விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூன், 2013
சில சந்தேகங்கள்
தொகுபங்களிக்க எத்தனித்தபொழுது சில கேள்விகள் எழுந்தன.
- கட்டுரையின் மொத்த அளவினை எங்குசென்று காண்பது?
- கட்டுரையில் 15360 பைட் அளவில் ஒரே பயனர்தான் உருவாக்க வேண்டுமென்பது இல்லையா?. 15260 என்ற அளவில் உள்ள கட்டுரைக்கு வெறும் 100 பைட் அளவில் மேம்பாடுசெய்து பட்டியலில் இணைத்துக் கொள்ளலாமா? 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் என உள்ளதால் சந்தேகம் வந்துவிட்டது.
- எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகள் முன்பே கட்டுரையில் உள்ள பொழுது அவற்றை அப்படியே விட்டுவிடலாம் அல்லவா? ஐயத்தினை தீர்ப்பவர்களுக்கு தற்போதே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:07, 1 சூன் 2013 (UTC)
- ஒவ்வொரு கட்டுரையின் வரலாறு பக்கத்திலும் கடைசித் தொகுப்புக்கு அருகே பைட் அளவு குறிக்கப்பட்டிருக்கும்.
- //கட்டுரையில் 15360 பைட் அளவில் ஒரே பயனர்தான் உருவாக்க வேண்டுமென்பது இல்லையா?// இல்லை. விக்கியை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்பதால்.
- //15260 என்ற அளவில் உள்ள கட்டுரைக்கு வெறும் 100 பைட் அளவில் மேம்பாடுசெய்து பட்டியலில் இணைத்துக் கொள்ளலாமா?// சேர்த்துக் கொள்ளலாம்.
- //எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகள் முன்பே கட்டுரையில் உள்ள பொழுது அவற்றை அப்படியே விட்டுவிடலாம் அல்லவா?// ஏற்கனவே என்ன பகுதி இருந்தாலும் பரவாயில்லை. தேவையற்ற, தவறான உள்ளடக்கம் இருந்தால் வழக்கம் போல் நீக்கலாம்.--இரவி (பேச்சு) 08:15, 1 சூன் 2013 (UTC)
சூன் ஒன்றாம் தேதி ஒருவர் 1000 பைட்டிலிருந்து 15000 பைட் வரை தொகுக்கிறார் என வைத்துக்கொள்வோம். பின் 360 பட்கள் மட்டும் சேர்த்து இன்னொருவர் தன் பட்டியலில் கட்டுரையை இணைத்தால் என்ன செய்வது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:23, 3 சூன் 2013 (UTC)
- போட்டியை முன்னிட்டு ஒரு கட்டுரையை விரிவாக்க எண்ணியுள்ளீர்கள் என்பதை முன்பதிவு பக்கத்தில் குறித்து வைக்கலாம். கட்டுரையைத் தொகுக்கும் போது வேலை நடந்து கொண்டிருக்கிறது வார்ப்புருவை இட்டு வைக்கலாம். அல்லது, உங்கள் கணினியிலேயே முழு விரிவாக்கத்தையும் செய்து, ஒட்டு மொத்தமாக 15360 பைட்டு அளவைத் தாண்டும் வகையில் ஒரே தொகுப்பாகச் செய்யலாம். இதன் மூலம், மேற்கண்டது போன்ற ஒரு சூழல் வருவதைத் தவிர்க்கலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி கட்டுரைகளை விரிவாக்கும் பணியை நாம் இத்தனை நாளும் போட்டியின்றியே செய்து கொண்டிருந்தோம் என்பதையும் நினைவில் கொண்டால் :), இதை ஒரு விளையாட்டாகக் கருதி உற்சாகத்துடன் போட்டியில் பங்கு கொள்ளலாமே? :)--இரவி (பேச்சு) 18:20, 3 சூன் 2013 (UTC)
இப்போதைக்கு வேலையில் இருப்பதால் சிக்கல் இல்லை. பரிசு வேரு யாருக்காவது கிடைக்கட்டும். விட்டத்தை பார்த்து வெறித்துக் கொண்டிருந்த போது இந்த ஐயம் வந்ததால் கேட்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:40, 3 சூன் 2013 (UTC)
