விக்கிப்பீடியா பேச்சு:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு
பயனுள்ள வார்ப்புருக்கள்
தொகு- {{வார்ப்புரு:புதிய சொற்கள் அல்லது சொற்தொடர்கள் பயன்பாடு அறிவித்தல்}}
தமிழ் விக்சனரிக்கு உள் இணைப்பு தர இயலும்
தொகுதமிழ் விக்சனரிக்கு உள் இணைப்பு தர இயலும். இரண்டு எடுத்துக்கட்டுக்கள்:
ஆங்கில விக்சனரிக்கு ta: வை எடுத்துவிட வேண்டும். பிற மொழி விக்சனரிகளுக்கு அந்தந்த மொழி விக்கி குறியைப் பயன்படுத்த வேண்டும்
இணையத்தில் கலைச்சொற்கள்
தொகுபயனுள்ள சுட்டிகள்
தொகு- en:Wikipedia:Technical terms and definitions
- en:Wikipedia:Explain jargon
- http://valavu.blogspot.com/2006/05/1_29.html மின்னியல் உலகில் தமிழ் - 1
கலை
தொகுஇன்று நாங்கள் "கலை" என்னும்போது, "Arts" என்னும் பொருளையே எடுத்துக்கொள்கிறோம். ஆனால் தமிழில் கலை என்னும் சொல் எல்லா அறிவுத்துறைகளையும் குறிக்கவே பயன்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மருத்துவம் கூட ஒரு கலையாகவே கருதப்பட்டது. அனைத்துக் கல்வித் துறைகளுக்கும் தெய்வமான சரஸ்வதியைக் "கலைமகள்" என்றுதானே குறிப்பிடுகின்றோம். Mayooranathan 17:36, 5 ஏப் 2005 (UTC)
கலை என்பது எல்லாக் கலைகளையும் சுட்டும். கலை என்பது பிரிவு என்று பொருள் படுவது. நுட்பமும் உணர்த்தும். நிலாவின் பல்வேறு கூறுகளையும் கலை என்றுதான் கூறுவர். கலை மான் என்று சொல்லும் பொழுது கலை என்று சிறப்பாகக் குறிப்பிடுவது, ஆண் மானின் கிளைபோல் பிரிவுற்று இருக்கும் கொம்பைத்தான். கட்டிடக் கலை, வார்ப்புக் கலை, போர்க்கலை என்று எல்லா அறிவுத்துரைகளும் கலைதான்.--C.R.Selvakumar 22:17, 20 ஜூன் 2006 (UTC)செல்வா
கலைச்சொற்கள்
தொகுதுறைசார்ந்த கலைச்சொற்களைப் பொறுத்தவரை www.tamilvu.org தளத்தின் நூலகத்தில் கிடைக்கும் கலைச்சொல் அகராதிகளைப் பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன்.குறிப்பாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழக அகராதியைப் பயன்படுத்தினால் தமிழ் வழியில் பயின்றோர்க்கு துறைசார்ந்த கட்டுரைகளைப் படிக்கும்போது ஒரு தொடர்ச்சி இருக்கும். புரிதல் எளிதாகும்.விக்கியில் எதைப் பின்பற்றி வருகிறீர்கள் என்பது குறித்து என்னை ஆற்றுப்படுத்தவும். Paramatamil 17:27, 30 ஏப்ரல் 2006 (UTC)
- பொதுவாக www.tamilvu.org அகராதியே பயன்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கையிலும் நன்கு விரிவான கலைச்சொல் அகராதிகள், மற்றும் கலைச்சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும், www.tamilvu.org சில இடங்களில் இரு பொருள்களை தருவதோடு, எல்லா சொற்களுக்கும் பொருத்தமான பரிந்துரைகளை தருவதாக சொல்லமுடியாது. மேலும், www.tamilvu.org இன்றைப்படுத்தப்படுகின்றதா, அல்லது விரிவுபடுத்தப்படுகின்றதா என்று தெரியவில்லை. பக்கங்களை Redirect செய்வதன் ஓரளவுக்கு இப்பிரச்சினையை கையாளலாம்.
