விக்ரம் நாத்

விக்ரம் நாத் (Vikram Nath)(பிறப்பு 24 செப்டம்பர் 1962) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி[1][2] மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இவர், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் மத்திய அரசு இந்தப் பரிந்துரையினை ஏற்கவில்லை.[3] 2020-ல் கோவிட்-19 பெருந்தொற்றின் போது யூடியூப்பில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பிய இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இவர் ஆவார்.

விக்ரம் நாத்
Vikram Nath
Judge of the இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 ஆகத்து 2021
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தலைமை நீதிபதி-குஜராத் உயர் நீதிமன்றம்
பதவியில்
10 செப்டம்பர் 2019 – 30 ஆகத்து 2021
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில்
24 செப்டம்பர் 2004 – 9 செப்டம்பர் 2019
பரிந்துரைப்புஇரமேஷ் சந்திர லகோதி
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 செப்டம்பர் 1962 (1962-09-24) (அகவை 61)
கௌசாம்பி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
துணைவர்சங்கிதா சிறிவசுதாவா
பிள்ளைகள்விசுவேசு நாத் & வரத் நாத்

விக்ரம் நாத், 31 ஆகத்து 2021 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பதவி மூப்பு மரபு பின்பற்றப்பட்டால், இவர் இந்தியாவின் 54வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார்.

இளமை தொகு

விக்ரம் நாத் உத்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது தந்தைவழி வம்சாவளியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சட்டத்தை ஒரு பாடமாகப் படித்தார். தற்போது 4வது தலைமுறையாக இருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.

நீதிபதியாக தொகு

சட்டப்படிப்பினை முடித்த பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 17 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 24 செப்டம்பர் 2004 அன்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். இவர் 10 செப்டம்பர் 2019 அன்று குசராத்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

இவர் 26 ஆகத்து 2021 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டு, 31 ஆகத்து 2021 அன்று பதவியேற்றார். நீதிபதி சூர்ய காந்த் ஓய்வு பெற்ற பிறகு, 2027ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Singh, Ajmer (2019-08-31). "Collegium clears Vikram Nath's name for Gujarat High Court Chief Justice". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/collegium-clears-vikram-naths-name-for-gujarat-high-court-chief-justice/articleshow/70918769.cms. 
  2. "Orders of appointment of Shri Justice Vikram Nath, Judge of Allahabad High Court, to be CJ of Gujarat High Court (08.09.2019)" (PDF). 8 September 2019. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.
  3. Emmanuel, Meera (10 April 2019). "Collegium recommends Justice Vikram Nath as First Chief Justice of Andhra Pradesh HC". https://www.barandbench.com. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_நாத்&oldid=3811279" இலிருந்து மீள்விக்கப்பட்டது