- கட்டுரைகளை விரிவாக்கும் வேகத்தைப் பார்த்தால் விட்டத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டிருப்பது போல் தெரியவில்லை. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:01, 24 சூன் 2013 (UTC)
மேலும்
தொகுநான் சாங்காய் நகரத்தை விரிவாக்கி உள்ளேன். கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் 20,000 கேபி ஆக காட்டுகிறது. ஆனால் முடிவுகள் பக்கத்தில் சாங்காய் இணைப்பின் மேலே சுட்டெலியை கொண்டு சென்றால் (hovering my mouse) 13.8 கேபி எனக் காட்டுகிறது. எது சரி ? ஏன் இந்த வேறுபாடு ?--மணியன் (பேச்சு) 08:19, 3 சூன் 2013 (UTC)
- நடுவரின் தீர்ப்பே இறுதி என்பது போல் வரலாற்றுப் பக்கத்தில் காட்டுவதே இறுதி முடிவு :) ஆனால், நீங்கள் சொல்வது போல் சுட்டியைக் கொண்டு செல்லும் போது எனக்கு பைட்டு அளவு ஏதும் தெரியவில்லையே? நீங்கள் ஏதாவது சிறப்பு நிரல் பயன்படுத்துகிறீர்களா? --இரவி (பேச்சு) 10:19, 3 சூன் 2013 (UTC)
- உலாவல் கருவியில் முதல் தேர்வில் உள்ளதை தேர்ந்துள்ளேன். ஒவ்வொரு இணைப்பிலும் அந்த இணைப்பின் பைட் அளவு, எத்தனை விக்கி இணைப்புகள், படிமங்கள் உள்ளன என்ற சுருக்கமும் கட்டுரையின் முதல் பத்தியும் popupஆகத் தெரியும்.--மணியன் (பேச்சு) 11:25, 3 சூன் 2013 (UTC)
- பயனுள்ள கருவி. சோதித்துப் பார்த்தேன். எடுத்துக்காட்டுக்கு, டோனி பிளேர் கட்டுரை 1.4 கிலோ பைட்டு இருப்பதாக இக்கருவி சொல்கிறது. வரலாற்றுப் பக்கமோ 2760 பைட்டு (2.69 கிலோ பைட்டு) இருப்பதாகச் சொல்கிறது. பக்கத்தின் உள்ளடக்கத்தை மட்டும் படியெடுத்துக் கணினியில் ஒரு .txt கோப்பில் இட்டுப் பார்த்தால் 2.8 கிலோ பைட்டு என்கிறது. ஆக, வரலாற்றுப் பக்கத்தில் இருப்பது தான் சரி என்று படுகிறது. ஒன்று, இக்கருவி பழைய தரவில் இருந்து அளவைக் கணக்கிடுவதால் இந்த வேறுபாடு வரலாம். அல்லது, இக்கருவியால் தமிழ் எழுத்துக்களுக்கான சரியான அளவைக் கணக்கிட முடியாமல் இருக்கலாம். கருவியைச் செய்தவரிடம் சுட்டிக் காட்ட வேண்டும்.--இரவி (பேச்சு) 11:47, 3 சூன் 2013 (UTC)
- நன்றி இரவி. நமது சூழலில் ஒரே சொல்லில் பல கட்டுரைகள் எழக்கூடிய வாய்ப்புள்ளதால் உள்ளடக்கதைக் காட்டும் இக்கருவி எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் வேறுபாடுகளை உள்ளே சென்று பார்க்காமல் சுட்டியிலிருந்தே கண்டுவிடலாம்.--மணியன் (பேச்சு) 03:05, 4 சூன் 2013 (UTC)
- ஒருவேளை இக்கருவி விக்கிக்குறியீடுகளைத் தவிர்த்துவிட்டு உரையை மட்டும் அளந்து சொல்கிறதோ? -- சுந்தர் \பேச்சு 15:56, 2 சூலை 2013 (UTC)
- உலாவல் கருவியில் முதல் தேர்வில் உள்ளதை தேர்ந்துள்ளேன். ஒவ்வொரு இணைப்பிலும் அந்த இணைப்பின் பைட் அளவு, எத்தனை விக்கி இணைப்புகள், படிமங்கள் உள்ளன என்ற சுருக்கமும் கட்டுரையின் முதல் பத்தியும் popupஆகத் தெரியும்.--மணியன் (பேச்சு) 11:25, 3 சூன் 2013 (UTC)
உரையாடல்
தொகு- பாலைவனம் கட்டுரையை இரவி ஏற்கனவே முன்பதிந்து வைத்திருந்தார். கவணிக்க தவறி விட்டீர்கள் என நினைக்கின்றேன் :)--அராபத் (பேச்சு) 08:30, 12 சூன் 2013 (UTC)
ஆம். கவனிக்கவில்லை. இருந்தாலும் கீழுள்ள நடைமுறையை பாருங்கள்.
