விக்கிப்பீடியா பேச்சு:விக்கிசார்பாக அங்கிகாரமற்று இயங்குவதை தடுத்தல் (வரைவு)
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
இதன் அடிப்படையில் முகநூலில் விக்கிபீடியாவின் தொகுப்பாளர் என இடுவதும் தவறா? நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:12, 21 அக்டோபர் 2013 (UTC)
- தொகுப்பாளர் தன்னை தொகுப்பாளர் என்று கூறுவது சரி
- நிர்வாகியல்லாத தொகுப்பாளர் தன்னை நிர்வாகி என்று கூறுவது தவறு
- நிர்வாகி தன்னை நிர்வாகி என்று கூறுவது சரி
- அதிகாரியல்லாத நிர்வாகி தன்னை அதிகாரி என்று கூறுவது தவறு புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 13:16, 21 அக்டோபர் 2013 (UTC)
- இவற்றை நீங்கள் உங்கள் எண்ணத்திற்கு வரைந்தீர்களா? அல்லது மேல்விக்கியில் அல்லது ஆங்கில விக்கியில் இருந்ததை மொழிபெயர்த்தீர்களா புருனோ?--Kanags \உரையாடுக 13:38, 21 அக்டோபர் 2013 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியா ஆங்கில விக்கிப்பீடியாவைப் போல் ஆயிரக் கணக்கில் பங்களிப்பாளர்களைக் கொண்டது அல்ல. இங்கே இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பதற்குக் இங்குள்ள சூழலை மையமாக கொண்டு நாம் தான் வகுக்க வேண்டும். எனவே தமிழ் விக்கி சூழலிற்கு ஏற்ப தந்துள்ளேன். இது வரைவு (draft) மட்டுமே. இதில் நம் சூழலிற்கு ஏற்றாற் போல் நீங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்--புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு)
- இனிமேல் பயனர்களாக இணைபவர்களுக்கு வரவேற்பில் இந்த விதிமுறைகளையும் சேருங்கள். மீறுவோர் தயவு தட்சணியம் பாராமல் விக்கியில் நிரந்தரத் தடை ஏற்படுத்துங்கள்.
இனி உங்கள் ஆட்சி தான்:))--Kanags \உரையாடுக 13:59, 21 அக்டோபர் 2013 (UTC)
- இனிமேல் பயனர்களாக இணைபவர்களுக்கு வரவேற்பில் இந்த விதிமுறைகளையும் சேருங்கள். மீறுவோர் தயவு தட்சணியம் பாராமல் விக்கியில் நிரந்தரத் தடை ஏற்படுத்துங்கள்.
- சிறீதரன், நாம் இதுவரை காணாத அளவுக்கு விரைவாகவும் புதுப்புது முறைமைகளும் வந்து கொண்டிருக்கின்றன. அவை அயர்ச்சி ஊட்டினாலும் நாம் நையாண்டியைத் தவிர்த்து நேரடியாகக் கருத்தின் அடிப்படையிலேயே உரையாட வேண்டும். இனி உங்கள் ஆட்சிதான் போன்றவற்றை நீக்குங்கள். -- சுந்தர் \பேச்சு 14:09, 21 அக்டோபர் 2013 (UTC)
- சரி ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் இது too much. 2006 ஆம் ஆண்டு ஆகத்தில் விக்கியில் இணைந்த ஒருவர் ஏழு ஆண்டுகளாகியும் விக்கி நடைமுறையை அறியாதவராக உள்ளார் என்பது கவலைக்குரிய விடயம்.--Kanags \உரையாடுக 14:16, 21 அக்டோபர் 2013 (UTC)
- சார், இது குறித்து நடைமுறைகள் இல்லையே. அதனால் தானே உருவாக்க பரிந்துரைக்கிறேன். எந்த விக்கி நடைமுறையை நான் அறியாமல் உள்ளேன் என்று கூறினால் நான் அறிந்து கொள்ள தயாராகவே உள்ளேன். புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 14:23, 21 அக்டோபர் 2013 (UTC)
