விக்கிப்பீடியா பேச்சு:ஆங்கில விக்கியில் உள்ள தமிழ்ப் பங்களிப்பாளர்களை ஈர்க்கும் திட்டம்

திட்டப் பக்கத்தில் உள்ள வேண்டுகோள் மடலை மேம்படுத்தித் தந்தால் ஆங்கில விக்கிப்பீடியா பயனர் பக்கங்களில் இடத் தொடங்கலாம். ஏற்கனவே, ஆங்கில விக்கியில் அறிமுகம் உள்ள சுந்தர், சோடா பாட்டில், லாச்சிக் போன்றவர்கள் இந்தப் பணியைச் செய்தால் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கலாம்--இரவி 08:54, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

ஏதாவது ஒரு படம் வேண்டுமே (சின்னக் குழந்தைகளின் படமாக இருந்தால் emotional blackmail க்கு ஏதுவாக இருக்கும், இல்லையென்றால் uncle sam needs you மாதிரி ஒரு படம் போடலாம்) வார்ப்புருவாக மாற்றி இட பெட்டி மாதிரி ஆக்கி (வண்ணப் பின்னணியில்) போடலாம். இப்போதைய செய்தி கொஞ்சம் நீளமாக இருப்பது போல இருக்கிறது. கொஞ்சம் அளவைக் குறைக்கலாம். --சோடாபாட்டில் 09:24, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

சோடா பாட்டில், ஆங்கில விக்கிப்பீடியாவில் tempo வைத்து கடத்தினாலும் சரி, லாலி பாப் காட்டி கடத்தினாலும் சரி. அவர்களின் உளவியல் புரிந்த உங்களைப் போன்றோர் தான் வேண்டுகோள் மடலைச் சீரமைக்க வேண்டும் :) --இரவி 09:36, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

இங்கு உள்ள படிமங்களில் ஏதேனும் உதவுமா என்று பாருங்கள். எல்லாமே தமிழ் தேவதைகள் :)--அராபத்* عرفات 11:31, 19 அக்டோபர் 2010 (UTC)Reply


கீழே ஒரு மாதிரி செய்தியைக் கொடுத்துள்ளேன். படம் தான் சிக்கவில்லை. அராபத், நீங்கள் கொடுத்த சுட்டியிலிருந்த அருமையான படங்களெல்லாம் non commericial CC licensed. காமன்சிலோ, ஆ. விக்கியிலோ ஏற்ற முடியாது. (இங்கும் ஏற்றக்கூடாது, பலதைத் தூக்க வேண்டும்). flickr இல் தேடிப்பார்க்கிறேன். நாம் போடும் செய்தியில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை - 10 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது, ஆங்கிலமும், தமிழும் கலந்த செய்தியாக இருக்க வேண்டும்; எழுத்துப்பெயர்ப்பு எளிது என்பதை சொல்ல வேண்டும் (tamil 99 பற்றி மூச்சு விடக் கூடாது. புது கீபோர்ட் லே அவுட் என்றால் பலரும் தலை தெரிக்க ஓடுகிறார்கள், வந்த பின் மாற்றிக் கொள்ளலாம்), நீண்ட “to do” பட்டியல் கூடாது, ஒரு தமிழ் பாப்பா படம் கண்டிப்பாக வேண்டும்.

கடைசி விஷயம் மட்டும் சிக்க மாட்டெங்குது. தேடிப்பார்க்கிறேன். done. வெள்ளோட்டம் பார்க்க முதலில் ஒரு புதிய பயனரின் பேச்சுப்பக்கத்தில் (”தமிழ் என் உயிர்” என்று பல எடிட் வார்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்) இந்த செய்தியை இட்டுள்ளேன். பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று. --சோடாபாட்டில் 15:09, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

நல்ல திட்டம் :) எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான். விக்கி சொற்களின் "Glossary"யும் தமிழில் இணையான விக்கி சொற்கள் மிகவும் அவசியம். என்னைப்போல் நகரத்தில் வளர்ந்து தமிழ் "ஓரளவே" படித்த விக்கியர்களுக்கு இது மிகவும் அவசியம். இங்கே ஓர் பக்கம் தொடக்கங்கியுள்ளேன், தமிழ் விக்கியர்கள் உதவ வேண்டும்.பக்கத்தின் பெயர் வேண்டுமானால் மாற்றிக்கொள்ளவும். நன்கு வளர்ந்த பின்னர் இதன் சுட்டியை "Shortcut links" உடன் சேர்த்தல் ஆங்கில விக்கியில் இருந்து வருபவர்களுக்கும் பிற மொழி விக்கியர்களுக்கும் இலகுவாக இருக்கும். ஸ்ரீகாந்த் 17:35, 19 அக்டோபர் 2010 (UTC)Reply
விரிவாக்கியுள்ளேன் ஓரளவு போதுமா என்று பாருங்கள்.--சோடாபாட்டில் 18:45, 19 அக்டோபர் 2010 (UTC)Reply
பின்ரீன்களே சோடா, உங்களைப்போல ஒரு ஐம்பது பேர் இருந்தால் ஒரே ஆண்டில் த.விக்கி ஆங்கில விக்கியை விட பெரிதாகி விடும் :) ஸ்ரீகாந்த் 18:11, 20 அக்டோபர் 2010 (UTC)Reply