- எனினும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட கலைச்சொல் பட்டியலை விக்கிபீடியாவில் சேர்ப்பது நன்று என்றே எனக்கு படுகின்றது. அப்பட்டியல் www.tamilvu.org அடிப்படையாகவும், இலங்கை வழக்கங்களை உள்வாங்கியும், நல்ல கலைச்சொல்களை முன்னிறித்தியும் ஏற்படுத்தினால் நன்று. கட்டுரைகள் மேலும் மேலும் தமிழ் விக்கிபீடியாவில் இணைக்கப்படுமிடத்து, தேவைக்கேற்ப இப்பட்டிலை விரிவாக்கி கொள்ளலாம். இலத்திரனியல் துறைக்கு பின் வரும் பக்கங்களை கவனிக்க:
- மேலும், பின்வரும் அம்சமும் கலைச்சொல் குழப்பங்களுக்கு தீர்வின் ஒரு பகுதியாக அமையும். http://ta.wiktionary.org/wiki/electronics
- --Natkeeran 21:53, 30 ஏப்ரல் 2006 (UTC)
தமிழ் கலைச்சொற்களைப் பொறுத்தவரை இணையத்திலுள்ள அகராதிகளில் சிறந்ததும், விரிவானதும் www.tamilvu.org இல் உள்ள அகராதியே என்பதில் சந்தேகம் கிடையாது. நானும் இதையே கூடிய அளவுக்குப் பயன்படுத்தி வருகிறேன். ஆனாலும் புதிய சொற்கள் இதில் சேர்க்கப்படுவதாகத் தெரியவில்லை. அடிக்கடி இற்றைப்படுத்தப்படக்கூடிய கலைச்சொல் அகராதியொன்று தமிழில் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. விக்கி திட்டங்களில் ஒன்றில் இதனைச் செய்வது இலகுவானது என்பது எனது கருத்து. ஆனால், விக்கிபீடியாவில் சொற்பட்டியல்களைச் சேர்ப்பது அவ்வளவு நல்லதாக எனக்குப் படவில்லை. விக்சனரியில் இதனைச் செய்யலாம். (இங்கே_பார்க்கவும்)அதுதான் பொருத்தமானது. தேவைப்படும்போது விக்கிபீடியாவிலிருந்து விக்சனரிக்கு இணைப்புக் கொடுக்கமுடியும். Mayooranathan 18:12, 1 மே 2006 (UTC)
- விக்கிபீடியா ஒரு அகராதி இல்லை என்பதை நான் அறிவேன். சொற்பட்டியல்களை விக்கிபீடியாவில் சேர்க்க நான் பரிந்துரை செய்யவில்லை. எண்ணக்கரு பட்டியல்கள், அதாவது விக்கிபீடியாவில் கட்டுரையாக்கப்படவேண்டிய துறைசார் எண்ணக்கருக்கள்/சொற்கள்/தலைப்புகள் பட்டியலைதான் குறிக்க முனைந்தேன். இதை ஒரு தற்காலிக ஏற்பாடக கூட செய்து கொள்ளலாம். விக்சனரியின் கட்டமைப்பு தற்போது புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. --Natkeeran 18:45, 1 மே 2006 (UTC)
ஆங்கில விக்சனரி ஒரு பன்மொழி அகரமுதலி போலவே கட்டமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கருத்துப்படி ஆங்கில விக்சனரிகூட அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் இன்னும் முதிர்வு நிலையை அடையவில்லை என்றே கூறுவேன். எனவே தமிழ் விக்சனரியின் கட்டமைப்பில் விளக்கம் போதாமல் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனாலும், தமிழ் விக்சனரியின் கட்டமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவ்வளவு சிரமமானதாக இருக்காது என்றே நான் கருதுகிறேன்.
