விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013

முதல் வரியில் நவம்பர், 2013 என்றல்லவா இருக்க வேண்டும்? --Fireishere (பேச்சு) 07:19, 29 நவம்பர் 2013 (UTC)Reply

திருத்தப்பட்டது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. --அராபத் (பேச்சு) 08:33, 29 நவம்பர் 2013 (UTC)Reply


தென்காசி சுப்பிரமணியன், ஸ்ரீகர்சனின் கட்டுரைகளில் சிக்கல் உள்ளது. பலவற்றுக்கு மேற்கோள்கள் சேர்க்கப்பட்டே குறித்த பைட் அடையப்பட்டுள்ளன. எ.கா: வால்ட் டிஸ்னி --Antonஃ٠•●♥Talk♥●•٠ஃ 09:21, 1 திசம்பர் 2013 (UTC)Reply

மேற்கோள்கள் தரலாம். ஆனால் உசாத்துணைகள், வெளியிணைப்புகளைத் தான் வெட்டி ஒட்டக்கூடாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:58, 1 திசம்பர் 2013 (UTC)Reply

போட்டி விதிகள் - 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும். என்பதுதானே விதி. நான் குறிப்பிட்ட கட்டுரையில் 15360ஆவது பைட்டுக்கு முன்பே உரைப்பகுதியாக அல்லாதவை பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. --Antonஃ٠•●♥Talk♥●•٠ஃ 14:24, 1 திசம்பர் 2013 (UTC)Reply

இது குறித்த உரையாடல் ஏற்கனவே நிகழ்ந்தது. அதில் மேற்கோள் சேர்க்கலாம் என்று தான் கூறப்பட்டு இருந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:56, 1 திசம்பர் 2013 (UTC)Reply

இங்கு இல்லாதவரை அதனைக் கருத்தில் எடுக்க முடியாதே. --Antonஃ٠•●♥Talk♥●•٠ஃ 17:02, 1 திசம்பர் 2013 (UTC)Reply

அந்த உரையாடலின் பக்கம் தேடிக்கிடைக்கவில்லை. அதாவது சுந்தர் மேற்கோள்கள் சேர்க்காமல் அடுத்த கட்டுரைகளை வெற்றிபெற உருவாக்கப் போய்விடுகின்றனர். அதனால் மேற்கோளைச் சேர்ப்பதை விதியாக்க வேண்டும் என்றார். அதற்கு இரவி உசாத்துணை, நூற்பட்டியல், வெளி இணைப்புகள் போன்றவைக்கு தான் அவ்விதி பொரிந்தும். மேற்கோளுக்கு பொருந்தாது என்றார். அந்த பக்கம் நினைவில் இல்லை.

நீங்கள் சுட்டிய பக்கத்தில் இந்த விதிகள் இருந்தபோது தான் அந்த உரையாடலும் நடந்தது. எனினும் பயனர்:Ravidreams இடம் கேட்பதே சிறந்தது. இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் மேற்கோள்களை சேர்த்து வென்றவர்கள் உள்ளனர். அதனால் இனி வரும் போட்டிகளில் வேண்டுமானால் அவ்விதிகளை கொண்டுவரலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:51, 1 திசம்பர் 2013 (UTC)Reply

