விக்கிப்பீடியா பேச்சு:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்
பரிந்துரைகள்
தொகுதிட்டப் பக்கத்திற்கு நன்றி. மாதமொருவரை ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆழமான பயிற்சியினை 30 நிமிட அளவில் வழங்கச் செய்யலாம். அடுத்த 30 நிமிடம் கூடுதல்/விடுபட்ட தகவல்களைப் பகிரவோ பொது உரையாடல்களாகவோ அமைத்துக் கொள்ளலாம். பயிற்சிக்கான தலைப்புகள் சில: பல்லூடகங்களை இணைத்தலும் சவால்களும், வார்ப்புருக்கள் உருவாக்கமும் பயன்பாடுகளும், தகவல்பெட்டிகளைக் கையாளுதல், மேற்கோள்களைச் சரியாக இணைத்தல், பகுப்புகளை எவ்வாறு அமைக்கலாம் அமைக்கக்கூடாது, பிழையின்றி எழுதுதல், தொழில்நுட்பக் கருவிகள், பொதுவான உதவிக் குறிப்புகள் போன்ற பயனர்களின் தேவைக்கும் பயிற்சியாளரின் வசதிக்குமேற்ப நடத்தலாம். ஆர்வமுள்ளவர்கள் தாங்கள் விரும்பும் தலைப்பில் பயிற்சியளிக்க முன்பதிவு செய்யலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 15:49, 28 நவம்பர் 2023 (UTC)
- நீங்கள் குறிப்பிட்டுள்ள முதல் 30 + 30 நிமிடங்கள் ... இப்போது பங்களித்து வருவோருக்கும், முந்தைய மாதம்/ மாதங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கும் உகந்ததாக இருக்கும். புதிய பயனர்களும் கலந்துகொள்கிறார்கள் எனில், அந்நாளில் அவர்களுக்குரியப் பயிற்சியினை தனியாக வைத்துக்கொள்வதே பயனளிக்கும் எனக் கருதுகிறேன். அப்பயிற்சியானது 2 மணிநேரமாக இருக்கவேண்டும் என்பது எனது பரிந்துரை. எடுத்துக்காட்டாக, காலை 10 - 12 மணி வரை அவர்கள் கலந்துகொள்வர். 12 மணிக்கு மற்றவர்கள் இணைவர். 1 மணி வரை நீங்கள் குறிப்பிட்டுள்ள உரையாடல்கள் நடக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:52, 28 நவம்பர் 2023 (UTC)
பொதுப் பயனர்களின் மாத கலந்துரையாடலுக்கு உரையாடல்களைச் செய்யலாம் ஆனால் இந்தப் புதிய பயனர்களுக்கெனத் தனிப் பயிற்சிகளை எல்லாம் முடிந்தளவிற்குக் குறைவான ஒருங்கிணைப்பில் செய்யத் திட்டமிட வேண்டும். இயன்ற அளவில் பயனர்களைத் தாங்களாகக் கற்றுக் கொள்ள சில வாய்ப்புகளை ஒருமுறை ஏற்படுத்திவிட்டுப் பின்னர் மேற்பார்வை மட்டும் இடுமாறு செய்ய வேண்டும். ஒளிப்பதிவுகள், ஆவணங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தைப் பயிற்சியை அறிவித்துவிட்டு அதை மட்டும் அனைத்துப் பரப்புவழிகளிலும் பரப்பினால் போதும். புதியவர்களை முன்பதிவு செய்யச் சொல்வது, வாட்சப்பில் கருத்து கேட்பது, நினைவூட்டல் அனுப்புவது என அதிக உழைப்பை எடுக்கக்கூடிய பணிகள் என்பதால் இயல்பான விக்கிப் பணிகள் குறையக்கூடும். எனவே பளு ஏற்படாத வகையில் புதுப் பயனர் பயிற்சியைத் திட்டமிடலாம். நேரம் இறுதியாகிவிட்டால் அதை செய்தியட்டைகளில் அனைவருக்கும் பரப்பலாம். இதற்கு முன்னர் நமது பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுப்பலாம். எனது தொடர்பிலுள்ளவர்களுக்கு நானும் அனுப்புகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 14:16, 6 திசம்பர் 2023 (UTC)
2024 சனவரி உரையாடல்
தொகு@Sree1959: இந்த மாதம் உங்கள் வசதிக்கேற்ற ஒரு நாளில் உரையாடலை இணையவழியாக ஒருங்கிணைக்க இயலுமா? வேறு உதவிகள் வேண்டினால் உதவ முயல்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 16:57, 8 சனவரி 2024 (UTC)
- நன்றி, ஆனால் இன்னும் ஒரு வாரத்தில் மனைவியுடன் சிகிச்சைக்காக மூன்று வாரங்கள் கேரளா செல்லவிருக்கிறேன். அங்குள்ள நிலைமை எவ்வாறிருக்கக்கூடும் என தெரியாத நிலையில் ஏதும் உறுதியாக தெரியவில்லை. ஆகவே இம்முறை இந்த வாய்ப்பை பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதற்காக வருந்துகிறேன்.
:: ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 04:12, 9 சனவரி 2024 (UTC) ::