விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள்
(விக்கிப்பீடியா:10d இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வடிவமைப்புப் பணிகள்
தொகுஎண் | தேவை | காலக்கெடு | குறிப்புகள் | வடிவமைப்பு நிலை |
1 | கூடல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் | செப்டம்பர் 20 | இடம், நேரம், விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கான பயிற்சிகள், தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி பற்றிய உரையாடல் ஆகியன மட்டும் குறிப்பிட்டால் போதும். இதை அச்சடிக்கப் போவதில்லை. மின் சுற்றுக்கு மட்டும். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் தனித்தனியாகத் தேவை. | நிறைவுற்றது |
2 | அரங்கப் பதாகை | செப்டம்பர் 20 | நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் மேடைக்குப் பின்புறம் இருக்கும் பதாகை. தள முகவரியும் எடுப்பான எழுத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். இது flex bannerஆக மிகப் பெரிய அளவிலும் அச்சடிக்க ஏற்றதாக கூடிய நுணுக்கத்துடன் இருக்க வேண்டும். வேறு கூட்டங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப பொதுவான உரையைக் கொண்டிருக்க வேண்டும். இதே பதாகையைப் பண்பாட்டுச் சுற்றுலா வாகனத்திலும் சிறிய அளவில் கட்டிக் கொள்ளலாம். | நிறைவுற்றது |
3 | சட்டை | செப்டம்பர் 5 | பயனர் பேச்சு:Anton#விக்கி பத்தாண்டு கொண்டாட்ட சட்டை வடிவமைப்பு வேண்டுகோள். இயன்ற அளவு விரைவில் கிடைத்தால் உற்பத்தி செய்ய ஏதுவாக இருக்கும். | நிறைவுற்றது |
4 | கையேடு | செப்டம்பர் 5 | விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு பக்கத்தில் உரையைக் காணலாம். இதனை அச்சுக்கேற்ற வடிவில் PDF வடிவத்தில் அழகுற வடிவமைக்க வேண்டி இருக்கும். இத்துடன் கையேட்டிற்கான அட்டையும் (டெம்மி அளவு) தனியாக வடிவமைக்கப்பட வேண்டும். அட்டை TIFF கோப்பு வடிவில் வேண்டும். | நடைபெறுகிறது |
5 | பாராட்டுச் சான்றிதழ் | செப்டம்பர் 15 | தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் அடுத்தடுத்து வாசகங்கள் இருக்க வேண்டும். கீழே மூவர் கையெழுத்திடுவது போன்ற இடைவெளி இருக்கலாம். | நிறைவுற்றது |
6 | அஞ்சல் தலை | செப்டம்பர் 3 | வழக்கமான இந்திய அஞ்சல் தலை அளவில் தெளிவாகத் தெரியுமாறு இருக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியா இலச்சினை, தமிழ் விக்கிப்பீடியா என்ற வாசகம் இடம் பெற வேண்டும். | நிறைவுற்றது |
7 | கட்டுரைப் போட்டிப் பதாகைகள் | செப்டம்பர் 30 | ஊடகப் போட்டிக்குச் செய்தது போல் கட்டுரைப் போட்டிக்குச் சில பதாகைகள் தேவைப்படுகிறது. கட்டுரைத் தலைப்புகளுக்குப் பொருத்தமான சில படங்களைப் பயன்படுத்தலாம். | நடைபெறுகிறது |
8 | பத்தாண்டு கொண்டாட்டச் சின்னம் | செப்டம்பர் 15 | பரப்புரைகள், பதாகைகள், நிகழ்ச்சி வெளியீடுகளில் பயன்படுத்தும் வண்ணம், பத்தாண்டு கொண்டாட்டத்தைக் குறிக்கும் சின்னம். | நிறைவுற்றது |
9 | கட்டுரைப் போட்டிச் சான்றிதழ் | அக்டோபர் 20 | தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் அடுத்தடுத்து வாசகங்கள் இருக்க வேண்டும். கீழே மூவர் கையெழுத்திடுவது போன்ற இடைவெளி இருக்கலாம். | நடைபெறுகிறது |
கூடல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள்
தொகு-
English
-
தமிழ்
மேற்கண்ட இரண்டு வடிவமைப்புகளையும் தேவை, விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வோம்.
அரங்கப் பதாகை
தொகுபொதுத் தகவல்கள்
- அளவு - 10 x 2.5 ft
https://www.dropbox.com/s/i7p87i1z0qx2ae7/Tamil%20Wiki%20Aniversary%20Banner.ai , https://www.dropbox.com/sh/2pfh1lou1776sc3/QRoD-gGUju என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கலாம். தத்தம் ஊரில் பட்டறைகள் நடத்துவோர் இந்தப் பதாகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சட்டை
தொகுபொதுத் தகவல்கள்
- நிறம் - வெள்ளை (?)