தமிழ் விக்சனரியின் கட்டமைப்பில் அடிப்படையாக இருக்கவேண்டியது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய தனித்தனிப் பக்கங்கள். ஒவ்வொரு பக்கமும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்குரிய பொருள்களையும், அவற்றின் பல்வேறு பயன்பாடுகளுக்குரிய இலக்கண விதிகள், எடுத்துக்காட்டுகள் மற்றும் வேறு விபரங்களையும் கொண்டிருக்கும். இச் சொற்களைத் தேடுவதற்காக இரண்டு வகையான வழிகள் இருக்கும்.
- அகர வரிசைத் தேடல்
- விடயம் சார்ந்த தேடல்
இதில் விடயம் சார்ந்த தேடலுக்காகப் பல்வேறு சொற் பட்டியல்கள் பின்னிணைப்புகள் என்ற தலைப்பில் இருக்கும்.
தற்போதைய தமிழ் விக்சனரியின் அமைப்பு ஏறத்தாள இவ்வாறுதான் உள்ளது. எனினும் தனித்தனிச் சொற்களுக்கான பக்கங்கள் விரிவான வளர்ச்சி அடையவில்லை என்பதுடன், இதன் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதிலும் அவற்றில் அடங்கவேண்டிய விபரங்கள் பற்றியும் தெளிவான தீர்மானத்துக்கு நாம் இன்னும் வரவில்லை. கலைச் சொற்கள் தொடர்பில், சில துறைகள் சார்ந்த தேடல் பட்டியல்கள்தான் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்குமான தனித்தனிப் பக்கங்கள் இனிமேல்தான் உருவாகவேண்டும். கலைச் சொற்களைப் பொறுத்தவரை இப் பக்கங்கள் தமிழில் ஒரு புதிய முயற்சியாக இருக்கும். ஏனெனில் கலைச்சொற்கள் தொடர்பில், தமிழில் இப்போது பட்டியல்கள் தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் மேற் குறிப்பிட்ட தனித்தனியான விபரப் பக்கங்கள் பல பயனுள்ள விபரங்களை உள்ளடக்கியிருக்கலாம். சில எடுத்துக்காட்டுகள்:
- சொல்லுக்கான வரைவிலக்கணம் (வெவ்வேறு துறைகளில் அவற்றுக்குரிய வேறுபாடுகளுடன்),
- பல்வேறு பிரதேசங்களிலும் புழக்கத்திலுள்ள மாற்றுச் சொற்கள்,
- அவற்றின் பொருத்தம் பொருத்தமின்மை பற்றிய விளக்கங்கள்,
- குறியீடுகள் இருப்பின் அவைபற்றிய விபரம் (எகா: ஒளிவேகம் - c),
- சமன்பாடுகள் அல்லது தொடர்புகள் (எகா: அடர்த்தி = திணிவு / கன அளவு)
- விளக்கப் படங்கள்.
மேலே குறிப்பிட்டவாறு பல வகையான மாதிரிப் பக்கங்களை உருவாக்கவேண்டும். இதன் மூலம் இது பற்றிய புரிதலையும் அதிகரித்துக்கொள்ளலாம். Mayooranathan 18:47, 3 மே 2006 (UTC)
- நல்ல கருத்து. பொருத்தமான இடங்களில் சொல் மூலத்தையும் இணைக்கலாம். -- Sundar \பேச்சு 06:25, 4 மே 2006 (UTC)
குறிப்புகள்
தொகுதமிழில் கலைச் சொல்லாக்க நெறியில் பாவாணர் மற்றும் அருளி இருவர் நெறிக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? தங்கள் நெறிக்கான காரணங்கள் / ஆதாரங்கள் என்ன?
