விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கணக் கொள்கைகள்

தமிழ் இலக்கணப் படி, எந்த ஒரு தமிழ்ச் சொல்லும் மெய்யெழுத்தில் தொடங்கலாகாது. இதனை தமிழ் விக்கிப்பீடியா பின்பற்றும் தமிழ் இலக்கணக் கொள்கைகளுள் ஒன்றாக அறிவிக்கப் பரிந்துரைக்கிறேன். பார்க்க விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#மெய்யெழுத்தில் சொல் தொடங்குதல் --ரவி 17:34, 12 ஜனவரி 2009 (UTC)

ஆதரவு: 5
எதிர்ப்பு: 0

கருத்துகள் தொகு

  • ஆதரவு --செல்வா 18:18, 12 ஜனவரி 2009 (UTC) தமிழ் முறையை மீறி பெயரிடும் தனியாட்களின் பெயர்களும், நிறுவனங்ககளின் பெயர்களும், திரைப்படத் தலைப்புகளும் எவ்வாறு தமிழ் விக்கிப்பீடியா, கொள்கைகள், பரிந்துரைகள் என்னும் நோக்கில் எதிர்கொள்ளும் என்றும் கருத்து தேர்வது நல்லது. மொழியைக் காக்க வேண்டிய சில அகராதிகளும், கலைக்களஞ்சியங்களுமே கூட, வேலியே பயிரை மேய்வது என்பது போல, சில வேளைகளில் மெய்யெழுத்தில் தொடங்கிப் பெயரிடுகிறார்கள். எடுத்துக் காட்டு: "க்ரியாவின்" தற்காலத் தமிழ் அகராதி.--செல்வா 19:08, 12 ஜனவரி 2009 (UTC)
  • எந்த தமிழ் சொல்லும் மெய்யெழுத்தில் தொடங்குதல் கூடாது குறிப்பாக தலைப்பு கூடவே கூடாது. --குறும்பன் 22:54, 6 ஜனவரி 2009 (UTC)
  • அடிப்படையான மறுக்க முடியாத இலக்கண மரபு. கட்டாயம் கொள்கையாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 04:02, 7 ஜனவரி 2009 (UTC)
  • தமிழின் மாற்ற முடியாத இலக்கண மரபில் இதுவும் ஒன்று, ஆமோதிக்கின்றேன். தமிழ்ச் சூழலில் இயல்பாகவே பேச்சுத் தமிழில் கூட மெய்யெழுத்தொலியில் யாரும் தொடங்குவதில்லை. --விண்ணன் (பேச்சு) 23:38, 29 ஆகத்து 2015 (UTC)Reply
Return to the project page "தமிழ் இலக்கணக் கொள்கைகள்".