\\நீங்கள் விரிவாக்க விரும்பும் தலைப்புகளை முன்கூட்டியே பதிவு செய்ய இங்குச் செல்லுங்கள். பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு கட்டுரை குறித்து இரட்டிப்பு வேலை செய்ய வேண்டாம் என்பதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு. எந்த விக்கிப்பீடியரும் எந்தக் கட்டுரையையும் தொகுக்கலாம் என்ற வழமையான நடைமுறையை இது தடுக்காது.\\ --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:34, 12 சூன் 2013 (UTC)
- ஆம். கண்டிப்பாக இதில் தவறேதும் இல்லை நன்பரே. ஒருவேளை இரவியும் இந்த கட்டுரையை தொகுக்க தொடங்கி இருந்தால் நேர விரையம் ஆகியிருக்கும் என்பதே நான் கூற வந்தது. வேறு உள்குத்து கிடையாது :)--அராபத் (பேச்சு) 13:13, 12 சூன் 2013 (UTC)
பந்திக்குப் பிந்தி வந்துவிட்டுப் பாயாசம் இல்லையா எனக் கேட்கலாமா? :) முன்பதிவுகள் ஒரு வசதிக்காகவே தவிர, பேருந்தில் துண்டு போடுவது போன்று அன்று :) --இரவி (பேச்சு) 14:06, 12 சூன் 2013 (UTC)
@அராபத். ஓ அப்படியா? நான் உங்களுக்கு தெரிந்து இருக்காதோ என்று நினைத்துக் கூறினேன். நீங்கள் என்னை இதுவரைக்கும் உள்குத்துவதற்கு ஏதும் அவசியமைல்லையே. அதனால் நான் அப்படி நினைப்பதில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:37, 12 சூன் 2013 (UTC)
வாழ்த்துக்கள்
தொகுமிக வெற்றிகரமான முயற்சியாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:04, 14 சூன் 2013 (UTC)
- தொடங்கிய முதல் மாதமே கட்டுரைகளின் எண்ணிக்கையும் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்வது மகிழ்ச்சியாக உள்ளது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18
- 20, 15 சூன் 2013 (UTC)
- போட்டி சூடாகப் போகிறது. வாழ்த்துக்கள். பின்னுக்கு இருந்து வந்து பிடிக்க முடியாது. அடுத்த மாதம் பல களைத்துவிடுவார்கள். அப்பொழுது பார்த்துக் கொள்லாம். --Natkeeran (பேச்சு) 13:36, 17 சூன் 2013 (UTC)
- தென்காசி சுப்பிரமணியன் பின்னுக்கு இருந்து வந்து தான் முந்திக் கொண்டு இருக்கிறார் :) சரி, அடுத்த மாசம் பார்ப்போம். இன்றோடு 100 கட்டுரைகளைப் போட்டியை முன்னிட்டு விரிவாக்கியுள்ளோம் !--இரவி (பேச்சு) 13:47, 24 சூன் 2013 (UTC)
- போட்டி சூடாகப் போகிறது. வாழ்த்துக்கள். பின்னுக்கு இருந்து வந்து பிடிக்க முடியாது. அடுத்த மாதம் பல களைத்துவிடுவார்கள். அப்பொழுது பார்த்துக் கொள்லாம். --Natkeeran (பேச்சு) 13:36, 17 சூன் 2013 (UTC)
ஆரவாரமான தொடக்கம்!!!! இதே வேகம் வரும் மாதங்களிலும் தொடர்ந்தால் 1200+ கட்டுரைகள் உறுதி. --அராபத் (பேச்சு) 14:16, 24 சூன் 2013 (UTC)