"இதை விவரிக்க ஒரு சிறு நூலே எழுத வேண்டும். சுருங்கச் சொன்னால் மொழியும் நடையும் காலத்தின் போக்குக்கும் தேவைக்கேற்ப அமைய வேண்டும், எனும் கொள்கை உள்ளவன் நான். பழையனவிட்டு புதியன் புனையும் போக்கு வளர்ந்து வளம் பெற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். சுருங்கக் கூறுமிடத்து நாம் சங்க காலத்தை நோக்கி நகர்வதைவிட சங்க காலத்திலும் பன்மடங்கு மேம்பட்ட எதிர்காலத்தை நோக்கி விளைவு நடைபோடுவதே சாலச் சிறந்தது. அதுவே வளர்ச்சிக்கு வழி."
"பழந்தமிழ்ப் பற்றாளர்களில் சிலர் சங்க காலச் சொல் அடிப்படையில் அல்லது சாய்வில் புதிய சொல்லுருவாக்கம் அமைதல் வேண்டும் என்பது அவர்தம் நிலைப்பாடு எனக் கருதுகிறேன். இக்கால மக்களின் புரிந்துணர்வுக் கேற்பக் கருத்துணர்த்தும் வகையில், பொருள் தெளிவுறுத்தும் நிலையில தமிழ் சொல்லுருவாக்கம் அமைய வேண்டும் என்பது என் போன்றவர்கள் நிலை. அவர்கள் நிலைப்பாடு இலக்கியத்துக்கு வேண்டுமானால் ஓரளவு இயைபுடைய தாக இருக்கலாம். ஆனால் அறிவிய லுக்குச் சரியாக அமையவியலாது. இதில் பொருளுணர் திறனுக்கே முதன்மை நிலை. மொழிச் சிறப்புக்கு இரண்டாம் நிலையே. அவர்கள் முயற்சி பழந்தமிழ் இலக்கியச் சொல்களை அடியொற்றி சொல்லுரு வாக்கம் அமைதல் வேண்டும் என்பது. அவர்கள் நிலைப்பாடு இதுவே. இன்றைய வழக்காற்றை ஒட்டி புதிய சொற்கள் உருவாக்கம் பெற வேண்டும் என்பது என் போன்றோர் நிலை எனச் சுருங்கச் சொல்லலாம். அதற்கேற்படித் திறங்களையும் உருவாக்கம் செய்ய வேண்டும் என்பது காலக் கட்டாயம். அவ்வகையில் தொல்காப்பிய இலக்கணத்துக்குப்பின் ஒரு நன்னூல் இருக்கனும், நன்னூலுக்குப் பின் கால, மொழி மாற்றங்களுக்கேற்ப புத்திலக் கணம் வேண்டாமா? சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்." மணவை முஸ்தபா http://www.keetru.com/vizhippunarvu/may06/manavai_mustafa.html --Natkeeran 00:27, 29 ஜூலை 2006 (UTC)
கலைச்சொற்கள் ஆக்கம் என்பது எல்லா மொழிகளிலும் எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒன்றுதான் (ஆங்கிலம் உட்பட). இதில் பழமை என்றும் புதுமை என்றும் ஒன்றும் கிடையாது. சங்க இலக்கியத்தை நோக்கி யாரும் நடக்கச் சொல்லவில்லை (பாவாணர் உட்பட). சொற்களை எப்படி ஆக்குவது என்பதில் ஏற்கனவே உள்ள சொற்கள் எப்படி ஆக்கப்படுள்ளன என்பதை அறிந்துகொண்டு செய்வதில் ஒன்றும் தவறு இல்லை. எத்தனையோ கலைஞர்கள் (தொழிற்கலைஞர்கள்), தங்களுக்குத்தேவையான சொற்களைக் காலங்காலமாக ஆக்கிப் பயன்படுத்தி வந்துள்ளனர் (கடந்த 100-200 ஆண்டுகளாக வேண்டுமானால் இப்படி நிகழ்ந்தது குறைவாக இருக்கலாம்). எனவே இப்படித்தொழிற்கலைஞர்கள் எல்லாம் சங்க கால இலக்கியங்களைப் படித்து சொற்களை ஆக்க வில்லை. நல்ல சொல் எக்காலத்ததாக இருந்தாலும் பயன்படுத்தலாம். ஆனால் அச்சொல் பொருத்தமாகவும், பயன் பெருக்குவதாகவும் இருக்கவேண்டும். சொற்களைத் தேர்ந்து எடுத்தல் தேர்ந்து செய்தல் நல்லதுதான். 