- புரூணோ நீங்கள் என்ன செய்ய முற்படுகிறீர்கள் என்று புரியாத புதிராகவே உள்ளது. உங்கள் திறமையையும் ஆற்றலையும் தமிழ் விக்கியை வளர்க்கக்கூடிய வேறு பயனுள்ள வழிகளில் செலவிட்டால் எல்லோரும் பயன் பெறலாம். இப்போது பெரும்பாலான பயனர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்த்து ஒவ்வொரு பக்கமாகப் பயணம் செய்து கருத்துச் சொல்லிக்கொண்டு இருப்பதில் செய்யவேண்டிய பல வேலைகள் தடைப்படுகின்றன. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ---மயூரநாதன் (பேச்சு) 19:34, 21 அக்டோபர் 2013 (UTC) விருப்பம்--≈ த♥உழவன் ( கூறுக ) 02:38, 22 அக்டோபர் 2013 (UTC) விருப்பம்--கலை (பேச்சு) 07:23, 22 அக்டோபர் 2013 (UTC)
- சில சுயநல ஆசாமிகள் விக்கிசார்பாக அங்கிகாரமற்று இயங்குவதை தடுக்க முயல்கிறேன். சிலர் தங்கள் நலனிற்காக விக்கியின் நற்பெயரை கெடுப்படை தடுக்க முயல்கிறேன். விக்கியின் நற்பெயரை தடுப்பது ஆக்கப்பூர்வமான செயல் என்றே கருதுகிறேன். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 01:24, 22 அக்டோபர் 2013 (UTC)
- புரூணோ நீங்கள் என்ன செய்ய முற்படுகிறீர்கள் என்று புரியாத புதிராகவே உள்ளது. உங்கள் திறமையையும் ஆற்றலையும் தமிழ் விக்கியை வளர்க்கக்கூடிய வேறு பயனுள்ள வழிகளில் செலவிட்டால் எல்லோரும் பயன் பெறலாம். இப்போது பெரும்பாலான பயனர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்த்து ஒவ்வொரு பக்கமாகப் பயணம் செய்து கருத்துச் சொல்லிக்கொண்டு இருப்பதில் செய்யவேண்டிய பல வேலைகள் தடைப்படுகின்றன. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ---மயூரநாதன் (பேச்சு) 19:34, 21 அக்டோபர் 2013 (UTC) விருப்பம்--≈ த♥உழவன் ( கூறுக ) 02:38, 22 அக்டோபர் 2013 (UTC) விருப்பம்--கலை (பேச்சு) 07:23, 22 அக்டோபர் 2013 (UTC)
- இப்படியான கொள்கை வரைவுகளால் நீங்கள் சொல்லும் செயல்களைத் தடுக்கவியலாது. விக்கியில் எந்தப் பங்கும் அளிக்காமலேயே விக்கியின் பெயரைத்தவறாகப் பயன்படுத்த முடியும். ஏமாற்றுநர்களுக்கு ஆயிரம் வழிகள் உள்ளன. அவை ஏமாறுபவர்களால் ஏற்படுவது, ஏமாற்றுபவர்களின் தீவழித் திறமையால் நடக்கின்றது. தான் இன்ன பெரும் நிறுவனத்தின் இன்ன ஆள் என்று பொய்யாகக் கூட அடையாள அட்டை அடித்துச் சென்று ஏமாற்றலாம். ஓர் எடுத்துக்காட்டு: இதற்கு முன் தமிழ் விக்கியில் எந்த சிறப்பான பங்கும் அளிக்காத "கி" எனப் பெயர் தொடங்கும் ஒரு தனியாள் தமிழக அரசிடம் தான் விக்கியில் பெரிய பதவியில் இருப்பவர் ("இயக்குநர்") என்று கூறி பல நகர்வுகள் செய்தார். ஒரு நிலையில் அரசில் இருந்த ஒருவர் இங்கு விக்கியில் பங்களிக்கும் ஒருவரை அறிய நேர்ந்ததால் அவரை அணுகிக் கேட்கப்போய், உண்மை அறிந்து அச்செயல் தடுக்கப்பட்டது. அரசுக்கு விக்கியின் நடைமுறைகளை எடுத்துசொல்ல அது ஒரு வாய்ப்பாய் இருந்தது. விக்கியில் இயக்குநர் என்று யாரும் இல்லை. தலைவர் என்று யாரும் இல்லை என்றெல்லாம் சொல்லி விளக்க முடிந்தது. அவர் இங்கு பங்கே அளிக்காத போது எப்படி எந்தத் தடையும் (வாழ்நாள் தடை வேறு!!) அவருக்கு அளிக்க முடியும்? இப்படிப் பயனில்லாத தேவையில்லாக செல்லுபடியாகாத வரைவுகளை இட்டு என்ன பயன்? பங்களிக்கும் விக்கியர்களின் பொன்னான நேரம் செலவாகிக் கரைந்து போகின்றதே அதனைக் கருத்தில் கொள்ள வேண்டாமா? மேலும் யார் அங்கீகாரம்/ஏற்பு தருவது? யார் பெற்றுக்கொள்வது? இது