- காலையில் பார்க்கும் பொழுது 24 கட்டுரைகள், தற்பொழுது 28. இப்படி ஒரு நாளைக்கு நாளு கட்டுரைகளையெல்லாம் விரிவாக்கினால் எங்கள் கதி என்னாவது தென்காசியாரே! :-) அடுத்த முறை போட்டி வைப்பவர்கள் ஆறுதல் பரிசாக குச்சிமிட்டாய் ஒன்றையாவது அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்:-)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:55, 24 சூன் 2013 (UTC)
- விருப்பம்--ஆதவன் (பேச்சு) 13:40, 25 சூன் 2013 (UTC)
- ஒருவர் போட்டியில் மிகவும் முந்திச்செல்லும் போது, மற்றவர்களுக்குத் துரத்திப் பிடிக்க ஊக்கம் குறையலாம் என்று தோன்றுகிறது. எனவே, கூடுதல் பரிசுகள் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரை எழுதுவதில் இரண்டாம் இடம் வருபவருக்கு இந்திய ரூ. 500, இருப்பதிலேயே ஆகப் பெரிய கட்டுரையை உருவாக்கியவருக்கு இந்திய ரூபாய் 500 என்று இரு பரிசுகள் வழங்கலாம். வாகையாளர் பட்டத்துக்கு மட்டும் கூடுதல் எண்ணிக்கையில் நிறைய கட்டுரை எழுதி முதற்பரிசு வெல்வோரைக் கணக்கில் கொள்ளலாம். எனினும், கூடுதல் பரிசுத் தொகைக்கான நிதி வளத்தை முதலில் உறுதி செய்ய வேண்டும். பத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான செலவு தொடர்பாக, அடுத்த மாத தொடக்கத்தில் விக்கிமீடியாவிடம் நல்கை விண்ணப்பம் வைக்கும் போது, இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகையாக எவ்வளவு கிடைக்கக்கூடும் என்பதைப் பொருத்தே பரிசுத் தொகையும் எண்ணிக்கையும் உறுதி செய்ய இயலும். நன்றி. --இரவி (பேச்சு) 13:14, 26 சூன் 2013 (UTC)
- ஆம்.நிச்சயம் வழங்க வேண்டும்.மேலும் சில காலம் களித்துச் சேருபவர்கள் என்னால் முடியாது என நிறுத்திவிடலாம்.ஆகையால் வழங்கலாம்.
விருப்பம்--ஆதவன் (பேச்சு) 14:20, 26 சூன் 2013 (UTC)
- மிக்க நன்றி இரவி அவர்களே, நான் சும்மா விளையாட்டுக்காக சொன்னதைக் கூட பெரியதாக எடுத்து திட்டமிடுவது வியப்பளிக்கிறது. தாங்கள் கூறிய இரு பரிசுகளும் மிகவும் தேவையானதே. அத்துடன் பன்னிரு மாதங்களிலும் கூடுதல் கட்டுரைகள் எழுதுபவரையும் (அவர் வாகையாளர் பட்டத்தினை சூடாத பட்சத்தில்) சிறப்பிக்கலாம். அறிமுகம் இல்லாத துறைகளில் கட்டுரை எழுத நேரம் மிகவும் விரையமாவதால் நான் நிறுத்திவிட்டேன். பங்களிப்பே பெரும் பாக்கியம். :-)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:46, 26 சூன் 2013 (UTC)
- விருப்பம் தெரிவித்தமைக்காக ஆதவன் நன்றிங்க ஆதவன். என்னாச்சுங்க தென்காசியாரை முன்னே செல்ல விட்டுவிட்டிங்க?. விரட்டிப் பிடிங்க 9 கட்டுரை என்பதெல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டா?--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:52, 26 சூன் 2013 (UTC)
+1 எனக்கும் அதுதான் விருப்பம். ஆனால் ஆதவனுக்கு பள்ளிப்படிப்பையும் கவனிக்க வேண்டும். நான் பெரும்பாலும் இணையத்தில் இருப்பதால். எனக்கு இந்த வேலை எளிது.