200-300 ஆண்டுகளுக்கு முன் தமிழ் இன்னும் அதிகமாக புழக்கத்தில் இருந்தது, மக்களும் எளிதாக புதுச்சொற்கள் ஆக்கவும், ஆக்கியதைப் புரிந்துகொள்ளவும் முடித்தது. இன்று அப்படி இல்லை. மணவை முஸ்தபா நிறைய தமிழுக்கு ஆக்கங்கள் தந்தவர், ஆனால் அவர் மேலே சொல்வதுபோல "பழந்தமிழ்ப் பற்றாளர்களில் சிலர் சங்க காலச் சொல் அடிப்படையில் அல்லது சாய்வில் புதிய சொல்லுருவாக்கம் அமைதல் வேண்டும் என்பது அவர்தம் நிலைப்பாடு எனக் கருதுகிறேன்." யாரும் இருக்கிறார்களா என அறியேன். சிலர் புதுமை என்னும் பெயரில் எது செய்தாலும் போற்றப்படவேண்டும், வரவேற்கப்படவேண்டும் எனக் கருதுகிறார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே என்னும் பழைய தொல்காப்பிய சொற்களைத் தவறாக பொருள் கொள்கிறார்கள். புதியன, புதிய சிறப்பை, புதிய நன்மையைத் புதிய ஏற்றத்தைத் தருமென்றால், கட்டாயம் வரவேற்க வேண்டும். பழையன தடையாய், வளர்ச்சியை மட்டுப்படுத்துவதாய் இருப்பின் கழிப்பதிலும், விலக்குவதிலும் தவறில்லை. ஆனால் இவற்றை நன்றாக ஆய்ந்து தீர உணர்ந்து (சற்றுத் தொலைநோக்கோடு எண்ணிச்) செயல்படுத்தவேண்டும். --C.R.Selvakumar 02:23, 29 ஜூலை 2006 (UTC)செல்வா
கலைச்சொல்லாக்கம் தொடர்பாக கவனிக்கத்தக்க சில கருத்துக்கள்
தொகுமாசச்சஞ்சிகை என்பது சுருக்கமாக மாசிகை என்றாயிற்று என்பது தவறான விளக்கம். பத்திரிகை என்பதில் இகை என முடிவதுபோல் மாசிகை, மாதிகை, தாளிகை என்று உருவாயின. மாசிகை பேச்சு வழக்கில் உருவானதால் மாதிகை எனப்பட்டது. (கருத்தாளர்:இலக்குவனார் திருவள்ளுவன்)--−முன்நிற்கும் கருத்து Ilakkuvanar Thiruvalluvan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- மாதிகை என்பது புழக்கத்தில் உள்ள சொல்லல்ல. மாதம் ஒருமுறை வெளியாகும் சஞ்சிகைகள் மாசிகை என்றே வழங்கப்படுகின்றன. மாசிகை என்பது மாத சஞ்சிகை என்பதன் சுருக்கமாகும் [மா(தசஞ்)சிகை]. அது மாசம் என்ற பேச்சுத்தமிழ்ச் சொல்லுக்கும் பொருத்தமாக வருவது ஒரு விரும்பத்தக்க விளைவு. மாசம் என்பதிலிருந்து மாசிகை வந்ததாக எடுத்துக்கொண்டு, மாதம் > மாதிகை என்பதே சரி என்று, இச்சொல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புழக்கத்திலில்லாத, புதிதாக உருவாக்கப்படும் பல சொற்கள், தமிழ் விக்கிபீடியாவில் மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது அவ்வளவு நல்லதாக எனக்குப்படவில்லை. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பயன்பாட்டிலுள்ள சொற்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். பொருத்தமான சொற்கள் இல்லை என்ற போது தான் புதிய சொற்களை உருவாக்கவேண்டும். குடை என்றசொல் சரியான பொருள்படவில்லை என்று சொல்லிக்கொண்டு, அது மழையைத் தடுப்பதால் மதடை அல்லது மடை என்று புதுப்பெயர் வைத்துக்கொண்டு நான் ஒரு கட்டுரையைத் தொடங்க முடியாது. Mayooranathan 19:24, 19 செப்டெம்பர் 2006 (UTC)