தன்னார்வலர்களின் கூட்டுழைப்பால் கலைக்களஞ்சியம் உருவாக்க உள்ள களம். விக்கிப்பீடியா திட்டத்தின் தாய் நிறுவனமான விக்கிமீடியா நிறுவனத்துக்கு வேண்டுமானால் நிறுவன அடையாளம் தேவைப்படலாம். நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்னும் அடையாளம் இருக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏதும் தனி வருவாய் இல்லை. இது வெறும் ஆக்கப்பணிக் களம். பணிகள் உண்மையிலேயே தடைபடுகின்றன. --செல்வா (பேச்சு) 02:30, 22 அக்டோபர் 2013 (UTC) விருப்பம்--≈ த♥உழவன் ( கூறுக ) 02:38, 22 அக்டோபர் 2013 (UTC) விருப்பம்--கலை (பேச்சு) 07:24, 22 அக்டோபர் 2013 (UTC)
- சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அலுவல் தன் விபரப் படிவத்தில் தன்னார்வப் பணிக்கான இடத்தில் "Co-editor and oversight" என்று சேர்த்தேன். அதற்குக் காரணம் எனது விக்கிப்பணிகளைக் குறிப்பிடுவதற்கு ஒரு தலைப்பு தேவைப்பட்டது. எனக்குத் தெரிந்த ஓர் ஆங்கில விக்கி பொறுப்பாளர் (அதிகாரி) அவ்வாறு போட்டிருந்ததால் நானும் போட்டேன். பிறகு எனக்கே உறுத்தியது. என்னடா, நமது விக்கிப்பணிகள் சரி, பொறுப்பாளர் என்பது ஒரு சிறு பகுதிதானே, அதைப்போய் விக்கிக்கு வெளியே போடலாமா என்று எண்ணி "Co-editor and ecologist" என மாற்றிக் கொண்டேன். (நீ என்ன சூழியல் படித்தாயா என்று குற்றம் சாட்டிவிடாதீர்கள். ;) விக்கிச்சூழலில் மாணவனாகப் பயன்றவன் என்ற பொருளில் பயன்படுத்தினேன்.) இப்போது நினைத்துப் பார்த்தால் oversight என்று ஒரு தனி அணுக்க வசதி இருக்கும்போது நான் (எனக்கே தெரியாமல்) பிழையாகப் போட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. இது போன்ற சின்னச்சின்ன அறியாத்தவறுகள் செய்து மாட்டுபவர்களும் இருக்கலாம், விக்கியராகவே இல்லாமல் அங்கீகாரம் வேண்டுபவராகவும் இருக்கலாம் (அவர்களை நமது கொள்கையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது, விக்கிமீடியா நிறுவனத்துக்கு மடலனுப்புவதோடு சரி). இறுக்கமான கொள்கைக்குப் பதில் ஒரு புரிந்துணர்வு வழிகாட்டல் பக்கம் ஒன்றை எழுதலாம். இப்போது அவசரமாக வேண்டாம், சில நாட்கள் கழித்துக்கூடச் செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 10:24, 22 அக்டோபர் 2013 (UTC)
//இறுக்கமான கொள்கைக்குப் பதில் ஒரு புரிந்துணர்வு வழிகாட்டல் பக்கம் ஒன்றை எழுதலாம். இப்போது அவசரமாக வேண்டாம், சில நாட்கள் கழித்துக்கூடச் செய்யலாம்.// விருப்பம்--கலை (பேச்சு) 10:39, 22 அக்டோபர் 2013 (UTC)
விக்கிப்பீடியா தண்டனைக்களமல்ல
தொகு- விக்கிப்பீடியாவின் தடை போன்ற அரிதான நடவடிக்கைகள் தண்டனையளிக்கும் நோக்கத்தில் வந்தவை அல்ல என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் வாழ்நாள் தடை மிக மிக அரிதான வேளைகளில் மட்டுமே தரப்படும். விக்கிப்பீடியாவில் நாம் கலைக்களஞ்சியம் உருவாக்க முனைந்துள்ளோம். அதற்கு இடர் வரும்போது ஆங்காங்கே இடர்நீக்குமுகமாக சில கொள்கைகள் வகுத்துச் செயல்படுகிறோம். விக்கிப்பீடியா ஆட்சிமுறை ஆய்வுக்கூடமல்ல. -- சுந்தர் \பேச்சு 14:24, 21 அக்டோபர் 2013 (UTC) விருப்பம்--≈ த♥உழவன் ( கூறுக ) 02:38, 22 அக்டோபர் 2013 (UTC)
