விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா - CIS-A2K - விக்கிமீடியா அறக்கட்டளை - கூகுள் நிறுவனம் இணைவாக்கம்
பரிந்துரைகள்- நீச்சல்காரன்
தொகுஇந்தக் கூட்டுத் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் பாதிக்காத வகையில் ஏப்ரல் 2025 முதல் தொடங்கலாம். விருப்பமுள்ள வெளிநாட்டுப் பயனர்களுக்கான நிதி ஆதாரத்தை அறக்கட்டளை மூலம் தனியாகப் பெற்றுக் கொள்ளவும் இந்தக் கால இடைவெளி உதவும். ஐயாயிரம் கட்டுரைகள், கூகிள் பரிந்துரைக்கும் தலைப்புகளுடன் நமது தலைப்பு போன்ற இலக்குகளை ஏற்கலாம். இது பொதுவான மேம்பாட்டுத் திட்டமில்லை என்பதால் இதில் வழக்கமாக நடைபெறும் பயிலரங்குகள் குறிப்பாக மாணவர்களை மையமாகக் கொண்டு அல்லாமல் பரந்துபட்ட துறை வல்லுநர்களை மையமாகக் கொண்டு நடத்தலாம் என நினைக்கிறேன். கூகிள் தொழில்நுட்பங்களைப் (google vision, Gemini API, google books) பெற்று விக்கிப்பீடியாவை வளர்க்கத் திட்டமிட விரும்புகிறேன். கட்டுரைகளை வளர்க்க உதவும் நூல்களை விக்கிமூலத்தில் மெய்ப்புப் பார்க்கவும், கலைச்சொற்களை அதிகரிக்க விக்சனரியையும் கூட்டாகக் கொண்டு திட்டமிடப் பரிந்துரைக்கிறேன். அதன் விளைவாக நல்ல மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை உருவாக்கலாம். சட்டம், அறிவியல் தொடர்பான தகவல்களில் இடைவெளியிருப்பதாக நினைக்கிறேன் இவற்றைப் போல நான்கு கருவை அடையாளங் கண்டு அதை வைத்து நான்கு காலாண்டில் நான்கு நேரடிப் பயிலரங்கு, 12 இணையவழிப் பயிலரங்கு, அவ்வப்போது தொடர்தொகுப்பு என்று வடிவமைக்கலாம். பன்னிரண்டு மாதமும் பரிசுப் போட்டியாக அல்லாமல் இயல்பான பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். போட்டிக்குப் பிறகு பரிசளிக்காமல் பயனரின் கருப் பொருளுக்கேற்ற நூல்களை முன்னதாகவே வாங்கிப் பரிசளிக்கலாம். பணமாக அல்லாமல் அடையாளப் பரிசாக கூகிள் நிறுவனப் பொருட்களைப் பரிசாக அளிக்கக் கேட்கலாம். கூகிளின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள நிரலாக்கப் போட்டியினை நடத்தலாம். பொதுவாகப் பள்ளி, கல்லூரிகளைவிட பல்கலைக் கழகங்கள், பதிப்பகங்கள், ஆய்வு நிறுவனங்களுடன் கூட்டாண்மை செய்யலாம் என நினைக்கிறேன். இந்தியாவிற்கு வெளியே எத்தனை ஆர்வமுள்ள பயனர் இதைப் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்று தெரிந்த பின்னர் அதற்கான கோரிக்கையை முன்னெடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களின் கருத்திற்கேற்ப காலக்கோட்டைப் பின்னர் திட்டமிட விரும்புகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 17:49, 30 நவம்பர் 2024 (UTC)
இணைப்புகள்
தொகுசிஐஎஸ் நம்முடன் பகிர்ந்த இரு இணைப்புகள் தகவலுக்காக இங்கு இற்றை செய்யப்படுகிறது.
தலைப்பு மாற்றப்பட்டது
தொகுபக்கத்தின் தலைப்பானது இரண்டு காரணங்களுக்காக மாற்றப்பட்டது:
- 4 அமைப்புகளுக்கு இடையேயான இணைவாக்கத்திற்கான பரிந்துரை மீது நடத்தப்படும் உரையாடல் இதுவாகும். முன்மொழிவு என இருந்தால் யாருடைய முன்மொழிவு என்பதில் குழப்பம் ஏற்படும். தேவைப்பட்டால், தமிழ் விக்கிப்பீடியாவின் முன்மொழிவுக்கென இன்னொரு பக்கத்தை ஆரம்பித்துக் கொள்ளலாம்.
- தமிழ் விக்கிப்பீடியா அல்லாத மற்ற அமைப்புகளின் பயன்பாட்டிற்காக தலைப்பில் ஆங்கிலக் கலப்பு இருந்தது. ஆனால் அந்த அமைப்புகள் இந்தப் பக்கத்தை பயன்படுத்துவதில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:54, 3 திசம்பர் 2024 (UTC)