விக்டோரியா நினைவு மண்டபம்

இந்திய நினைவுச் சின்னம்

விக்டோரியா நினைவு மண்டபம் (Victoria Memorial Hall) இந்தியாவின் அரியானா மாநிலம் கர்னால் நகரில் அமைந்துள்ளது. இது இந்தியா பழைய தேசிய நெடுஞ்சாலை 1, கர்னாலில் உள்ள நகரத்தின் கமிட்டி சந்தைக்கு அருகே அமைந்துள்ளது. இந்த நினைவுச்சின்னம் கர்னால் நகரத்தின் பிரதான சந்தை பகுதியில் அமைந்துள்ளது. விக்டோரியா நினைவு மண்டபம் அரியானாவின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறையால் "மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்" என்று பட்டியலிடப்பட்டுள்ளது.[1] ..

விக்டோரியா நினைவு மண்டபம்
அமைவிடம்ஜி.டி. சாலை, கர்னால், அரியானா -132001
நாடுஇந்தியா
வரலாறு
நிறுவப்பட்டது1906
நிருவாகம்
Districtகர்னால்

வரலாறு.

தொகு

விக்டோரியா நினைவு மண்டபம் ஒரு வரலாற்று காலனித்துவ கட்டிடமாகும். கிபி 19 ஆம் நூற்றாண்டில் (1906) விக்டோரியா மகாராணி கர்னாலுக்கு வருகை தந்தபோது கட்டப்பட்டது. 1948 ஆம் ஆண்டில் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெற்ற முதல் இரங்கல் கூட்டத்தின் காரணமாக விக்டோரியா நினைவு மண்டபம் என்ற பெயர் காந்தி நினைவு மண்டபம் என்று மாற்றப்பட்டது.[2][3]

கட்டிடக்கலை

தொகு

விக்டோரியா நினைவு மண்டபம் இந்தோ-பிரித்தானிய கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த மண்டபம் இந்திய, இசுலாமிய மற்றும் ஐரோப்பிய ஆகிய மூன்று கட்டிடக்கலை பாணிகளின் சிறந்த கலவையைக் கொண்ட ஒரு தனித்துவமான நினைவுச்சின்னமாகும். இந்த நினைவுச்சின்னம் தூண்கள் கொண்ட வராண்டாவால் சூழப்பட்டுள்ளது. வராண்டாவின் வளைவுகள் இசுலாமிய கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். கட்டடத்தின் அனைத்து பக்கங்களிலும் தூண்கள் கொண்ட வராண்டாவுக்கு வெளியே நான்கு நுழைவாயில்கள் உள்ளன. இருப்பினும், இது ஒரு மாடி கட்டடம், ஆனால் வெளியில் இருந்து இரட்டை மாடி கட்டமைப்பைப் போல தோற்றமளிக்கும்.[4]

நிர்வாகம்

தொகு

பராமரிப்பு சரியாக இல்லாததால், புறக்கணிப்பு காரணமாக கட்டடம் மெதுவாக இடிந்து விழுவதால், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் கட்டிடத்தின் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டில் மாநில அரசைக் கேட்டுக்கொண்டது. இந்திய தொல்லியல் துறை ஒரு சுற்றுச் சுவர் மற்றும் நுழைவாயிலைக் கட்டியது. பழைய கட்டிடத்தில் இருந்த முக்கியமான கலைப்பொருட்கள் அகற்றப்பட்டு அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்பட்டன.[5]

விக்டோரியா நினைவு மண்டபம் கர்னாலில் உருவாக்கப்படவுள்ள பாரம்பரிய நடைபாதையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் இந்த கட்டமைப்பின் பாரம்பரிய மதிப்பை புதுப்பிப்பதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டு வருகிறது.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "State Protected Sites/Monuments | Directorate of Archaeology & Museums, Government of Haryana". archaeologyharyana.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
  2. "HC directs state govt to restore Victoria Memorial Hall in Karnal". Hindustan Times (in ஆங்கிலம்). 2013-07-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
  3. "Court directs state govt to restore Victoria Memorial Hall in Karnal". Hindustan Times (Amritsar). 4 Jul 2013. பார்க்கப்பட்ட நாள் 2023-03-30 – via PressReader.
  4. "VICTORIA MEMORIAL HALL, KARNAL" (PDF). archaeologyharyana.
  5. Service, Tribune News. "State-protected 109-year-old Karnal building awaits restoration". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
  6. "Heritage corridor to be developed in Karnal". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-12-05. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
  7. "सौंदर्यीकरण: महारानी विक्टाेरिया मेमोरियल हाॅल को मिलेगा नया लुक, पुरातत्व विभाग अधिकारी व डीसी एवं स्मार्ट सिटी के सीईओ ने किया विमर्श". Dainik Bhaskar (in இந்தி). 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.