நிற்க.
ஆனால் இந்நிலை இந்த மாதம் மட்டும் தான். வரும் மாதம் எனக்கு வேளைப்பளு அதிகரிக்கும். அடுத்த மாதம் 30 பேர் பங்களிப்பார்கள். அதனால் அடுத்த மாதம் வெகு கடினமாக இருக்கும் போட்டி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:15, 26 சூன் 2013 (UTC) விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:58, 28 சூன் 2013 (UTC)
- என்னதான் இருந்தாலும் தென்காசி சுப்பிரமணியன் தலைக்கவசம் அணிந்திருக்கிறார் போல் உள்ளதே ?????? :). ஆம் பள்ளிப்படிப்பையும் கவனித்தால் மிகக் கடினம் தான். அதிலும் இதர வகுப்புக்களும் அதிகம்.இறுதி நேரத்தில் என்னோர் தொல்லையும் வந்ததால் போட்டியுடன் போட்டி போட்டு தோற்க வேண்டியதாயிற்று.இப்போ தென்காசியாரைப்போல் விட்டத்தைப் பார்த்து வெறித்தபடியுள்ளேன். -- :) # நி $ ஆதவன் # ( உரையாட ) 15:41, 28 சூன் 2013 (UTC)
விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:58, 28 சூன் 2013 (UTC)
முடிவுகளுக்கான இறுதி மணித்துளி
தொகு(UTC நேரம்) 30 சூன் இரவு 11.59 நிமிடம் 59 நொடிக்கு முன்பு விரிவாக்கப்பட்டு இப்பக்கத்தில் பதியப்படும் கட்டுரைகள் போட்டி முடிவுக்கு கணக்கில் கொள்ளப்படும். ஒவ்வொரு மாதத்தில் கடைசி நாளிலும் இதே வரையறை பொருந்தும்.--இரவி (பேச்சு) 15:33, 29 சூன் 2013 (UTC)
உசாத்துணைகள்
தொகுஉசாத்துணைகளை இணைப்பதை இறுதியில் செய்ய வேண்டும் என்பதைத் தளர்த்த வேண்டுகிறேன். அவ்வப்போது இணைத்துவிட்டால் எதுவும் விடுபடாமல் சேர்க்க முடியும். தவிர, சில வேளைகளில் வெட்டி ஒட்டாமல் மெனக்கிட்டு உசாத்துணைகளைச் சேர்க்கவும் செய்கிறோமல்லவா? -- சுந்தர் \பேச்சு 15:58, 2 சூலை 2013 (UTC)
- சுந்தர், கட்டுரையின் ஊடே வரும் மேற்கோள்களைச் சேர்ப்பதில் பிரச்சினை இல்லை. கட்டுரை இறுதியில் வரும் further reading என்பதையே உசாத்துணைகள் என்று குறிப்பிட்டேன். தமிழ் விக்கிப்பீடியாவின் சில கட்டுரைகளில் மேற்கோள் பகுதி தனியாகவும் உசாத்துணைப் பகுதி தனியாகவும் வருகிறது.--இரவி (பேச்சு) 17:37, 2 சூலை 2013 (UTC)
- ஓ, அப்படியா, சரி. மேற்கோளை உசாத்துணையையும் குழப்பிக் கொண்டேன். -- சுந்தர் \பேச்சு 03:32, 3 சூலை 2013 (UTC)
அடடா!! நானும் சுந்தரைப் போலவே குழப்பிக் கொண்டேன். --அராபத் (பேச்சு) 04:20, 3 சூலை 2013 (UTC)