற்றுதல்) ↔ யாசுமினம் அமாபைல் என்றும் மாற்றிய பிறகு, மேலுள்ள வழிமுறைகள் படி, தமிழ் பெயரும் வைக்கலாம்.
- https://tamilpesu.us/en/translite/
- https://itranslate.com/translate/latin-to-tamil