வெள்ளோட்டம் பார்த்த முதல் ஆள் இங்கு வந்து இரெண்டொரு தொகுப்புக்களைச் செய்துள்ளார். சகுனம் நன்றாகத் தான் இருக்கிறது. செய்தியில் யாருக்கும் மாற்று கருத்து இல்லையென்றால், செய்தியை இடும் பணியை மெல்ல விரிவு படுத்தத் தொடங்குகிறேன்.--சோடாபாட்டில் 15:21, 20 அக்டோபர் 2010 (UTC)Reply

கலக்குங்க :)--இரவி 10:26, 21 அக்டோபர் 2010 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா தொகு

Did you know?
 
Our target demographic wondering what in the world is WP:ENGVAR
  • A large majority of the Tamil population is more comfortable with Tamil than English[மேற்கோள் தேவை]
  • Tamil Wikipedia, with 25,000 articles is one of the leading Indic language wikipedias
  • It is easy to type to in Tamil using transliteration tools like E-Kalappai, NHM Writer and Suratha
  • Tamil Wikipedia needs experienced wiki contributors like you to expand exponentially

எனவே வாருங்கள்! தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் கட்டுரைகளை மொழிபெயருங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி த. விக்கியில் புதிதாய் எழுதுங்கள்.

ஏற்கனவே, சுந்தர், சோடாபாட்டில், லாஜிக் விக்கி போன்ற பல ஆங்கில விக்கிப்பயனர்களின் வரவு தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க உதவி வருகிறது. நீங்களும் எங்களுடன் இணைந்தால் தமிழர்களுக்காக தமிழிலேயே கட்டற்ற அறிவுக் களஞ்சியத்தை உருவாக்கி விடலாம்.

English Speakers in India, Education in Tamil தொகு

  • English as the First Language - less than 0.1 %
  • English Speakers in India - 21 %
  • English Users - 68 %
  • http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_English-speaking_population
  • Tamil Nadu probably has a higher percentage of English speakers than the Indian average.
  • In India, a notable percentage study in Tamil at all levels.
  • In Sri Lanka, majority (Sri Lankan Tamils, Up Country Tamils, and Tamil Muslims) study in Tamil (95%+)
  • In Malaysia, majority Tamils study in Tamil at the primary level.
  • In Singapore, Tamil is a subject at all levels.
  • In Canada, Tamil is an optional subject in Toronto, including UofT, and York University.

--Natkeeran 17:18, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

that 21% is an exaggeration. ”வாட் இஸ் யுவர் நேம்” “மை நேம் இஸ் சோடாபாட்டில்” சொல்லத் தெரிந்தவர்களையேல்லாம் "english speakers" பட்டியலில் சேர்த்துவிடுகிறார்கள். --சோடாபாட்டில் 17:43, 19 அக்டோபர் 2010 (UTC)Reply
ஆமாம், நீங்கள் சொல்வது சரியே. வீதிப் பாதகைகளை வாசிக்கத் தெரிந்தவர்களை, ஆங்கிலத்தைப் பயன்படுத்துபவர்கள் பட்டியலில் சேர்த்து உள்ளார்கள். --Natkeeran 00:26, 20 அக்டோபர் 2010 (UTC)Reply

நற்கீரன், விழுக்காடுகளுக்கான ஆதாரங்கள் எவையும் உள்ளனவா? 68% ஆங்கிலப் பயனர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை--இரவி 21:16, 19 அக்டோபர் 2010 (UTC)Reply

ம், அது ஆங்கில் ஆசியரியர்கள் உற்பத்தி செய்த தரவுகள் என்ற படியால், தமக்குச் சாதகமாக திரித்து உள்ளார்கள் என்றே நினைக்கிறேன். 40-50 மில்லியன் முதன்மை ஆங்கிலப் பயனர்கள் என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறன். 90 % இந்தியர்கள், தமது மொழிகளில் அல்லது ஆங்கிலம் அல்லா மொழிகளில் பெரும்பாலும் இயங்குகிறார்கள் என்ற கூற்று சரியாக இருக்குமா? எனினும் தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் கல்வி கற்பவர்கள் விழுக்காடு 50 % நிச்சியம் தாண்டும் என்று நினைக்கிறன். தமிழ் உணர்வு ஆட்சியாளர்களுக்கு நன்றி. --Natkeeran 00:24, 20 அக்டோபர் 2010 (UTC)Reply
Return to the project page "ஆங்கில விக்கியில் உள்ள தமிழ்ப் பங்களிப்பாளர்களை ஈர்க்கும் திட்டம்".