- காலர் வைத்த சட்டை (பாக்கெட் இல்லை) (?)
- முன்பக்கம் (இடது பக்கம்)- விக்கி சின்னம் (விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம்).
- கைப்பட்டை (வலது பக்கம்) - தமிழ் விக்கிப்பீடியா ta.wikipedia.org.
- விக்கி சின்னம் அளவு - 4 அங்குலம் (அதற்கு ஏற்றவாறு எழுத்துரு)
- கைப்பட்டை அளவு - 4/5 அங்குலம்
- அளவு
அளவு | S | M | L | XL |
---|---|---|---|---|
மார்பு | 34-36 | 38-40 | 42-44 | 46-48 |
இடுப்பு | 30-32 | 32-33 | 33-34 | 36-38 |
விருப்பம் - அன்டன், தாரிக் ஆகிய இருவரின் வடிவமைப்பின் சிறந்த கூறுகளை உள்ளடக்கி எளிமையாக உள்ளது. --இரவி (பேச்சு) 12:18, 3 செப்டம்பர் 2013 (UTC) விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:24, 3 செப்டம்பர் 2013 (UTC) விருப்பம்--மணியன் (பேச்சு) 11:12, 12 செப்டம்பர் 2013 (UTC)
பாராட்டுச் சான்றிதழ்
தொகு- பொதுத் தகவல்கள்
- அளவு - Double Demy (22.5 × 35 அங்)/Quad Demy (35 × 45 அங்)
- நிறம் - CMYK (?)
பத்தாண்டு கொண்டாட்டச் சின்னம்
தொகுகையேடு
தொகுபொதுத் தகவல்கள்
- அளவு - Demy (17.5 × 22.5)
- அட்டை நிறம் - CMYK
-
முன் அட்டை மாதிரி - 1 (மேம்படுத்தியது)
கட்டுரைப் போட்டிச் சான்றிதழ்
தொகு- பொதுத் தகவல்கள்
- அளவு - A4
- நிறம் - CMYK
-
மாதிரி - 1 (மேம்படுத்தியது)
கட்டுரைப் போட்டிப் பதாகைகள்
தொகுஇற்றை
தொகு- பத்தாண்டுகள் கொண்டாட்டத்தின் பின்னணிப் பணிகளில் ஒன்றான வடிவமைப்புப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. மிகக் குறுகிய காலத்தில் சற்றும் சளைக்காமல், மாற்றங்களுக்கான கோரிக்கைகளைக் கண்டு அலுக்காமல், அன்டனும் தாரிக்கும் தனியிருவராக பல்வேறு வடிவமைப்புகளைக் குவித்தது தனிச்சிறப்பு. இருவரும் ஒருவருக்கு நல்ல புரிதலுடன் தகுந்த இடங்களில் தத்தம் வடிவமைப்புகளில் இருந்து எதைத் தேர்ந்தெடுத்தாலும் மனமுவந்து ஏற்றுக் கொண்ட பக்குவமும் சிறப்பு. தொழில்முறையாக இவ்வடிவமைப்புகளைப் பெற்றுக் கொண்டிருந்தோம் என்றால் பல ஆயிரம் உரூபாய்க்கு ஈடான நேர்த்தியான வடிவமைப்பு. பாராட்ட சொற்கள் இல்லை. இது போன்ற ஒரு வடிவமைப்பு அணி கிடைத்தது தமிழ் விக்கிப்பீடியாவின் பேறு.
- அச்சிடப்பட்ட பதாகைகள் மீண்டும் பயன்படும் வகையில் வெவ்வேறு ஊர்களில் உள்ள பயனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வேறு ஊர்களில் உள்ளவர்களும் இங்குள்ள பதாகைகளை வடிவமைப்புகளைப் பயன்படுத்தி எந்த நிகழ்வையும் நடத்தும் வண்ணம் பொதுவான பதாகைகளே வடிவமைக்கபட்டுள்ளன.
- தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுச் சின்னம் பல்வேறு ஊடகங்களிலும் பயன்பட்டது. இதற்கான ஆலோசனையும் வடிவமைப்பும் நன்று.
- சட்டையின் கையில் வரும் ஒரு வடிவமைப்பை மட்டும் செய்ய இயலாது என்று மறுத்தார்கள். இதை மற்றொரு இடத்தில் உறுதிப்படுத்த வேண்டும். அச்சுக்கு ஏற்றவாறு வடிவமைப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வடிவமைப்பில் எஞ்சியுள்ள பணிகள் தேவைக்கும் காலத்துக்கும் ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும்.