விக்கிப்பீடியா பேச்சு:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2024
சில யோசனைகள்
தொகு- சில சர்வதேச விக்கித்திட்டங்களில்,புதிய கட்டுரைகளுக்கு 2 புள்ளிகள், விரிவாக்க கட்டுரைகளுக்கு 1 புள்ளிகள், பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில், திருநர், திருநங்கை போன்ற கட்டுரைகளுக்கு 3 புள்ளிகள் என்பன போன்ற அந்தந்த மொழிகளுக்கு தேவையான கட்டுரைகளுக்கேற்ப, மதிப்பீட்டிற்கான சில விதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதே போன்று நமது தமிழ் விக்கியில் எந்த கட்டுரைகளுக்கு முன்னுரிமைகள் கொடுக்கலாம்? அவசியம் என்பதையறிந்து மதிப்பீடு செய்யலாமே???
- கட்டுரைத்தலைப்புகள் முன்னதாகவே கொடுத்தால் பயனர்கள் திட்டமிட எளிதாக இருக்கும்.
கட்டுரைகளை சமர்ப்பித்தல்
தொகுதிட்ட விதிகளின்படி 4000 பைட்டுகள் அல்லது 250 சொற்கள் என்பது தானே ஆனால் கருவியில் கட்டுரைகளை இணைக்கப்போனால் 4000 பைட்டுகள் மற்றும் 250 சொற்கள் என்பது போல கட்டுப்பாடு இருப்பதால், இணைக்க முடிவதில்லை. தயவுசெய்து கவனிக்கவும்.
சில சந்தேகங்கள்
தொகுஇங்கே நடுவர்கள் யார் என முதன்மை பக்கத்தில் குறிப்பிடப்படவில்லை. எனினும் "CampWiz" இல் குறிப்பிட்டுள்ள நடுவர்களை இங்கே குறிப்பிட்டுளேன். பயனர்:Neechalkaran , பயனர்:பிரயாணி, பயனர்:கி.மூர்த்தி
- சில கட்டுரைகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது ஆனால் பெரும்பாலான கட்டுரைகளுக்கு வழங்கப்படவில்லை. ஏதேனும் சிறப்பு காரணம் இருந்தால் புலப்பபடுத்தவும். அது மேலும் உதவியாக இருக்கும்.
- மேலும் இதற்குரிய தலைப்புகளில் பின்வருமாறு முதன்மை பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"கட்டுரைகளின் கருப்பொருள்கள் நாட்டுப்புறக் கலைகளை அடிப்படையாகக் கொண்டோ, பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும்."
இதில் என்னென்ன அடங்கும் என்பதை தெளிவு படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆங்கில பதிப்பில் இது விரிவாக இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது:
"Folklore Participants are encouraged to explore a myriad of folklore topics from around the world. The scope includes, but is not limited to, folk festivals, dances, music, activities, games, cuisine, traditional wear, fairy tales, plays, arts, religion, mythology, and more. Contributors have the opportunity to delve into the rich tapestry of global traditions, capturing the essence of intangible cultural heritage.
Women in Folklore This theme expands the narrative to spotlight the often-overlooked contributions of women and queer individuals in folk culture. Participants can explore the stories of folk artists, dancers, singers, musicians, game athletes, and delve into the portrayal of women in mythology, folklore, and fairy tales. Topics may include women warriors, witches, and examinations of gender roles within the rich fabric of folklore."
இது பொதுவாக சமயம், கலைத்துறை, விளையாட்டு, வரலாறு மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட எல்லாவற்றியும் குறிக்கும்படி அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
எனவே இதை தெளிவு படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நன்றி!
Magentic Manifestations (பேச்சு) 06:28, 14 மார்ச்சு 2024 (UTC)
நேரடிப் பயிற்சி
தொகுஇந்த போட்டியினையொட்டி ஒரு நேரடிப் பயிலரங்கினை மார்ச் 24 ஆம் தேதி மதுரையில் நடத்துகிறோம். சின்னசொக்கிக்குளத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மதுரையைச் சுற்றியுள்ள ஆர்வலர்களுக்குப் பயிற்சியளிக்கும் வகையில் மதுரைப் பயனர்களால் இந்தப் பயிலரங்கு திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களைக் கலந்து கொள்ளச் செய்யலாம். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். -நீச்சல்காரன் (பேச்சு) 11:33, 21 மார்ச்சு 2024 (UTC)
- இந்தப் பயிற்சியின் விளைவாக நாளை ஏப்ரல் 27 இல் மீண்டும் சின்னசொக்கிகுளத்தில் அரை நாள் பயிலரங்கு நடைபெறுகிறது. விடுபட்டவர்கள் மேலும் விருப்பப்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 04:41, 26 ஏப்பிரல் 2024 (UTC)