தென்காசி சுப்பிரமணியன் கூறுவது சரிதான். மணியன் இதே சந்தேகத்தை எழுப்பிய போது, மேற்கோள்களை சேர்க்கலாம் என இரவி பதிலளித்திருந்தார்.--அராபத் (பேச்சு) 07:12, 2 திசம்பர் 2013 (UTC)Reply
மணியன் அல்ல.. சுந்தர்தான் கேள்வி எழுப்பியது. இங்கு உள்ளது பார்க்கவும்.--அராபத் (பேச்சு) 07:22, 2 திசம்பர் 2013 (UTC)Reply
உரையாடல் தக்கவிதமாக போட்டி விதிகளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். (அதற்கு முன்பு சேர்ப்பவை யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன?) உரையாடல் விதியில் இற்றைப்படுத்தாதவிடத்து அதனைக் கருத்தில் கொள்ள முடியாது. முன்னர் நடந்த போட்டிகளில் மேற்கோள்கள் சேர்க்கப்பட்டிருப்பினும் குறிப்பிட்டளவிற்கு விரிவாக்கப்பட்டிருந்தது, மற்றும் போட்டியாளர்களால் கட்டுரைகள் விரிவாக்கப்பட்ட முறையினையும் நான் கவனத்திற் கொண்டிருந்தேன். ஆனால் இம்முறை அவ்வாறில்லை. எ.கா: என்.எஃப்.எல். கட்டுரை வெறும் மேற்கோளை மாத்திரம் சேர்ப்பதனூடாக இலக்கான 15360ஆவது பைட் கடந்ததால் தகுதியானதாக என்னால் கருத முடியாது. தொடர் கட்டுரைப் போட்டியின் நோக்கங்களில் ஒன்றை இது பாதிப்பதாக உணர்கிறேன். தென்காசி சுப்பிரமணியன், இம்மாத போட்டியின் முடிவுகளை இற்றைப்படுத்துமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --Antonஃ٠•●♥Talk♥●•٠ஃ 13:09, 2 திசம்பர் 2013 (UTC)Reply
இதுபோன்ற பிரச்சினைக்குரிய கட்டுரைகளுக்கு எளிய தீர்வாக ஒன்றைக் கொள்ளலாம். கட்டுரையின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை குறைந்தது 75 வரிகள் இருக்குமானால் விதிகளுக்கு உட்பட்டது எனக் கொள்ளலாம். ஒரு யோசனை தான். மேலும், இது போன்ற சிக்கல்கள் எழும் என்பதால், கட்டுரையாளர் கூடுதலாக இரண்டாயிரம் பைட்டுகளுக்கு கட்டுரையை விரிவு செய்யலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:51, 2 திசம்பர் 2013 (UTC)Reply

கருத்தில் கொள்ள முடியாது என்பதில் எனக்கும் ஏற்புதான். ஆனால் இதற்கு முன்னர் அப்படி எழுதி வென்றிருக்கிறார்களே. போன மாதத்தில் நந்தினி, கர்சன் இருவருமே அப்படிச் செய்திருக்கின்றனர். அதனால் இந்த மாதம் மேற்கோள் விதியை புதிதாகச் சேர்க்கலாம் என்கிறேன். இது அண்டனுக்கு ஒப்புதலா? இல்லையா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:18, 2 திசம்பர் 2013 (UTC)Reply

15359 பைட்டு உள்ள கட்டுரையில் ஒரு புள்ளி வைத்து 15360 என்ற எண்ணிக்கையைத் தொட்டாலும் கணக்கில் வரும் என்ற நிலவரத்தை உணர்ந்து தான் விதியை உருவாக்கினோம். ஒரு விதி என்று உருவாக்கினால் அதனை அடைவதற்கான இலகுவான வழியையும் போட்டியாளர்கள் இனங்காண்பது வழமை தான். மேற்கோள்களைச் சேர்க்கலாம் என்று விதிகள் பகுதியில் தெளிவாக குறிப்பிடாமல் விட்டது நமது தவறு தான். இதற்காகப் போட்டியாளர்களைத் தண்டிக்க வேண்டாம். சிறீகர்சன் புதியவர், இளையவர். அவரது பங்களிப்புஆர்வத்தை மதித்து ஐயத்தின் பயனை அவருக்குத் தருவது போட்டியின் உணர்வை மதிப்பதாக இருக்கும். தொடர்ந்து வரும் மாதங்களில் இன்னும் சிறப்பான விரிவாக்கங்களைத் தருமாறு அவரிடம் வேண்டுகோள் விடுக்கலாம். எனினும், போட்டியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர்களான ஆன்டன், தென்காசி சுப்பிரமணியன் முடிவுக்கு இதை விட்டு விடுகிறேன். இருவரும் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தால் வளர்முகமான முடிவு எடுக்கலாம் :) --இரவி (பேச்சு) 14:43, 2 திசம்பர் 2013 (UTC)Reply

எனக்கும் மேற்கோள் சேர்ப்பதில் உடன்பாடில்லை. ஆனால் அவ்விதியை இந்த மாதத்தில் இருந்து தொடர்வதே சிறந்தது. நான் ஸ்ரீகர்சன் எழுதிய கட்டுரைகளை சரி பார்த்துவிட்டேன். இரவி நந்தினியின் கட்டுரைகளை மட்டும் சரிபார்த்துக் கொடுத்தால் உதவியாய் இருக்கும். மற்ரவர்களுடையதையும் வேறு கட்டுரைப்போட்டி இற்றைகளையும் நான் செய்கிறேன் நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:08, 2 திசம்பர் 2013 (UTC)Reply

Return to the project page "2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013".