- மயூரனாதன், உங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ள சொற்பயன்பாடுகளை தயவு செய்து அந்தந்த பேச்சுப் பக்கங்களில் தெரிவியுங்கள். எனக்கும் பல சொற்பயன்பாடுகளில் உடன்பாடு இல்லை. தகுந்த இடங்களில் சுட்டிக்காட்டியும் வருகிறேன். (எடுத்துக்காட்டுக்கு, தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்). இது போன்ற அனைத்துப் பக்கங்களையும் விக்சனரிக்கு நகர்த்துவது கூட விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அகரமுதலிகளில் கூட புதுச்சொல் உருவாக்கங்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களுக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும் என்றும் எங்கோ படித்த நினைவு. இதனை ஒட்டி விக்சனரியில் கூட எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் ஒற்றை தமிழ்ச் சொல்லில் தமிழாக்கம் தருவதை தவிர்த்து விளக்கங்களாகத் தருகிறோம். மாதிகை என்பது புதிதாக உருவாக்கப்பட்ட சொல் என்றாலும் அதற்கான தேவை என்ன என்பதில் எனக்கும் ஐயம் தான். (இல்லை, தேவநேயப் பாவாணர் போன்றோரால் உருவாக்கப்பட்டது இச்சொல் என்றாலும், இச்சொல் புழக்கத்தில் உள்ள வேறு ஊடகங்களை குறிப்பிடவும்.) மாதம் தோறும் வருவது மாத இதழ், கிழமை தோறும் வருவது கிழமை இதழ் என்றே சொல்லி விடலாமே? மாத இதழ் என்று சொல்வது மாதிகை என்பதை புரிந்து கொள்வதை விட இலகுவானது அல்லவா? தவிர, முன்னொட்டுக்களை பல இடங்களிலும் பயன்படுத்தலாம். மாத வாடகை, மாத விலக்கு என்பது போல்..அதே வேளை மாசிகை என்பது புழக்கத்தில் இருந்தாலும் அதை விக்கிபீடியாவில் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. சஞ்சிகை தமிழ்நாட்டில் புழக்கத்தில் இல்லை. சஞ்சிகை என்பது தமிழ்ச்சொல்லாகவும் தெரியவில்லை. இதழ், மாத இதழ் என்பவையே என் பரிந்துரைகள். என்னுடைய மறுமொழியில் அறியாமை தென்படுமானால், தயவு செய்து பொறுத்து தகுந்த விளக்கங்கள் தரவும்.--ரவி 20:06, 19 செப்டெம்பர் 2006 (UTC)
ரவி, நான் இது தொடர்பான கருத்துக்களை முன்னரும் பல இடங்களில் தெரிவித்துள்ளேன். அண்மையிலும் நவச்சாரியம் (அமேனியா) பேச்சுப் பக்கத்திலும் சில குறிப்புக்களை விட்டுள்ளேன். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை படித்தேன். யார் எழுதியது, எதிலே வந்தது என்பதெல்லாம் ஞாபகம் இல்லை. ஆனால், அதிலிருந்த இரண்டு விடயங்கள் ஏனோ மிகத் தெளிவாக இன்னும் நினைவில் உள்ளன. அவற்றில் ஒன்று இந்த மாசிகை பற்றிய குறிப்பு. அக் கட்டுரை தமிழில் புதுச் சொல்லாக்கம் பற்றியது தான். புதியவற்றைக் குறிக்க உருவாகப்படும் தமிழ்ச் சொற்கள்.