- இதைத்தான் சார் நானும் கூறுகிறேன். தண்டனை கடுமையாக இருந்தால் தான் குற்றம் செய்பவர்கள் அதை செய்யாமல் இருப்பார்கள். குறைவான தண்டனை என்பது குற்றம் செய்வதை தூண்டும் செயலாக அமையும்.புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 14:30, 21 அக்டோபர் 2013 (UTC)
- விக்கிப்பீடியா தண்டனை அளிக்கும் நோக்கில் வந்தவை அல்ல என்று சொன்னதைப் புரிந்துகொண்டீர்களா எனத் தெரியவில்லை (// தண்டனை கடுமையாக இருந்தால் தான் குற்றம் செய்பவர்கள் அதை செய்யாமல் இருப்பார்கள்.//)!! சுந்தர் சுட்டிய சுட்டியில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது, நீங்கள் சொல்வது நேர்மாறு! 'இங்கே பாருங்கள் தடைகள் என்பவை இங்கு செய்யப்படும் ஆக்கப்பணியைத் தொடர்ந்து செய்வதற்காக எடுக்கும் தடுப்புவேலை. தொடர்ந்து தீக்குறும்புகள் வழி இடையூறு செய்துகொண்டே இருந்தால் தடை செய்யலாம். --செல்வா (பேச்சு) 03:12, 22 அக்டோபர் 2013 (UTC)
- சுந்தர் ஒரு எண்ணம். பல லினக்சு குழுமத்தில் இருப்பது போல, தகுந்த பங்களிப்புகளை தந்தால், ஒரு சிறப்புகுறியீடு தருவது போல, இங்கும் ஒருவருக்கு விக்கியன்பு குறியீடு தரலாம். எவ்வளவு குறியீடுகளை ஒருவர் பெற்றுள்ளார் என்று பார்த்தவுடன் கணித்துவிடலாம். அதுபோல, பலவித வளர்ச்சிநிலைகளில் பங்களிப்பவர்களுக்கு, தனித்தனி குறியீடுகள் அளிக்கப்பட்டால், புதிய பங்களிப்பவர்களுக்கும், ஏற்கனவே இருக்கும் பங்களிப்பவர்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். விரைந்து செயல்படுவர். விக்கியும் வளரும். ஒவ்வொரு கட்டுரைப்பகுதியிலும் இருக்கும் உரையாடற்பகுதி, அக்கட்டுரையை வளர்க்கத்தான். எந்த கட்டுரையையும் எழுதா நிலையில், நமக்கு உரிமைகள் குறைவு என்பதே பலரும் புரிந்து கொள்ள வழிமுறைகளை நாம் உருவாக்குதல் மிக மிக அவசியமென்று நான் எண்ணுகிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 03:02, 22 அக்டோபர் 2013 (UTC)
- விக்கியன்புக் குறியீடு நல்ல திட்டமாகத் தோன்றுகிறது, நன்றி தகவலுழவன். ஆனால் அதை உரிமைகளுடன் தொடர்பேற்ற வேண்டியதில்லை. அக்குறியீட்டை அளப்பது எப்படி, ஒருவருக்கொருவர் நாமே பதக்கம் போல அளித்துக் கொள்ளலாமா? இதை எல்லாம் சற்று எண்ணிப் பார்த்து பொருத்தமான இடத்தில் முன்மொழிவாக வையுங்கள். -- சுந்தர் \பேச்சு 03:12, 22 அக்டோபர் 2013 (UTC)
- வழக்கம்போல, ஆர்வக்கோளாறு செய்துவிட்டேன்? என்னால் இடையூறு ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும்.--≈ த♥உழவன் ( கூறுக ) 03:39, 22 அக்டோபர் 2013 (UTC)
- விக்கியன்புக் குறியீடு நல்ல திட்டமாகத் தோன்றுகிறது, நன்றி தகவலுழவன். ஆனால் அதை உரிமைகளுடன் தொடர்பேற்ற வேண்டியதில்லை. அக்குறியீட்டை அளப்பது எப்படி, ஒருவருக்கொருவர் நாமே பதக்கம் போல அளித்துக் கொள்ளலாமா? இதை எல்லாம் சற்று எண்ணிப் பார்த்து பொருத்தமான இடத்தில் முன்மொழிவாக வையுங்கள். -- சுந்தர் \பேச்சு 03:12, 22 அக்டோபர் 2013 (UTC)
- இடையூறு இல்லை, தகவலுழவன். நல்ல திட்டம் தானே? அதை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதால் தனியாக முன்னெடுக்க வேண்டினேன். அவ்வளவுதான். -- சுந்தர் \பேச்சு 04:27, 22 அக்டோபர் 2013 (UTC)