விக்டோரியா நிறுவனம் (கல்லூரி)
விக்டோரியா நிறுவனம்(கல்லூரி) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதும் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுமான பழமையான இளங்கலை மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும்.[1]
பூர்வீக பெண்கள் சாதாரண மற்றும் வயது வந்தோர் பள்ளி | |
விக்டோரியா நிறுவனத்தின் (கல்லூரி) முகப்பு | |
வகை | இளங்கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1932 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தலைவர் | திரு விவேக் குப்தா |
முதல்வர் | முனைவர் மைத்ரேயி ராய் காஞ்சிலால் |
அமைவிடம் | 78 B, ஆச்சார்யா பிரபுல்லா சந்திரா சாலை, பைதக்கானா , , , 700009 , 22°34′29″N 88°22′20″E / 22.5747°N 88.3723°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
படிமம்:Victoria Institution.jpg | |
கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும், முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை உணர்வை அவர்களிடம் வளர்ப்பதும் இக்கல்லூரியின் நோக்கமாகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட சீரான பாடத்திட்டம் மூலம் பட்டப்படிப்போடு, கூடுதல் படிப்புகள் மற்றும் சான்றிதழ் திட்டங்களும் இக்கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகிறது.
துறைகள்
தொகுஅறிவியல் பிரிவு
தொகு- வேதியியல்
- கணிதம்
- உளவியல்
- இயற்பியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- புவியியல்
- பொருளாதாரம்
கலை மற்றும் வணிகப்பிரிவு
தொகு- வங்காளம்
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- உருது
- வரலாறு
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- வணிகம்
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரிவு 2 எஃப் மற்றும் 12 பி இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [2]. 2016 ஆண்டில், இது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையால் (என்ஏஏசி) பி+ தரத்தை பெற்று அங்கீகாரமடைந்தது.[3]
மேலும் காண்க
தொகு- கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
- இந்தியாவில் கல்வி
- மேற்கு வங்காளத்தில் கல்வி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Affiliated College of University of Calcutta". Archived from the original on 18 February 2012. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
- ↑ Colleges in West Bengal, University Grants Commission
- ↑ "தரமதிப்பிடு சான்றிதழ்".