சொற்களாக இல்லாமல் சொல் தொகுதிகளாக உள்ளனவென்று கூறி அதனைக் கண்டித்து எழுதப்பட்டிருந்தது. குடை என்றொரு சொல் இல்லாவிட்டால் அதற்கு மழை தடுப்பான் என்று பெயர் வைத்திருப்பார்கள் எனவும் நையாண்டி செய்திருந்தார் அதை எழுதியவர். அக்காலத்தில் தமிழ் மாத இதழ்களில், மாத சஞ்சிகை என்றே முகப்பில் எழுதி வந்தார்கள் போலும். சில மாத இதழ்கள் மாசிகை என்று எழுதத் தொடங்கியிருந்ததைப் பாராட்டியிருந்தது அக்கட்டுரை. பொருட்களையோ, கருத்துருக்களையோ, வேறு ஏதாவதையோ குறிக்கும் தமிழ்ச் சொற்கள் ஒரே சொல்லாக இருப்பது விரும்பத்தக்கது என்பது தான் எனது கருத்தும். Wardrobe என்பதற்கு உடை வைக்கும் அலுமாரி என்று பெயர் வைத்தால் எழுதும்போது ஒவ்வொன்றையும் விபரமாக விளக்கி எழுதிக்கொண்டு போவதுபோல் இருக்கும். computer என்பதற்குக் கணிப்புச் செய்யும் பொறி என்று எழுதினால் சிலசமயம் விளக்கம் கூடுதல்தான் ஆனால் கணினி என்பதுதான் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழில் விடயங்களை இலகுவாக விளங்க வைப்பதற்கும் நல்லது. Mayooranathan 20:42, 19 செப்டெம்பர் 2006 (UTC)
குறிப்புகள் - ஆக்கச் சொற்கள்
தொகு- "பெயர்கள், இடுகுறி, காரணம் என்பவற்றோடு மரபும் ஆக்க்கமும் சேர்ந்து நான்கு வகையாகின." --Natkeeran 23:36, 17 மார்ச் 2007 (UTC)
சொற்களை ஆக்கும் வழிகள்
தொகு- வேர்ச்சொற்களோடு இலக்கண உறுப்புகளை சேர்ப்பது.
எ.கா: பண் -> பண்பு, பண்பாடு, பண்ணுதல், பண்ணினான் [4]
- மொழிபெயர்ப்பு
இலக்கிய பிழை
தொகுதமிழ் விக்கிபீடியாவின் "விக்கிப்பீடியா:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு" பக்கத்தில் "ஒவ்வொரு பக்கங்களின்" என்னும் இலக்கிய பிழை உள்ளது. “பின்னர் ஒவ்வொரு பக்கத்தின் நோக்கமும், தேவைகளும் ஆராயப்பட்டு” என்பதே சரி. தயவு செய்து திருத்தவும்.--−முன்நிற்கும் கருத்து இளவேனில் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- இளவேனில், தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இப்படியான எழுத்து, இலக்கணப் பிழைகளைக் கண்டால் நீங்களே அதனைத் திருத்தி விடுங்கள். விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். எவரும் தொகுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.--Kanags \பேச்சு 07:41, 9 மார்ச் 2009 (UTC)
பிழையைச் சுட்டிக்காட்டும் இடத்திலேயே பிழைகளா? இலக்கியப் பிழை என வர வேண்டும். தவற்றைச் சுட்டிக்காட்டி என வரவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.--−முன்நிற்கும் கருத்து Ilakkuvanar Thiruvalluvan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.